ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்ஷியல் தலைமை செயல் அதிகாரி ராஜினாமாஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்ஷியல் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா ... தமிழகத்தில், ‘யமஹா மியூசிக்’ 2019ல் தயாரிப்பு துவக்கம் தமிழகத்தில், ‘யமஹா மியூசிக்’ 2019ல் தயாரிப்பு துவக்கம் ...
நிறுவன இயக்குனர்களுக்கு, ‘கெடு’ நீட்டிப்பு : ரூ.500 செலுத்தி அக்., 6க்குள் கே.ஒய்.சி., அளிக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
03:10

புதுடில்லி: நிறு­வ­னங்­களில் இயக்­கு­ன­ராக உள்­ளோர், கே.ஒய்.சி., எனப்­படும், தன் விப­ரக் குறிப்பு படி­வத்தை பூர்த்தி செய்து அளிப்­ப­தற்­கான, ‘கெடு’ அக்., 6 வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக, மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. மேலும், இந்த படி­வத்­து­டன் அளிக்க வேண்­டிய பதி­வுக் கட்­ட­ண­மும், 5,000 ரூபா­யில் இருந்து, 500 ரூபா­யாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.போலி நிறு­வ­னங்­களை களை­யெ­டுக்­கும் நட­வ­டிக்­கை­யு­டன், பெய­ர­ள­வில் இயங்­கும் போலி இயக்­கு­னர்­க­ளை­யும் அடை­யா­ளம் காணும் முயற்­சி­யில், மத்­திய அரசு ஈடு­பட்­டுள்­ளது.இதற்­காக, பதிவு செய்த அனைத்து நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­னர்­களும், கே.ஒய்.சி., படி­வத்தை சமர்ப்­பிக்க வேண்­டும் என, தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.
அடையாள எண் /: மத்­திய நிறு­வன பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் பதிவு செய்­யும் நிறு­வ­னத்­தின் இயக்­கு­னர்­க­ளுக்கு, டி.ஐ.என்., எனப்­படும், இயக்­கு­னர் அடை­யாள எண் வழங்­கப்ப­டு­கிறது.இந்த சான்று இல்­லா­தோர், எந்­த­வொரு பதிவு பெற்ற நிறு­வ­னத்­தின் இயக்­கு­னர் குழு­வி­லும், இயக்­கு­ன­ராக பொறுப்­பேற்க முடி­யாது.இந்­நி­லை­யில், ‘பதிவு பெற்ற நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­னர்­கள் அனை­வ­ரும், கே.ஒய்.சி., படி­வத்தை பூர்த்தி செய்து, 5,000 ரூபாய் கட்­ட­ணத்­து­டன், செப்., 15க்குள் சமர்ப்­பிக்க வேண்­டும்’ என, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம், கடந்த ஜூன் மாதம் அறி­வித்­தது.ஆனால், 33 லட்­சம் இயக்­கு­னர்­களில், 12.15 லட்­சம் பேர் தான், தன் விப­ரக் குறிப்பு படி­வத்தை, கெடு­வுக்­குள் அளித்­துள்­ள­னர்.முடக்கம்இதை­ய­டுத்து, கே.ஒய்.சி., வழங்­காத இயக்­கு­னர்­க­ளின் அடை­யாள எண்ணை, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம் முடக்­கி­யது. இத­னால், கே.ஒய்.சி., தரா­தோர், தொடர்ந்து இயக்­கு­னர்­க­ளாக நீடிக்க முடி­யாத சூழல் உரு­வா­னது.இந்­நி­லை­யில், ‘இயக்­கு­னர்­கள், தன் விப­ரக் குறிப்பு படி­வத்தை அளிப்­ப­தற்­கான அவ­கா­சத்தை நீட்­டிக்க வேண்­டும்; அத்­து­டன், பதி­வுக் கட்­ட­ணத்­தை­யும் குறைக்க வேண்­டும்’ என, இந்­திய நிறு­வன செய­லர்­கள் மையம், மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கத்தை கேட்­டுக் கொண்­டது.அதை ஏற்று, ‘கே.ஒய்.சி., படி­வத்தை அளிப்­ப­தற்­கான கெடு, அக்., 6 வரை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது; அத்­து­டன், பதி­வுக் கட்­ட­ணம், 500 ரூபா­யாக குறைக்­கப்­பட்­டுள்­ளது’ என, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம் அறி­வித்­துள்­ளது.இதே தொகைக்கு, இயக்­கு­னர்­கள் தங்­க­ளின் முடக்­கப்­பட்ட அடை­யாள எண்ணை, கெடு காலத்­திற்­குள் மீண்­டும் புதுப்­பித்­துக் கொள்­ள­லாம்; தவ­று­வோர், 5,000 ரூபாய் செலுத்­தி­னால் மட்­டுமே புதுப்­பிக்க முடி­யும் என­வும், தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.பயன்­ப­டுத்­தி கொள்ள வேண்­டும்மத்­திய அரசு, கே.ஒய்.சி., நடை­மு­றைக்கு கூடு­தல் அவ­கா­சம் அளித்­தி­ருப்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது. மேலும், நம் கோரிக்­கையை ஏற்று, பதிவு கட்­ட­ண­மும் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வாய்ப்பை, இயக்­கு­னர்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். உட­ன­டி­யாக, தன் விபர படி­வத்தை பூர்த்தி செய்து சமர்ப்­பிக்க வேண்­டும்.மகரந்த் லீலீ தலைவர், இந்திய நிறுவன செயலர்கள் மையம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)