சேதமான நோட்டை மாற்றும் வழிசேதமான நோட்டை மாற்றும் வழி ... முட்டை விலை 335 காசாக நிர்ணயம் முட்டை விலை 335 காசாக நிர்ணயம் ...
ரூபாய் மதிப்பு சரி­வின் தாக்­க­மும், சமா­ளிக்­கும் வழி­களும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
23:47

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்திருப்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதை சமாளிக்கும் வழிகள்.

பல்­வேறு கார­ணங்­க­ளால், இந்திய ரூபாய் மதிப்பு, அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ராக வீழ்ச்சி அடைந்து வரு­கிறது. அண்­மை­யில், ரூபாய் மதிப்பு இது­வரை இல்­லாத அளவு, 72.97ஆக ஆனது. ஓராண்­டுக்கு முன் டால­ருக்கு எதி­ராக இந்­திய ரூபாய், 64.14 ஆக இருந்­தது. ஓராண்­டில், 13 சத­வீ­தம் வீழ்ச்சி அடைந்­துள்­ளது. ரூபாய் மதிப்பு பொரு­ளா­தார நோக்­கி­லும், ஏற்­று­மதி நோக்­கி­லும் பல்­வேறு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. இவை மட்­டும் அல்­லா­மல், சரா­சரி மக்­கள் மீதும், இது பல­வி­தங்­களில் தாக்­கம் செலுத்­து­கிறது.

கல்வி செலவு :
நேர­டி­யா­க­வும், மறை­மு­க­மா­க­வும் ரூபாய் மதிப்பு செலுத்­தும் தாக்­கம் கார­ண­மாக, அன்­றாட பட்­ஜெட்­டி­லும் பாதிப்பு ஏற்­ப­ட­லாம். இந்த தாக்­கத்தை அறிந்­தி­ருப்­ப­தோடு, இவற்றை சமா­ளிப்­ப­தற்­கான வழி­க­ளை­யும் அறிந்­தி­ருக்க வேண்­டும். இந்­திய மாண­வர்­களில் பலர், வெளி­நா­டு­களில் கல்வி கற்­கும் ஆர்­வம் கொண்­ட­வர்­கள். அதி­லும் கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான இந்­திய மாண­வர்­கள், அமெ­ரிக்­கா­வில் கல்வி பயில்­கின்­ற­னர். பெரும்­பா­லான பெற்­றோர்­ வெளி­நாட்டு கல்வி செலவை முன்­கூட்­டியே திட்­ட­மிட்­டா­லும், டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு சரிந்­தி­ருப்­பது, செல­வு­களை கணி­ச­மாக அதி­க­ரிக்­கும் என, கரு­தப்­ப­டு­கிறது.

ஏற்­க­னவே அமெ­ரிக்கா சென்­று உள்ள மாண­வர்­கள், செலவு அதி­க­ரிப்பை சமா­ளிக்க வழி தேடு­வ­தோடு, அங்கு செல்ல திட்­ட­மிட்­டுள்­ளோர் ரூபாய் மதிப்பு போக்கை மன­தில் கொண்டு, அதற்­கேற்ப திட்­ட­மிட வேண்­டும். சர்­வ­தேச முத­லீ­டு­களில் பரீட்­ச­யம் உள்­ள­வர்­கள், இந்த நிலையை சமா­ளிக்க, சர்­வ­தேச நிதி­களில் முத­லீடு செய்­யும் வாய்ப்­பை­யும் பரி­சீ­லிக்­க­லாம். வெளி­நாட்டு கல்வி போலவே, ரூபா­யின் மதிப்பு வெளி­நாட்டு சுற்றுலா பய­ணங்­க­ளின் செல­வை­யும் அதி­க­ரி­க்கச் ­செய்­யும்.

இதன் கார­ண­மாக பலர், தங்­கள் பயண திட்­டங்­களை ரத்து செய்­துள்­ள­னர் அல்­லது தள்ளி வைக்க திட்­ட­மிட்­டுள்­ள­னர் என, தெரிய வந்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்கு சுற்­றுலா செல்­ப­வர்­க­ளுக்கு அதி­க­ரிக்­கும் செலவை சமா­ளிக்க, ஷாப்­பிங், பொழு­து­போக்கு உள்­ளிட்­ட­வற்றை, குறைத்­துக்­கொள்ள நேரிடும். வெளி­நாட்­டுக்கு செல்ல விரும்­பு­வோர், இந்­திய ரூபாய் மதிப்பு அதி­க­மாக உள்ள நாடு­க­ளுக்கு சுற்­றுலா செல்­லும் வாய்ப்பை பரி­சீலிக்­க­லாம் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

பண­வீக்­கம் :
ரூபாய் மதிப்பு பெட்­ரோல், டீசல் விலை­யில் ஏற்­க­னவே கணி­ச­மாக தாக்­கம் செலுத்­தி­யுள்­ளது. சொந்­த­மாக வாக­னம் வைத்­தி­ருப்­ப­வர்­கள், மாதாந்­திர பட்­ஜெட்டை இது பாதிக்கவே செய்­யும். போக்­கு­வ­ரத்து செலவு தவிர்க்க இய­லா­தது என்­ப­தால், இதை சமா­ளிக்க வேறு வழி­களில் திட்­ட­மிட வேண்­டும். எரி­பொ­ருள் விலை­யேற்றம் விவ­சாய பொருட்­கள் மற்­றும் உற்­பத்தி பொருட்­க­ளின் விலை­யை­யும் அதி­க­ரிக்­கச்­செய்­யும் என்­ப­தால், மளிகை சாமான் உள்­ளிட்­ட­வற்­றின் செலவு அதி­க­ரிக்­கும். இதற்­கேற்ப திட்­ட­மி­டு­வது நல்­லது.

ரூபாய் மதிப்பு வட்டி விகி­தத்­தை­யும் உய­ரச்­செய்­துள்­ளது. கட­னுக்­கான வட்டி விகி­தம் உய­ரும் சூழலில், மாதத்­த­வ­ணை­யும் உய­ரும். வட்டி விகி­தம் மேலும் உயர வாய்ப்­புள்ள சூழ­லில், பத்­தி­ரங்­க­ளுக்­கான பலன் குறைந்து, கடன்­சார் நிதி­கள் அளிக்கும் பல­னும் குறை­ய­லாம். எனவே, முத­லீடு நோக்­கில் தேவை­யான மாற்­றங்­களை மேற்­கொள்­வது அவ­சி­யம். நீண்ட கால நோக்­கில், சம­பங்கு முத­லீடு மற்­றும் நாணய நோக்­கில் தங்­கத்­தில் முத­லீ­டும் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கிறது. ஆனால், மற்ற அடிப்­படை அம்­சங்­களை­யும் கவ­னிக்க வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)