ஐ.எல். அண்டு எப்.எஸ்.,  எல்.ஐ.சி., உறுதிஐ.எல். அண்டு எப்.எஸ்., எல்.ஐ.சி., உறுதி ... அதிகரிக்கும் காகித விலை: அட்டை பெட்டி உற்பத்தியாளர் கவலை அதிகரிக்கும் காகித விலை: அட்டை பெட்டி உற்பத்தியாளர் கவலை ...
இந்தியா – பாக்., வர்த்தகம் சுமுகமாக இல்லை; உலக வங்கி ஆய்வறிக்கை வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2018
23:48

இஸ்லாமாபாத் : ‘இந்­தியா – பாகிஸ்­தான் இடையே, 3,700 கோடி டாலர் அள­விற்கு பரஸ்­பர வர்த்­தக வாய்ப்பு இருந்­தும், அர­சி­யல் கார­ணங்­க­ளால், முழு­மை­யாக பயன்­ப­டுத்­திக் கொள்ள முடி­ய­வில்லை’ என, உலக வங்கி அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது: இந்­தியா – பாகிஸ்­தான் இடையே இயல்­பான வர்த்­தக உறவு இல்­லா­த­தால், தெற்­கா­சிய பிராந்­தி­யத்­தில், உயர் மதிப்­புள்ள வர்த்­த­கப் பிரி­வின் வளர்ச்சி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தியா, 1996ல், ‘வர்த்­த­கத்­திற்கு மிக­வும் விருப்­ப­மான தேசம்’ என்ற அந்­தஸ்தை, பாகிஸ்­தா­னுக்கு வழங்­கி­யது. ஆனால், பாகிஸ்­தான் இந்த அந்­தஸ்தை, இந்­தி­யா­வுக்கு இன்­னும் வழங்­கா­மல் உள்­ளது.

இந்த அந்­தஸ்து பெற்ற நாடு­கள், ‘சாப்டா’ எனப்­படும், தெற்­கா­சிய தாராள வர்த்­த­கப் பகுதி நாடு­களில் இருந்து வரி விலக்­கற்ற பொருட்­களை, குறைந்த வரி­யில் இறக்­கு­மதி செய்­ய­லாம். அதே­ச­ம­யம், இந்­தியா உள்­ளிட்ட, தெற்­கா­சிய தாராள வர்த்­த­கப் பகுதி நாடு­களில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும், 936 பொருட்­க­ளுக்கு, பாகிஸ்­தான், 17.9 சத­வீத வரி விதிக்­கிறது.

இந்­தியா, பாகிஸ்­தா­னில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும், 64 பொருட்­க­ளுக்கு, 11.7 சத­வீத வரி விதிக்­கிறது. பாகிஸ்­தான், 1,209 இந்­தி­யப் பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு, தடை விதித்­துள்­ளது. இத­னால், இப்­பொ­ருட்­கள், ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ் போன்ற மூன்­றா­வது நாடு­கள் வழி­யாக, பாகிஸ்­தா­னிற்கு செல்­கின்றன.

மேலும், துறை­மு­கம் மற்­றும் அடாரி – வாகா தரை­வழி சரக்கு போக்­கு­வ­ரத்­தி­லும், இந்­தியா – பாகிஸ்­தான் இடையே, பரஸ்­பர கட்­டுப்­பா­டு­கள் உள்ளன. இத்­து­டன், இரு நாடு­களில் நில­வும் விசா கட்­டுப்­பாடு, அர­சி­யல் பதற்­றம், சுமுக­மற்ற வர்த்­தக சூழல் போன்­றவை, தெற்­கா­சிய பிராந்­திய வர்த்­தக கூட்­டு­றவு வலுப்­பெற தடை கற்­க­ளாக உள்ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)