பதிவு செய்த நாள்
16 அக்2018
23:40
புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம், ஜூலை – செப்., வரையிலான காலாண்டில், 10.3 சதவீதம் உயர்ந்து, 4,110 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 3,726 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், வருவாய், 17.3 சதவீதம் அதிகரித்து, 17,567 கோடியில் இருந்து, 20,609 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக் கூறியதாவது: மதிப்பீட்டு காலாண்டில், 200 கோடி டாலர் மதிப்பிற்கு மிகப் பெரிய ஒப்பந்தங்கள் கிடைத்தன. அனைத்து வணிகப் பிரிவுகளின் வளர்ச்சியும் நன்கு உள்ளது. மொத்த வருவாயில், மின்னணு பிரிவின் வருவாய், 31 சதவீதம் வளர்ச்சி கண்டு, 90.50 கோடி டாலராக அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் திறன் காரணமாக, இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி, 6- – 8 சதவீதமாக இருக்கும் என்ற மதிப்பீட்டில் மாற்றமில்லை. நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, ராஜிவ் பன்சாலுக்கு, 12.17 கோடி ரூபாய் ஊதிய நிலுவை வழங்கப்படும். நிறுவனம், பங்கு ஒன்றுக்கு, 7 ரூபாய் இடைக்கால டிவிடெண்டு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|