இன்போசிஸ் ரூ.4,110 கோடி லாபம் ஈட்டியதுஇன்போசிஸ் ரூ.4,110 கோடி லாபம் ஈட்டியது ... சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு; நிதி நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு; நிதி நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை ...
தினமும் 40 லட்சம் மீட்டர் துணி தயாரிப்பு பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2018
23:42

ஈரோடு : பீஹார் தொழி­லா­ளர்­கள் வெளி­யேற்­றத்­தால், குஜ­ராத்­தில் டையிங், பிரின்­டிங் பணி நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இத­னால் ஈரோட்­டில் தின­மும், 40 லட்­சம் மீட்­டர் வரை துணி தயா­ரிப்பு பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஈரோடு மாவட்­டத்­தில், 50 ஆயி­ரம் விசைத்­த­றி­கள் உள்­ளன. இதில், 20 ஆயி­ரம் விசைத்­த­றி­களில், இல­வச வேட்டி, சேலை, சீருடை துணி­கள், பிற தேவைக்­கான துணி­கள் நெச­வா­கும். மீதி, 30 ஆயி­ரம் விசைத்­த­றி­களில், ரேயான் கிரே துணி­கள், ‘காட்­டன்’ காடா துணி தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. கடந்த சில வாரங்­க­ளாக, குஜ­ராத் மாநி­லத்­தில் பல்­வேறு பிரச்­னை­யால், பீஹார் மாநி­லத்தை சேர்ந்த பிளீச்­சிங், பிரின்­டிங், டையிங் தொழி­லா­ளர்­கள், தங்­கள் சொந்த ஊர்­க­ளுக்கு இடம் பெயர்ந்­த­னர். இத­னால் பல, ‘யூனிட்­டு­கள்’ நிறுத்­தப்­பட்­டன.

இத­னால், ஈரோடு மாவட்­டத்­தில் இருந்து குஜ­ராத் சென்ற துணி­களை, பிரின்­டிங், டையிங் செய்ய முடி­ய­வில்லை. கடந்த ஒரு வாரத்­தில், மூன்று நாட்­கள் விசைத்­தறி ஓட்­டம் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து ஈரோடு விசைத்­தறி உரி­மை­யா­ளர்­கள் சங்க தலை­வர் சுரேஷ், ஒருங்­கி­ணைப்­பா­ளர் கந்­த­வேல் ஆகி­யோர் கூறி­ய­தா­வது: குஜ­ராத்­தில் ஏற்­பட்­டுள்ள பிரச்­னை­யால், தீபா­வளி நேர­மான தற்­போது, புதிய துணி தயா­ரிப்பு நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இத­னால் தற்­கா­லிக விசைத்­தறி நிறுத்­தத்­தால், நேர­டி­யாக, 40 ஆயி­ரம் பேர், மறை­மு­க­மாக, 50 ஆயி­ரம் பேர் வேலை இழந்­துள்­ள­னர்.

மத்­திய, மாநில அர­சு­கள் பரி­சீ­லித்து, ஜவு­ளித் தொழில் தடை­யின்றி செயல்­பட, தீபா­வளி தயா­ரிப்பு பாதிக்­காத வகை­யில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். நுால் விலையை, மாதம் ஒரு முறை உயர்த்த வேண்­டும். தற்­போ­தைய நிலை­யால், புது ஆடை தயா­ரிப்பு, தொழி­லா­ளர்­க­ளுக்கு தீபா­வளி போனஸ் வழங்­கு­வது போன்றவை பாதிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு, அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)