சீன உருக்கு பொருட்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரிசீன உருக்கு பொருட்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி ... இந்தியாவின் முதல் மெய்நிகர் கரன்சி ஏ.டி.எம்., இந்தியாவின் முதல் மெய்நிகர் கரன்சி ஏ.டி.எம்., ...
‘அப்பாடா...’ என இனி மூச்சு விடலாம் : வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் உதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2018
00:49

மும்பை: வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் கிடைப்­ப­தற்­கான கூடு­தல் வாய்ப்­பு­களை, மத்­திய ரிசர்வ் வங்கி உரு­வாக்­கி­யுள்­ளது. இத­னால் இத்­து­றை­யைச் சேர்ந்­த­வர்­கள், ‘அப்­பாடா’ என, மூச்­சு­வி­டத் துவங்­கி­ உள்­ள­னர்.அண்­மைக்­கா­ல­மாக, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் போதிய பணப்­பு­ழக்­கம் இன்றி தடு­மாறி வரு­கின்­றன. அவற்­றால் சந்­தை­யில் இருந்து நிதி திரட்ட முடி­ய­வில்லை என்­ப­தோடு, வங்­கி­களும் இத்­துறை நிறு­வ­னங்­க­ளுக்­குக் கடன் கொடுப்­ப­தில் சுணக்­கம் காட்டி வரு­கின்­றன.இந்­நி­லை­யில், ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள சுற்­ற­றிக்­கை­யின் மூலம், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளுக்­குக் கூடு­தல் கடன் கிடைப்­ப­தற்­கான வழி­மு­றை­களை வகுத்­துத் தந்­துள்­ளது. இது­ தான், இத்­து­றைக்கு ஆக்­ஸி­ஜன் கொடுத்­துள்­ளது.இதன்­மூ­லம், வங்­கி­கள், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்­கு­வ­தற்கு ஓர் உத்­வே­கத்தை அளித்­துள்­ளது.கடந்த இரண்டு ஆண்­டு­களில், வங்கி சாரா நிதி சேவை நிறு­வ­னங்­கள் மிக வேக­மாக வளர்ந்து வந்­தன. அவற்­றுக்கு வங்­கி­க­ளி­ட­மி­ருந்து சுல­ப­மாக கடன் கிடைத்து வந்­ததே, இந்த வளர்ச்­சிக்­குக் கார­ணம். ஆனால், சமீ­பத்­தில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும நிறு­வ­னங்­கள், பொரு­ளா­தா­ரச் சிக்­க­லில் மாட்­டிக்­கொண்­ட­போது, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளுக்­குக் கடன் கொடுப்­ப­தற்கு, வங்­கி­கள் தயக்­கம் காட்­டத் தொடங்­கின. மேலும், இத்­து­றைக்கு கடன்­பத்­திர மியூச்­சு­வல் பண்­டு­களில் இருந்து கிடைத்­து­ வந்த கடன் வச­தி­யும் நின்­று­போய்­விட்­டது.இந்­திய நிதிச் சந்­தை­யில் பணப் புழக்­கத்தை அதி­க­ரிக்க, ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல முயற்­சி­கள் எடுத்­து­ வ­ரு­கிறது. அக்­டோ­பர் மாதத்­தில், 36 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள அர­சுக் கடன் பத்­தி­ரங்­களை வாங்­கிக்­கொள்­கி­றேன் என்று தெரி­வித்­த­தன் மூலம், ரிசர்வ் வங்கி, வங்­கித் துறை­யில் பணப்­பு­ழக்­கத்தை அதி­க­ரித்­துள்­ளது,ஆனால், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளுக்­குக் கிடைத்து வந்த கடன் அள­வில், பெரும் மாறு­தல் எது­வும் ஏற்­ப­ட­வில்லை.மேலும் அவற்­றால், நேர­டி­யாக ரிசர்வ் வங்­கி­யி­ட­மி­ருந்து கடன் பெற­ மு­டி­யாது, ஏனெ­னில், அவை அர­சு கடன் பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்து வைத்­தி­ருக்­க­வில்லை.வங்­கி­க­ளுக்­குக் கூடு­தல்சலு­கை­கள் கொடுப்­ப­தன் மூலம் மட்­டுமே, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்க­ளுக்­குக் கடன் கிடைப்­ப­தற்­கான வாய்ப்பு அதி­க­ரிக்­கும்.மேலும், இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரும் வங்­கி­யான, ஸ்டேட் பாங்க் ஆப் இந்­தியா, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் கொடுத்­துள்ள கடன்­களில், 45 ஆயி­ரம் ­கோடி ரூபாய் அள­வுக்கு தான் வாங்­கிக்கொள்­கி­றேன் என்று உறு­தி­ய­ளித்­துள்­ளது. அது ஏற்­கனவே, 15 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்­குத்­தான் வாங்­கு­வ­தாக திட்­டம் வைத்­தி­ருந்­தது. இப்­போது, கூடு­த­லாக கடன்­களை எடுத்­துக்­கொள்­வ­தன் மூல­மும், வங்­கி­யல்­லாத நிதிச் சேவை நிறு­வ­னங்­களில் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரிக்­கும்.இத்­த­கைய சூழ­லால், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள், நிதி நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து மீளும் வாய்ப்­பு­கள் ஏற்­பட்­டு உள்­ளன.
வீட்­டுக் கட­னும் சிக்­க­லா­கும் : வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளின் தற்­போ­தைய நிதிச் சிக்­கல்­கள் நீடிக்­கும்­பட்­சத்­தில், அது வீட்­டுக் கடன் வழங்­க­லை­யும் பாதிக்­கும். ரியல் எஸ்­டேட் நிறு­வ­னங்­கள், ஏற்­க­னவே வீடு­களை விற்­பனை செய்ய தடு­மா­றும் நிலை­யில், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து கடன் பெறு­வ­தும் அவற்­றுக்கு சிக்­க­லா­கி­வி­டும்.
நோமுரா, நிதி ஆலோசனை நிறுவனம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)