பதிவு செய்த நாள்
12 நவ2018
00:12
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பழக்கம் கொண்டவர்கள், குறிப்பிட்ட சேவைகளுக்கான கோ- பிராண்டட் கிரெடிட் கார்டுகளையும் அறிந்து வைத்திருப்பது பயனுள்ளதாக அமையும்.வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், கிரெடிட் கார்டு நிறுவனங்களுடன் இணைந்து அறிமுகம் செய்யும் கிரெடிட் கார்டுகள் ‘கோ-பிராண்டட்’ கார்டுகள் என, அழைக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு விமான சேவை நிறுவனம் அல்லது மின் வணிக நிறுவனம், வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டை அறிமுகம் செய்யலாம்.இந்த வகை கார்டுகளை குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் சேவைக்காக மட்டுமே பயன்படுத்தலாம். அவை தொடர்பான சலுகைகள் மற்றும் சேவை புள்ளிகளையும் பெறலாம். குறிப்பிட்ட நிறுவன சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு இவை ஏற்றதாக இருக்கும்.
கிரெடிட் கார்டு வாயிலாக பொருட்களை வாங்குபவர்கள், இந்த வகை கிரெடிட் கார்டுகளை பரிசீலிக்கலாம். ஆனால், இந்த கார்டுகளை மற்ற சேவைகளுக்கு பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாறாக, ஒரே நிறுவன அல்லது பிராண்ட் சேவைகளை பயன்படுத்துபவர்கள், இந்த கார்டுகளை நாடுவது ஏற்றதாக இருக்கும்.
இப்போது பல நிறுவனங்கள் ‘கோ பிராண்டட்’ கிரெடிட் கார்டுகளை அறிமுகம் செய்து வருவதால் வாடிக்கையாளர்கள் இவற்றை பரிசீலிக்கலாம்.தங்களுக்கு ஏற்ற கார்டை தேர்வு செய்யும் முன், அதற்கான நுழைவு கட்டணம் போன்றவற்றை கணக்கிட்டு பார்க்க வேண்டும். இந்த கட்டணங்களை எல்லாம் மீறி கார்டு தரும் சலுகை பலன் அளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
சிலருக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட கோபிராண்டட் கார்டுகள் தேவைப்பட்டால். அப்போது கிரெடிட் நிர்வாகம் முக்கிய அம்சமாவதை உணர வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|