பதிவு செய்த நாள்
12 நவ2018
00:13
முதியவர்களுக்கான பென்ஷன் சேவை அளிப்பதில் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முன்னிலை வகிப்பதாக சர்வதேச ஆய்வு தெரிவித்துள்ளது.
சர்வதேச ஆலோசனை நிறுவனமான மெர்சர், பென்ஷன் திட்டங்கள் தொடர்பான மெல்பர்ன் மெர்சர் குளோபல் பென்ஷன் இண்டக்ஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது. 34 நாடுகளில் பென்ஷன் திட்டங்கள் அலசி ஆராயப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் திட்டங்கள், போதுமான தன்மை, நீடித்த தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகிய அம்சங்களில் மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் நெதர்லாந்து, டென்மார்க் முதலிடம் பெற்றுள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான், மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் பின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் சிறந்த பென்ஷன் அமைப்பு இருந்தாலும் இதில் குறைகள் இருப்பதாகவும், இவை திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|