வாகன காப்­பீட்டை புதுப்­பிக்­கும் போது  கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் வாகன காப்­பீட்டை புதுப்­பிக்­கும் போது கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் ...  இன்னும் கட்டுக்கடங்காத காளை இன்னும் கட்டுக்கடங்காத காளை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முத­லீட்­டின் முழு பலனை பெற தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2018
00:19

சரியான முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ள பெரும்பாலானோர் வழக்கமாக செய்யும் மூன்று தவறுகளை தவிர்ப்பது அவசியம்.
முத­லீடு தேர்வு, நிதி மற்­றும் பொரு­ளா­தா­ரம் சார்ந்து மேற்­கொள்­ளப்­பட்­டா­லும், உள­வி­ய­லும் இதில் தொடர்பு கொண்­டி­ருக்­கிறது. அதா­வது, நிதி கார­ணி­களை மட்­டும் அடிப்­ப­டை­யாக கொண்டு முத­லீடு முடி­வு­கள் எடுக்­கப்­ப­டு­வ­தில்லை.

மனம் சார்ந்த விஷ­யங்­களும் இதில் தாக்­கம் செலுத்­து­கின்­றன. இதை பழக்கவழக்­கம் சார்ந்த விஷ­யங்­கள் என குறிப்­பி­டு­கின்­ற­னர். பழக்கவழக்­கம் சார்ந்த சிந்­த­னை­கள் தவிர்க்க இய­லா­தவை என்­றா­லும், பழக்க வழக்­கம் சார்ந்த சார்­புக்கு இலக்­கா­கா­மல் இருப்­பது அவ­சி­யம் என, வல்­லு­னர்­கள் கரு­து­கின்­ற­னர். தின­சரி முடி­வு­க­ளுக்கு இவை ஏற்­ற­தாக அமைந்­தா­லும் நிதி விஷ­யத்­தில் இவை காலை வாரி விடு­ப­வை­யாக இருக்­கின்­றன.

மந்தை அணு­கு­முறை

முறை­யான ஆய்வு மற்­றும் தக­வல்­கள் அடிப்­ப­டை­யில் முடிவு எடுக்­கா­மல், தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுக்க துாண்­டும் விஷ­யங்­களை பழக்க வழக்க சார்பு நிலை என்­கின்­ற­னர். இவை பெரும்­பா­லும் தர்க்­கத்­திற்கு மாறான முடி­வு­களை எடுக்க வைப்­ப­தா­க­வும் கரு­தப்­ப­டு­கிறது. இத்­த­கைய சார்பு நிலை எல்லா முத­லீட்­டா­ளர்­க­ளை­யும் பாதிக்­கிறது. குறிப்­பிட்ட வித­மாக சிந்­தித்து செயல்­ படும் நிலையை இவை உண்­டாக்­கு­வ­தால் பாதிப்பு ஏற்­ப­ட­லாம்.

இந்த வகை­யில் முத­லீட்­டில் தவிர்க்க வேண்­டிய சார்பு நிலை­களை பார்க்­க­லாம்.பெரும்­பா­லான நேரங்­களில் மற்­ற­வர்­கள் செய்­வதை பின்­பற்­று­வது சரி­யாக இருக்­க­லாம். உதா­ர­ண­மாக ஒரு ஓட்­ட­லில் கூட்­டம் அதி­க­மாக இருந்­தால் அங்கு உணவு சுவை­யாக இருப்­ப­தாக கொள்­ள­லாம். அதே போல, சூப்­பர் மார்க்­கெட்­டில் அதிக தள்­ளு­படி தரும் கவுன்டரில் அதிக கூட்­டம் இருக்­க­லாம்.

எனவே மற்­ற­வர்­கள் செய்­வதை நாமும் செய்­தால் பலன் கிடைக்­கும். ஆனால் மற்­ற­வர்­கள் செய்­வதை பின்­பற்றி முத­லீடு முடி­வு­களை மேற்­கொண்­டால் அது தவ­றா­க­வும் அமை­ய­லாம். முத­லீடு என்­பது ஒரு­வ­ரின் நிதி இலக்கு, தேவை, ரிஸ்க் தன்மை, பலன் எதிர்­பார்ப்பு உள்­ளிட்ட பல விஷ­யங்­கள் அடிப்­ப­டை­யில் அமை­கிறது. எனவே, எல்லாரும் செய்­கின்­ற­னர் என, நாமும் ஒரு முடிவை மேற்­கொண்­டால் முத­லீடு நோக்­கில் பலன் தர வாய்ப்­பில்லை. சுய­மாக சிந்­தித்து முடிவு எடுக்க வேண்­டும்.

நிதி சாத­னங்­களை தேர்வு செய்­யும் போது மற்ற விஷ­யங்­க­ளோடு விலை ஒரு முக்­கிய அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கிறது. பல­ரும் தள்­ளு­படி சலுகை அல்­லது குறைந்த விலையை நாடு­கின்­ற­னர். ஒரு சிலர் விலை அல்­லது கட்­ட­ணம் அதி­க­மாக இருந்­தால் சேவை தர­மாக இருக்­கும் என கரு­து­கின்­ற­னர். ஆனால் நிதி சாத­னங்­களை வாங்­கும் போது மதிப்பு மற்­றும் விலை முக்­கிய அம்­சம் அல்ல.

உதா­ர­ண­மாக பங்கு விலை ஏறி இறங்­க­லாம், ஆனால் நீண்ட கால பலனே முக்­கி­யம். எனவே விலையை மட்­டும் பார்க்­கா­மல், வளர்ச்சி வாய்ப்பு, டிவி­டெண்ட், வட்டி விகி­தம் உள்­ளிட்ட அம்­சங்­க­ளின் அடிப்படை­யில் தீர்­மா­னிக்க வேண்­டும்.

மாற்று கருத்து தேவை

பெரும்­பா­லான முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் கருத்­திற்கு ஏற்ற தக­வல்­களையே தேடும் மன­நிலை கொண்­டு உள்­ள­னர். உதா­ர­ண­மாக, ஒரு குறிப்­பிட்ட துறை பங்கு பிர­கா­ச­மா­னது என கரு­தி­னால், அதற்கு வலுசேர்க்­கும் தக­வல்­களை அதி­கம் தேடு­கின்­ற­னர். இப்­படி தங்­க­ளது கருத்­திற்கு ஆத­ரவான தக­வல்­களை நாடி, தங்­கள் நிதி முடி­வு­களை வலுப்­ப­டுத்­திக்­கொள்­ளும் போக்கை உறுதி செய்­யும் சார்பு என்­கின்­ற­னர். இது தவ­றான முடி­வுக்கு அழைத்­துச் ­செல்­ல­லாம்.

இதை தவிர்க்க நம் கருத்­திற்கு எதி­ரான தக­வல்­க­ளை­யும் பரி­சீ­லித்து, தேவை எனில் முத­லீட்டு முடி­வை­யும் மாற்­றிக்­கொள்ள தயா­ராக இருக்க வேண்­டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)