நிதி்ததுறை பங்குகள் என்னவாகும்?நிதி்ததுறை பங்குகள் என்னவாகும்? ...  தவிர்க்க முடியாத தருணங்கள் தவிர்க்க முடியாத தருணங்கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2018
00:25

இந்­திய பங்­குச் சந்­தை­கள், கடந்த வாரம், தொடர்ந்து, இரண்­டா­வது வார­மாக உயர்ந்து வர்த்­த­கம் ஆகின. தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, 6.3 சத­வீ­தம், உயர்ந்து, கடந்த வார வர்த்­தக முடி­வற்­றது.

கடந்த வாரம், புதிய சாம்­வாட் ஆண்டு, 2075 துவ­கி­யது. சாம்­வாட், 2074 ஆண்­டில், நிப்டி, 4 சத­வீ­த­மும் சென்­செக்ஸ், 7 சத­வீ­த­மும் அதி­க­ரித்­தி­ருந்­தது.தொழில்­நுட்­பத் துறை பங்­கான இன்­போ­சிஸ், 2.4 சத­வீ­த­மும், டாடா கன்­சல்­டன்சி நிறு­வ­னம், 1.7 சத­வீ­த­மும், கச்சா எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­ன­மான ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், 1.6 சத­வீ­த­மும் சரிந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆசிய பங்­குச் சந்­தை­கள் கடந்த வெள்­ளி­யன்று சிறி­த­ளவு சரிந்து, வர்த்­த­கம் ஆனது. அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் வட்டி விகி­தக் கூட்­டத்­தின் முடி­வில், வட்டி விகி­தம் உயர்த்­தப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும், டிசம்­பர் மாதம் நடை­பெற உள்ள அடுத்த கூட்­டத்­தில், வட்டி விகி­தம் உயர்த்­தப்­ப­ட­லாம் என்ற கருத்து நில­வு­கிறது.


கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம், ஒரு பேரல், 60 அமெ­ரிக்க டால­ருக்கு கீழே வர்த்­த­கம் ஆனது. இது எண்­ணெய் இறக்­கு­மதி நாடு­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள இறக்­கு­மதி சுமையை குறைக்க உத­வி­யது. மேலும், நம் நாட்­டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை சிறி­த­ளவு முன்­னேற்­றம் காணப்­படும் என்ற கருத்­தி­லும் பங்­குச் சந்­தை­கள் வலுப்­பெற்­றன.

அடுத்து நடை­பெற உள்ள, ஐந்து மாநி­லத் தேர்­தல்­கள் மற்­றும் தேர்­தல் முடி­வு­க­ளைப் பொறுத்­தும், சந்­தை­யின் போக்கு அமை­யும்.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, பொரு­ளா­தார கார­ணி­கள் சில வெளி­வர உள்­ளன. முத­லில், அக்­டோ­பர் மாதத்­திற்­கான நுகர்­வோர் பண­வீக்க விகி­தம் மற்­றும் செப்­டம்­பர் மாதத்­திற்­கான தொழில் துறை வளர்ச்சி விகி­தம் போன்­றவை வெளி­வர உள்­ளன. மேலும், அக்­டோ­பர் மாதத்­திற்­கான, மொத்த விலை பண­வீக்க விகி­தம், வரும் புதன் அன்று வெளி­வர உள்­ளது. இதன் முடி­வு­களும் சந்­தை­யில் ஏற்­றத்­தாழ்­வு­களை ஏற்­ப­டுத்­தும்.

கடந்த வாரம், வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், இந்­திய பங்கு சந்­தை­யில், 157.8 கோடி மதிப்­பி­லான பங்­கு­களை கொள்­மு­தல் செய்­த­தும், உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், 813.42 கோடி ரூபாய் மதிப்­பி­லான பங்­கு­களை கொள்­மு­தல் செய்­த­தும் குறிப்­பி­டத்­தக்­கது.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, நிப்டி ரெசிஸ்­டென்ஸ் 10,660 மற்­றும் 10,710 ஆகும். சப்­போர்ட் 10,430 ஆகும்.
முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)