‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவன பங்குகள் விலை 5 சதவீதம் சரிவு ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவன பங்குகள் விலை 5 சதவீதம் சரிவு ...  ‘மாருதி சுசூகி’ நிறுவனம் கார் விற்பனை மந்தம் ‘மாருதி சுசூகி’ நிறுவனம் கார் விற்பனை மந்தம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மகிந்திரா நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 26 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2018
23:18

சென்னை:மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், 26 சதவீதம் உயர்ந்துள்ளது.


இதுகுறித்து, மகிந்திரா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், 13 ஆயிரத்து, 638 கோடி ரூபாய் வருவாயை நிறுவனம் ஈட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், 12 ஆயிரத்து, 574 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டை விட, 8 சதவீதம் உயர்வு ஆகும்.வரிக்கு பிந்தைய லாபம், 7,779 கோடி ரூபாய் ஈட்டி, 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு 1,441 கோடி ரூபாயாக இருந்தது.


உள்நாட்டில் வாகன விற்பனை, 1.41 லட்சமாக உள்ளது. இது கடந்த ஆண்டு, 1.29 லட்சமாக இருந்தது. உள்நாட்டு டிராக்டர் விற்பனை, 73 ஆயிரமாக உள்ளது.இது, கடந்த ஆண்டு, 76 ஆயிரத்து, 984 ஆக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 5 சதவீதம் பின்தங்கி உள்ளது.நடப்பு ஆண்டில், 13 ஆயிரத்து, 377 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டில், 11 ஆயிரத்து, 755 ஆக இருந்தது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)