ரேமண்ட் நிறுவன தலைவர் சிங்கானியா பதவி விலகல் ரேமண்ட் நிறுவன தலைவர் சிங்கானியா பதவி விலகல் ...  'இனிமேல் விசைத்தறி தொழிலை  கூலி வேலையாக செய்ய வேண்டாம்' 'இனிமேல் விசைத்தறி தொழிலை கூலி வேலையாக செய்ய வேண்டாம்' ...
வர்த்தகம் » ஜவுளி
திருப்பூரில் நிட்டிங் துறையினர் வேலைநிறுத்தம்:ரூ.55 கோடிக்கு துணி உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2018
23:35

திருப்பூர்:கட்டண உயர்வு வழங்க வலியுறுத்தி, திருப்பூர் நிட்டிங் துறையினர், நேற்று முதல், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கினர். இதனால், 55 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி முடங்கியது.


திருப்பூரில், உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு துறைக்கு தேவையான பின்னல் துணி தயாரிக்கும், 1,000 நிட்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன.நிட்டிங் ஊசி விலை, தொழிலாளர் சம்பளம், மின் கட்டணம் உயர்ந்துஉள்ளதால், நிட்டிங் தொழில் அமைப்புகளான, ‘நிட்மா’ மற்றும், ‘சிம்கா’ சங்கங்கள் இணைந்து, மே 1 முதல், கட்டண உயர்வை அறிவித்தன.


துணி உற்பத்தி ரகத்தை பொறுத்து, 20 முதல், 25 சதவீதம் வரை நிட்டிங் கட்டணம் உயர்த்தப் பட்டது.ஏழு மாதங்களாகியும், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங் நிறுவனத்துக்கு கட்டண உயர்வு வழங்கவில்லை. உடனடியாக கட்டண உயர்வு வழங்க வலியுறுத்தி, நிட்மா மற்றும் சிம்கா சங்கங்கள், நேற்று முதல், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளன.


தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்க, ‘சிம்கா’ தலைவர், விவேகானந்தன் கூறுகையில், ‘‘பெரும்பாலான உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், துணி உற்பத்தி கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடிக்கின்றன. ‘‘இதனால், நிட்டிங் நிறுவனங்கள், மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உற்பத்தி நிறுத்த போராட்டத்தால், தினமும், 55 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னல் துணி உற்பத்தி பாதிக்கப்படுகிறது,’’ என்றார்.


இந்நிலையில், ‘நிட்மா’ மற்றும் ‘சிம்கா’ சங்கங்கள் சார்பில், அவசர கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்க உள்ளனர்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
திருப்பூர்:உக்ரைன் -– ரஷ்யா போர் எதிரொலியாக, போலந்து வர்த்தகர்கள் ஆடை தயாரிப்பு ஆர்டர்களை ரத்து செய்து ... மேலும்
business news
திருப்பூர்:திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 71 ஆயிரத்து, 601 கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை : முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ ஜவுளித் துறையை சேர்ந்த ‘திவால்’ நடவடிக்கைக்கு ... மேலும்
business news
திருப்பூர்:‘‘ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை விரைவில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)