ஐ.ஓ.பி., ஊழியர்களுக்கு 18 கோடி பங்குகள் ஒதுக்கீடு ஐ.ஓ.பி., ஊழியர்களுக்கு 18 கோடி பங்குகள் ஒதுக்கீடு ...  ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லைபணவீக்க மதிப்பீட்டை குறைத்தது ரிசர்வ் வங்கி ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லைபணவீக்க மதிப்பீட்டை குறைத்தது ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., உதவி தேவையில்லை’ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா கூறுகிறார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2018
23:37

மும்பை:‘‘பணப் புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி உதவிக் கரம் நீட்ட வேண்டிய அவசியம் இல்லை,’’ என, அவ்வங்கியின் துணை கவர்னர், விரால் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.


ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்திற்கு ஏற்பட்ட, நிதி நெருக்கடியின் தாக்கத்தால், பணப்புழக்கம் குறைந்து, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அதனால், இந்நிறுவனங்களுக்கு உதவும் வகையில், நேற்று, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, புதிய திட்டத்தை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏதும் அறிவிக்கப்படவில்லை.


இதற்கான காரணம் குறித்து, விரல் ஆச்சார்யா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களாக, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப்புழக்க பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதனால், பணப்புழக்க நெருக்கடி குறைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது.ஆகவே, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு உதவுவதற்கு என, தனி திட்டம் தேவையில்லை.


அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்காத பட்சத்தில் தான், கடைசி கட்டமாக, ரிசர்வ் வங்கியின் உதவிக் கரம் நீளும்.வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி கடன் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கடன் வழங்கும் வங்கிகள், பிணையாக பெறும் அரசு கடன் பத்திரங்கள் மூலம், அதிக தொகையை பெறலாம். அதற்கான வரம்பை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளது.


மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட, அனைத்து துறைகளிலும் வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதனால், எந்த துறைக்கும் ரிசர்வ் வங்கியின் தனி உதவி தேவைப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)