மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்: ‘பிட்ச் ரேட்டிங்க்ஸ்’ மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்: ‘பிட்ச் ரேட்டிங்க்ஸ்’ ...  ‘டிவி, ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின் விலை குறையும்:ஜி.எஸ்.டி., கவுன்சில், வரியை குறைக்க திட்டம் ‘டிவி, ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின் விலை குறையும்:ஜி.எஸ்.டி., கவுன்சில், வரியை ... ...
வேகமாக வளரும் நகரங்களில், முதலிடத்தில் இந்தியா:‘ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸ்’ நிறுவனம் ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:42

லண்டன்:‘அடுத்த, 20 ஆண்டுகளில், உலகளவில், வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும், ‘டாப் 10’ நகரங்கள் அனைத்தையும் கொண்ட நாடாக, இந்தியா திகழும்’ என, பிரிட்டனைச் சேர்ந்த, ஆய்வு நிறுவனமான, ‘ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸ்’ தெரிவித்துள்ளது.


இது குறித்து, இந்நிறுவனத்தின் சர்வதேச நகரங்கள் ஆராய்ச்சி பிரிவு தலைவர், ரிச்சர்டுஹோல்ட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:உலகளவில், 2019–35 வரையிலான காலத்தில், வேகமான பொருளாதார வளர்ச்சி காணும் வாய்ப்புள்ள நகரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அடுத்த, 20 ஆண்டுகளில், மிக விரைவான வளர்ச்சி விகிதத்தை கொண்ட, ‘டாப் 10’ நகரங்கள் அனைத்தும், இந்தியாவில் தான் இருக்கும் என, தெரியவந்துள்ளது.


சூரத்


இந்தியாவில், குஜராத்தில் உள்ள சூரத் நகரம், வைரங்களை நறுக்குதல், பட்டை தீட்டுதல் உள்ளிட்ட வர்த்தகத்தில், உலகளவில் தலைசிறந்து விளங்குகிறது. இந்நகரம், மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை காணும்.மதிப்பீட்டு காலத்தில், சூரத் நகரின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


எனினும், உலகளவில் மிகப் பெரிய நகரங்களின் பொருளாதார வலிமையுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள், பின்தங்கியே உள்ளன. அதேசமயம், 2027ல், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களை விட, ஆசிய நகரங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின், வளர்ச்சி வேகம், அதிகமாக இருக்கும் எனலாம்.


சீனா



இது, 2035ல், 17 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். இதில், சீன நகரங்களின் பங்கு, முக்கியமானதாக இருக்கும்.மதிப்பீட்டு காலத்தில், உலகளவில், ‘டாப் 10’ பெரிய நகரங்கள் பட்டியலில், சிறிய மாற்றங்கள் மட்டுமே நிகழும்.அமெரிக்காவின் நியூயார்க் நகரம், முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும். ஜப்பான் தலைநகர், டோக்கியோ, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், பிரிட்டன் தலைநகர், லண்டன் ஆகியவையும், அடுத்த மூன்று இடங்களில், மாற்றமின்றி நீடிக்கும்.


இந்த பட்டியலில், பாரிஸ் மற்றும் சிகாகோ நகரங்களை, சீனாவின், குவாங்ஸூ மற்றும் ஷென்சென் நகரங்கள் பின்னுக்கு தள்ளி முன்னேறும்.பீஜிங், ஷாங்காய் உட்பட, சீனாவின் நான்கு நகரங்கள் பட்டியலில் இடம்பெறும்.ஆப்ரிக்க நகரங்களில், விரைவான பொருளாதார வளர்ச்சி காண்பதில், தான்சானியாவின், துறைமுக நகரமான, தர் இஸ் சலாம் முதலிடம் பிடிக்கும்.ஐரோப்பாவில், அர்மீனியா தலைநகர், ஏரவான் முதலிடத்தில் இருக்கும்.வட அமெரிக்காவில், சிறப்பாக செயல்படும் நகரங்களில், சான் ஜோஸ் முதலிடம் பிடிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
வாஷிங்டன்:‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்தியா, மிக திடமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது,’’ என, பன்னாட்டு ... மேலும்
business news
புதுடில்லி:மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காய்ன்’ விலை, கடும் சரிவை சந்தித்து வருகிறது.கடந்த ஆண்டு இதே ... மேலும்
business news
புதுடில்லி:இந்தாண்டு, ஏப்., – நவ., வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
business news
வீட்­டுக்­க­டன் என்­பது நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், மாதத்­த­வ­ணையை மட்­டும் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கா­மல், ... மேலும்
business news
இந்தி­யா­வில் உள்ள மக்­கள் தொகை­யில், 44 சத­வீ­தத்­தி­னர்மட்­டுமே மருத்­துவ காப்­பீடுபெற்­றி­ருப்­பது தெரிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
sudeesh - coimbatore,India
07-டிச-201815:36:50 IST Report Abuse
sudeesh எலெக்ஷன்வருது... சீக்கிரமா எல்லா ஆய்வு அறிக்கையும் விட்டுடுங்க ... :)
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)