கமாடிட்டி சந்தைகமாடிட்டி சந்தை ... கமாடிட்டி சந்தை கமாடிட்டி சந்தை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2018
23:50

கமாடிட்டி சந்தை: கச்சா எண்ணெய்

இரண்டு மாத தொடர் சரி­வுக்­குப் பிறகு, கடந்த வாரம், கச்சா எண்­ணெய் விலை சரி­வில் இருந்து மீண்டு, உயர்ந்து வர்த்­த­கம் ஆனது.கடந்த வாரம் நடை­பெற்ற, ஒபெக் எனும் எண்­ணெய் உற்­பத்தி நாடு­க­ளின் கூட்­ட­மைப்பு மற்­றும் கூட்­ட­மைப்­பில் இல்­லாத பிற முக்­கிய உற்­பத்தி நாடு­க­ளின் கூட்­ட­மா­னது, வியா­ழன் மற்­றும் வெள்ளி கிழ­மை­களில் நடை­பெற்­றது.


அக்­டோ­பர் மற்­றும் நவம்­பர் மாதத்­தில், கச்சா எண்­ணெய் விலை, ஒரு பேர­லுக்கு, 26 அமெ­ரிக்க டாலர் அள­வுக்கு சரிந்­தது. இத­னால், உற்­பத்தி நாடு­கள் பெரும் பொரு­ளா­தார பாதிப்­புக்கு உள்­ளா­கின. எனவே, விலை சரிவை கட்­டுப்­ப­டுத்த, உற்­பத்­தி குறைப்­பில் ஈடு­பட முடி­வெ­டுத்­த­னர்.


தின­சரி, ஒரு லட்­சத்து 40 ஆயி­ரம் பேரல்­கள் உற்­பத்தி குறைப்பு அமல்­ப­டுத்­தப்­படும் என்று அறி­விப்பு வெளி­யா­னது. இத­னால், சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை உயர்ந்­தது.மேலும், உல­க­ள­வில் மூன்­றா­வது மிகப்­பெ­ரிய எண்­ணெய் உற்­பத்தி நாடான ரஷ்யா, கடந்த வெள்­ளி­யன்று, தின­சரி, 2 லட்­சம் பேரல் உற்­பத்தி குறைப்பு செய்ய தயார் நிலை­யில் உள்­ள­தாக தெரி­வித்­தது. இத­னா­லும் சந்­தை­யில் விலை மள­ம­ள­வென உயர்ந்­தது.


சவுதி அரே­பியா, ரஷ்யா, அமெ­ரிக்கா ஆகிய மூன்று நாடு­க­ளின் மொத்த உற்­பத்தி, ஒட்­டு­மொத்த உல­கின் நுகர்வு தேவை­யில், 60 சத­வீ­தத்தை பூர்த்தி செய்­கிறது. எனவே, இந்­நா­டு­களில் ஏற்­படும் உற்­பத்தி ஏற்­றத் தாழ்­வு­கள், விலையை பாதிக்­கும்.


தங்கம், வெள்ளி


தங்­கம் மற்­றும் வெள்ளி, சில வாரங்­க­ளுக்­குப் பிறகு, கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­கம் ஆனது. ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்­தில் ஏற்­பட்ட உயர்­வுக்கு பிறகு, அதி­கப்­ப­டி­யான வார உயர்வு, கடந்த வாரம் ஏற்­பட்­ட­து­ தான். அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­பட்­டுள்ள சிறிய தொய்வு, இதற்கு ஒரு கார­ண­மா­கும்.


அந்­நாட்­டின் வட்டி விகி­தங்­கள், இம்­மா­தம் மற்­றும் அடுத்த ஆண்­டு­களில் மூன்று முறை உயர்த்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு இருந்­தது. இத­னால், தங்­கம் விலை சரி­வில் இருந்து வந்­தது. தற்­போது ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார மந்த சூழல் கார­ண­மாக, வட்டி விகி­தம் உயர்வு தள்­ளிப் போகும் என்ற கண்­ணோட்­டம் உரு­வா­னது. இத­னால், டால­ரின் விலை சரிந்து, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை உயர்ந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது.


அமெ­ரிக்­கா­வின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 10 ஆண்டு உச்­சத்­தில் உள்­ளது. அக்­டோ­பர் மாதத்­தி­லி­ருந்து இறக்­கு­மதி அதி­க­ரித்­த­தும், ஏற்­று­மதி குறைந்­த­தும் இதற்கு முக்­கிய கார­ணங்­க­ளா­கும்.பொது­வா­கவே தங்­கம், ஆப­ரண தேவை­யைக் காட்­டி­லும், அர­சு மற்­றும் மக்­கள் மத்­தி­யில், முத­லீட்டு தேவைக்­கா­கவே அதி­கம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.


என­வே ­தான், வட்டி விகி­தங்­கள் உய­ரும்­போது, அது விலை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது.
உதா­ர­ண­மாக, வட்டி விகி­தம் உய­ரும்­போது, அரசு சார்ந்த கரு­வூ­லங்­கள் மற்­றும் பத்­தி­ரங்­க­ளின் ஆதா­யம் அதி­க­ரிக்­கும். அப்­போது முத­லீட்­டா­ளர்­கள் தங்­கத்­தின் மீதான முத­லீட்டை குறைத்து, அரசு சார்ந்த துறை­களில் முத­லீடு செய்­வர்.


இதற்கு மாறாக, வட்டி விகி­தம் குறை­யும்­போது, தங்­கம் மற்­றும் அது சார்ந்த பிற முத­லீ­டு­களில் அதி­க­மாக முத­லீடு செய்­வர். என­வே­ தான், வட்டி விகி­தம் குறித்த பேச்­சு­கள், எதிர்­பார்ப்­பு­கள், மாற்­றங்­கள் போன்­றவை சந்­தை­யில் கடு­மை­யான ஏற்ற இறக்­கங்­களை ஏற்­ப­டுத்­து­கிறது.


நடப்பு நிதி­யாண்­டில், இந்­திய ரிசர்வ் வங்கி, 8.6 டன் தங்­கத்தை கொள்­மு­தல் செய்­துள்­ளது. இவ்­வ­ளவு அதி­க­மாக வாங்­கு­வது, ஒன்பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன், 2009ம் ஆண்­டில், பன்­னாட்டு நிதி­யத்­தி­ட­மி­ருந்து, 200 டன் கொள்­மு­தல் செய்­தி­ருந்­தது. தற்­போது மொத்த இருப்­பா­னது 557.77 டன்­க­ளாக உள்­ளது. உலக அள­வில் மத்­திய வங்­கி­க­ளின் மொத்த தங்க இருப்பு பட்­டி­ய­லில் இந்­தியா, 11-ம் இடத்­தில் உள்­ளது. அமெ­ரிக்கா தொடர்ந்து முதல் இடத்தை வகித்து வரு­கிறது.


அமெ­ரிக்­கா­வில், புதி­தாக விவ­சா­யம் சாராத அரசு பணி­களில் அமர்த்­தப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை மாதம் தோறும் வெளி­யா­கும். கடந்த வெள்­ளி­யன்று வெளி­யான அறிக்­கை­யில், எண்­ணிக்கை எதிர்­பார்த்­ததை விட குறை­வாக வந்­த­தன் கார­ண­மாக, அமெ­ரிக்க நாணய குறி­யீடு வலு­வி­ழந்­தது. இது, சந்­தை­யில் தங்­கம், வெள்ளி விலை­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தது.


செம்பு

இந்த ஆண்­டின் ஆரம்­பம் முதல் தற்­போது வரை, 17 சத­வீ­தம் அள­வுக்கு, சர்­வ­தேச சந்­தை­யில் செம்­பின் விலை­யில் சரிவு நிகழ்ந்­துள்­ளது. பொது­வா­கவே, பொரு­ளா­தார கார­ணி­கள், செம்­பின் விலை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும்.


பொரு­ளா­தா­ரம் உய­ரும்­போது, செம்­பின் விலை உயர்­வ­தும்; பொரு­ளா­தா­ரம் வீழ்ச்சி அடை­யும் போது, சரி­வ­து­மாக, ஒரு­மித்த போக்­கு­டன் காணப்­படும். 2015ம் ஆண்­டுக்கு பிறகு, முதன்­மு­றை­யாக இந்த ஆண்­டில் விலை சரிந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது. உலக அள­வில் செம்பு நுகர்­வில், சீனா முத­லி­டம் வகிக்­கிறது.


ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் கார்­க­ளுக்கு, அமெ­ரிக்கா அதி­கப்­ப­டி­யான வரி­ வி­திக்­கும் என்று அறி­வித்து இருந்­தது. பின் ஏற்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களில், இதை வில­க்கிக் ­கொள்­வ­தாக கூறி­யது. நிலவி வரும் இச்­சூ­ழ­லில், செம்பு விலை ஏற்­றம் கண்­டது.இருப்­பி­னும், லண்­டன் பொருள் வாணிப சந்­தை­யில், செம்­பின் இருப்பு அதி­க­ரித்து வரு­வது, இதன் விலை ஏற்­றத்தை கட்­டுப்­ப­டுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)