கவனத்தை ஈர்க்கும் இ.எல்.எஸ்.எஸ்., முதலீடுகவனத்தை ஈர்க்கும் இ.எல்.எஸ்.எஸ்., முதலீடு ...   தேர்தல் முடிவுகளும் சந்தை மாற்றங்களும் தேர்தல் முடிவுகளும் சந்தை மாற்றங்களும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2018
23:53

இந்­திய பங்­குச் சந்­தை­களில், ஆறு வாரத்­தில் இல்­லாத அள­விற்கு, கடந்த வாரம், பெரிய அள­வி­லான விற்­பனை நடை­பெற்று, வர்த்­த­கம் முடி­வுற்­றது.


இதற்கு சர்­வ­தேச பங்­குச் சந்­தை­க­ளின் சரிவு மற்­றும் அமெ­ரிக்க அரசு கரு­வூ­லங்­க­ளின் ஆதா­யம் சரிந்­தது முக்­கிய கார­ண­மா­கும். மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் சென்­செக்ஸ், 1.4 சத­வீ­த­மும், தேசிய பங்­குச்­சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, 1.7 சத­வீ­த­மும் சரிந்­தி­ருந்­தன.


அமெ­ரிக்­கா­வின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, அக்­டோ­பர் மாதத்­தில் 10 ஆண்டு உச்­சத்தை அடைந்­த­தாக, அந்­நாட்­டில் வெளி­யான புள்ளி விப­ரம் தெரி­வித்­தது. இதன் கார­ண­மாக ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ­லா­லும், பொரு­ளா­தார வளர்ச்சி தடை­படும் என்ற கண்­ணோட்­டத்­தி­லும், அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­கள் சரிந்­தன. இதன் தாக்­கம் இந்­திய பங்­குச் சந்­தை­க­ளி­லும் பிர­தி­ப­லித்­தது.


சன் பார்மா நிறு­வ­னத்­தில் ஏற்­பட்ட பிரச்­னை­கள் கார­ண­மாக, அப்­பங்கு, 17 சத­வீ­தம் சரிந்­தது. டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின் தர மதிப்­பீட்டை எஸ்.என்.பி., குளோ­பல் நிறு­வ­னம் குறைத்­த­தன் கார­ண­மாக, அப்­பங்கு, 5.5 சத­வீ­தம் சரிந்­தது.நவம்­பர் மாதத்­தின் வாகன விற்­பனை சரிந்­த­தன் கார­ண­மாக, மகிந்­திரா அண்டு மகிந்­திரா நிறு­வ­னப் பங்­கு­க­ளின் விலை, 8.8 சத­வீ­தம் சரிந்­தது. மேலும், ஜெ.எஸ்.டபிள்யு., மற்­றும் டாடா ஸ்டீல் நிறு­வ­னப் பங்­கு­களும் அதி­க­ள­வி­லான சரி­வை சந்­தித்­தன.


கடந்த வாரம் ‘ஜி -– 20’ உறுப்பு நாடு­க­ளின் மாநாடு நடை­பெற்­றது. அப்­போது, சீனா­வு­ட­னான வர்த்­தக மோதலை, சுமூ­க­மாக்­கும் வகை­யில், அமெ­ரிக்க அதி­பர், புதி­தாக, 200 பில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான இறக்­கு­மதி வரி விதிப்பு செய்ய இருந்­ததை தவிர்த்­தார்.மேலும், சீன அதி­ப­ரும், அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து விவ­சா­யக் கரு­வி­கள், தொழில்­நுட்ப கரு­வி­கள் போன்­ற­வற்றை இறக்­கு­மதி செய்ய விருப்­பம் தெரி­வித்­தார்.


இதன் கார­ண­மாக, வரும் காலங்­களில், இத்­த­கைய வர்த்­தக மோதல் தவிர்க்­கப்­படும் என, பங்­குச் சந்­தை­களில் சாத­க­மான சூழல் ஏற்­பட்டு, வியா­பா­ரம் நன்­றாக ஆரம்­பித்­தது. இருந்­த­போ­தி­லும் வார இறு­தி­யில் சரி­வில் முடி­வுற்­றது.டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, இந்த ஆண்டு, 13 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. ஆசிய நாண­யங்­களில் அதி­கப்­ப­டி­யான மதிப்பு சரிந்­தது இந்­திய ரூபாய் ஆகும்.


ஐந்து மாநில சட்­ட­சபை தேர்­தல் குறித்த கருத்­துக் கணிப்­பு­கள், சந்­தை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, நிப்டி, ரெசிஸ்­டென்ஸ், 10930 மற்­றும் 11100 ஆகும், சப்­போர்ட், 10720 ஆகும்.

பங்குச் சந்தை, முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)