வீட்­டுக்­க­டனை அடைப்­ப­தற்­கான சிறந்த வழி எது? வீட்­டுக்­க­டனை அடைப்­ப­தற்­கான சிறந்த வழி எது? ...  நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.6.75 லட்சம் கோடி நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.6.75 லட்சம் கோடி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகனம் நவம்பரில் விற்பனை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2018
00:07

புதுடில்லி:பயணியர் வாகன விற்பனை, நவம்பர் மாதத்தில்3.43 சதவீதம் சரிந்துள்ளதாகவும் கார்கள் விற்பனையும் மந்தமாக இருந்ததாகவும் இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:நவம்பர் மாதத்தில் உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை 3.43 சதவீதம் சரிவடைந்து, 2 லட்சத்து, 66ஆயிரம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இதுவே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2 லட்சத்து, 75 ஆயிரத்து, 440 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. உள்நாட்டில் கார் விற்பனையை பொறுத்தவரை, சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டுள்ளது.நவம்பர் மாதத்தில், 1 லட்சத்து, 79 ஆயிரத்து, 783 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில், 1 லட்சத்து, 81 ஆயிரத்து, 435 கார்கள் விற்பனை ஆகியிருந்தன.இருசக்கர வாகன பிரிவில் மோட்டார் சைக்கிளின் விற்பனை, 9.36 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் மொத்தம், 10 லட்சத்து, 49 ஆயிரத்து, 659 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டு நவம்பரில், 9 லட்சத்து, 59 ஆயிரத்து, 860 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.மொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனை கடந்த நவம்பரில், 7.15 சதவீதம் அதிகரித்து, 16 லட்சத்து, 45 ஆயிரத்து, 791 என்பதாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 15 லட்சத்து, 36 ஆயிரத்து, 15 என்ற அளவில் தான் இருந்தது.வர்த்தக வாகனங்கள் பிரிவில், 5.71 சதவீதம் அதிகரித்து, 72 ஆயிரத்து, 812 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)