வர்த்தகம் » பொது
சில்லரை விலை பணவீக்கம் வீழ்ச்சி 16 மாதங்களில் இல்லாத வகையில், 2.33 சதவீதமாக சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 டிச2018
23:29
புதுடில்லி:கடந்த நவம்பரில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 16 மாதங்களில் இல்லாத வகையில், 2.33 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை சரிவால், சில்லரை விலை பணவீக்கம் வீழ்ச்சி கண்டுள்ளது.ரிசர்வ் வங்கி, அடுத்த நிதியாண்டின், முதல் காலாண்டில், சில்லரை பணவீக்க இலக்கை, 4.8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கிற்குள், தொடர்ந்து நான்கு மாதங்களாக, சில்லரை பணவீக்கம் உள்ளது.சில்லரை பணவீக்கம், 2017, ஜூலையில்,2.60 சதவீதமாக இருந்தது. அதன் பின், கடந்த, நவம்பரில் தான், இந்த அளவிற்கு நெருக்கமாக குறைந்துள்ளது.
இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த நவம்பரில், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை, குறைந்து இருந்தது. அதனால், அம்மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 2.33 சதவீதமாக சரிவடைந்துள்ளது.இது, அக்டோபரில், 3.31 சதவீதம்; 2017, நவம்பரில், 3.58 சதவீதமாக இருந்தது.நவம்பரில், காய்கறிகள் பணவீக்கம், மைனஸ், 15.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அக்டோபரில், மைனஸ், 8.06 சதவீதமாக இருந்தது.
கடந்த மாதம், உணவுப் பொருட்கள் பணவீக்கம், மைனஸ், 2.61 சதவீதமாக உள்ளது. இது, அக்டோபரில், மைனஸ், 0.86 சதவீதமாக காணப்பட்டது.எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் சில்லரை பணவீக்கம், 7.39 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய மாதத்தில், 8.55 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், நகர்ப்புற சில்லரை பணவீக்கம், 3.97 சதவீதத்தில் இருந்து, 3.12 சதவீதமாக குறைந்துள்ளது.கிராமப்புற சில்லரை பணவீக்கம், 3.34 சதவீதத்தில் இருந்து, 1.71 சதவீதமாக சரிவடைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
தொழில் துறை உற்பத்தி உயர்வுநாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு, அக்டோபரில், 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது, செப்டம்பரில், 4.5 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில், 8.5 சதவீதமாக இருந்தது.தொழில் துறையில், 77 சதவீத பங்களிப்பை வழங்கும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, அக்டோபரில், 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, செப்டம்பரில், 4.6 சதவீதமாக இருந்தது.பொறியியல் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 16..8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 17.6 சதவீதமாக அதிகரித்துள்ளதுஇதே காலத்தில் மின் துறை உற்பத்தி, 8.2 லிருந்து, 10.8 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, மைனஸ், 0.2 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இடைநிலைப் பொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 1.4 சதவீதத்தில் இருந்து, 1.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான காலத்தில், தொழில் துறை உற்பத்தி, 5.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தி நிதியாண்டின் இதே காலத்தில், 2.5 சதவீதமாக இருந்தது.

Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 12,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 12,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 12,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 12,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!