வளர்ச்சி பாதையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி: ஜி.எஸ்.டி.,க்கு பின் ஏறுமுகம் வளர்ச்சி பாதையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி: ஜி.எஸ்.டி.,க்கு பின் ஏறுமுகம் ... சந்­தை­யில் தென்­படும் நம்­பிக்கை சந்­தை­யில் தென்­படும் நம்­பிக்கை ...
இணக்­கத்­தின் இலக்­க­ணம் சக்­தி­காந்த தாஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2018
07:28

ஆர்.பி.ஐ., என்ற, மத்­திய ரிசர்வ் வங்­கி­யின் கவர்­ன­ராக இருந்த உர்­ஜித் படேல், சொந்­தக் கார­ணங்­க­ளைச் சொல்லி திடீ­ரென பதவி வில­கி­ய­வு­டன், சக்­தி­காந்த தாஸ், புதிய கவர்­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இவர் என்ன செய்­யப் போகி­றார் அல்­லது செய்ய வேண்­டும்?

சக்­தி­காந்த தாஸ் தான் அடுத்த, ஆர்.பி.ஐ., கவர்னர் என்ற அறி­விப்பு வந்­த­வு­ட­னேயே, இரண்டு வித­மான விமர்­ச­னங்­கள் வந்­தன. முன்பு இருந்­த­வர்­க­ளைப் போல, இவர் புகழ்­பெற்ற பொரு­ளா­தார வல்­லு­ன­ரும் இல்லை; பேரா­சி­ரி­ய­ரும் இல்லை, என்­பது ஒன்று. பண மதிப்­பி­ழப்பு நடவடிக்­கை­யின் போது, அர­சின் அறி­விப்­பு­கள் அனைத்­தும் இவர் மூல­மா­கத் தான் வெளி­வந்­தன. ஊட­கங்­களை அப்­போது எதிர்­கொண்­டது இவர் தான். அதற்­கான பிர­தி­ப­ல­னா­கவே, கவர்­னர் பதவி இவ­ரைத் தேடி வந்­துள்­ளது என்­றும் சொல்­லப்­பட்­டது.

கொஞ்­சம் வர­லாற்­றைத் திரும்­பிப் பார்த்­தால், இவை இரண்­டுக்­குமே பதில் கிடைக்­கும். முன்­னாள் கவர்­னர்­க­ளான, ஒய்.வி.ரெட்­டி­யும் சரி; சுப்பா ராவும் சரி, அர­சில் செயலர்­க­ளாக இருந்­து­விட்டு, பின், ஆர்.பி.ஐ.,க்கு வந்­த­வர்­கள். இத்­த­னைக்­கும், ஒய்.வி.ரெட்டி, ப.சிதம்­ப­ரத்­தோடு பணி­யாற்­றி­ய­வர். ஆனால், ஆர்.பி.ஐ.,க்கு வந்த பின், இரு­வ­ருக்­கும் இடையே மாற்­றுக் கருத்­து­கள் இருக்­கவே செய்­தன. சுப்பா ராவும் அப்­ப­டியே நடந்து கொண்­டார். அரசு செய­லர்­க­ளாக இருந்­த­தா­லேயே, இவர்­கள் அர­சின் விர­ல­சை­வுக்கு கட்­டுப்­ப­டு­வர் என்று சொல்­லி­விட முடி­யாது.

கவர்­னர் பொறுப்­பேற்ற­வு­டன், சக்­தி­காந்த தாஸ் பேசும் போது, ஆர்.பி.ஐ.,யின் சுயேச்சை தன்மைக்கு குறை ஏற்­படாது என்­பதை தெளிவு படுத்­தி­யி­ருப்­பதை கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

சவால்­களும் தீர்­வு­களும்:
சக்­தி­காந்த தாஸ் முன், நான்கு சவால்­கள் உள்ளன. இவற்­றைத் தான் இவர் முத­லில் தீர்க்க வேண்­டும்.தற்­போது, 11 பொதுத்­துறை வங்­கி­களும், ‘உட­னடி சீர்­தி­ருத்த நட­வ­டிக்கை’ பட்­டி­ய­லில் உள்ளன. அவற்­றுக்­கான நெறி­மு­றை­க­ளைத் தளர்த்த வேண்­டும் என, நிதி அமைச்­ச­கம் விரும்­பு­கிறது.

அதன் மூலம், மீண்­டும் வங்­கி­களில் கடன் வசதி பெரு­கும். நுண், சிறு, குறு, நடுத்­தர தொழில்­கள், கொஞ்­சம் மூச்சு வாங்­கிக் கொள்­ளும். சக்­தி­காந்த தாஸ் இதை செய்­வார் என்றே நம்­ப­லாம். பெரிய பொதுத் துறை வங்­கி­க­ளுக்­கே­னும் இத்­த­கைய சலு­கையை இவர் வழங்­கக்­கூ­டும். முத­லீ­டு­க­ளைத் திரட்ட அனு­ம­தித்து, அதன் மூலம் கடன் கொடுக்­க­வும் அனும­திக்­கக் கூடும். அதி­லும், ஏதே­னும் ஓர் உயர்ந்­த ­பட்ச அளவை நிர்­ண­யம் செய்­வார் என்றே தோன்று­கிறது.

இரண்­டா­வது, வட்டி விகி­தங்­களை குறைப்­பது தொடர்­பான முடிவு. சமீ­பத்­திய நிதிக் கொள்கை குழு சந்­திப்­புக்­குப் பின், வட்டி விகி­தங்­கள் உயர்த்­தப்­படா­மல், அப்­ப­டியே வைத்­துக்­கொள்ளப்­பட்டன.சில்­லரை பண­வீக்கம் குறைந்­துள்ள நிலை­யில், வட்டி விகி­தங்­களை குறைப்­ப­தற்­கான வாய்ப்பும் இருக்­கிறது. இதன் மூலம், வங்­கித் துறை­யில் பணப் புழக்­கம் அதி­க­ரிக்­கும். தொழில் துறை­யி­னர் கூடு­தல் கடன் வாங்­கு­வ­தற்கு வழி ஏற்படும்.

ஆனால், இது­வும் ஒரு­வித கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே நடை­பெ­றும். லோன் மேளா மாதிரி, பணத்தை வாரி­வி­டும் கோலா­க­லங்­களை சக்­தி­காந்த தாஸ் அனு­ம­திக்க மாட்­டார் என்றே கரு­த­லாம்.அப்­படி கொடுக்­கப்­பட்ட கடன்­கள் திரும்பி வந்­ததே இல்லை; எல்­லாமே வாராக் கடன்­களாகவே ஆகிப் போய், நாட்­டின் கஜா­னா­வில் ஓட்டை போடு­கின்றன என்ற உண்மை நிச்­ச­யம் சக்­தி­காந்த தாஸுக்­கும் தெரி­யும்.

ஏற்­க­னவே வங்­கி­கள் சூடு போட்­டுக் கொண்­டுள்ள நிலை­யில், இம்­முறை கடன் கொடுக்­கும் போது, இன்­னும் ஜாக்­கி­ர­தை­யாக இருப்­பர் என்றே நம்­ப­லாம். மூன்­றா­வது, வாராக்­க­டன்­களை வசூல் செய்­வ­தில் காட்­டப்­படும் முனைப்பு, வேகம் ஆகி­ய­வற்­றால், பல வங்­கி­கள், வாராக்­க­டன் வைத்­துள்ள நிறு­வ­னங்­கள் மீது சட்ட ரீதி­யாக நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றன.

இவற்­றால் கிடைக்­கும் பலனை விட, தொழில் துறை­யி­னர் மத்தி­யில் ஏற்­பட்­டி­ருக்­கும் வெறுப்புணர்வு அதி­கம்.உதா­ர­ண­மாக, மின்­சா­ரம் உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­கள், பல்­வேறு மாநில அர­சு­கள் தர­வேண்­டிய நிலு­வைத் தொகை­யால் துவண்டு போய் கிடக்­கின்றன.இது போன்ற நியா­ய­ மான இடங்­களில், கொஞ்­சம் நிதா­னத்­தோடு வாராக்­க­டன் வசூல் நடை­மு­றை­கள் மேற்­கொள்ள வாய்ப்­புண்டு.

ஒப்புதல் தருவார்:
நான்­கா­வது, ஆர்.பி.ஐ., கையி­ருப்­பில் உள்ள, 9.5 லட்­சம் கோடி ரூபாய். இதி­லி­ருந்து மூன்­றில் ஒரு பங்­கை­யே­னும், மத்­திய அர­சுக்­குத் தர­வேண்­டும் என்ற கோரிக்கை வைக்­கப்­பட்­டுள்­ளது. சக்­தி­காந்த தாஸ் இதற்கு ஒப்­பு­தல் தரு­வார் என்றே தோன்­று­கிறது.மேலும், ஆர்.பி.ஐ., எவ்­வ­ளவு நிதியை கையில் வைத்­துக்­கொள்­ள­லாம் என்­பதை ஆய்வு செய்து, பரிந்­து­ரை­களை வழங்க ஒரு குழு அமைக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.சென்ற நிதிக் கொள்கை குழு சந்­திப்­பில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது. அந்­தக் குழு­வின் பரிந்­து­ரை­கள் வந்த பின் தான் அடுத்த கட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என்­ப­தால், இந்த விஷ­யத்­தில் உட­னடி அவ­ச­ரம் ஏது­மில்லை.

வர­வேற்பு:
சக்­தி­காந்த தாஸ் தான் அடுத்த கவர்­னர் என்ற செய்தி வெளி­யா­ன­வு­ட­னேயே, பங்­குச் சந்­தை­யில் ஒரு­வித மிதப்­பும், தெம்பும் வந்­து­விட்­டது.

அர­சோடு இணக்­க­மாகப் போகக் கூடி­ய­வர்; தொழில் துறை­யி­ன­ரின் தேவை­கள் அறிந்து, அதற்­கேற்ப கொள்­கை­களை வகுக்­கக் கூடி­ய­வர் என்ற நம்­பிக்­கையே இதற்­குக் கார­ணம்.இவர் யதார்த்­த­மா­ன­வ­ரா­க­வும், கள நிலை­மை­களை புரிந்­து­கொள்­ளக் கூடி­ய­வ­ரா­க­வும் இருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால், எந்த வகை­யி­லும் நாட்­டின் எதிர்­கா­லப் பொரு­ளா­தார நல­னில் சம­ர­சம் செய்­து­கொள்­ளக் கூடி­ய­வ­ராக இருந்­து­வி­டக் கூடாது. ரகு­ராம் ராஜன், உர்­ஜித் படேல் உதா­ர­ணங்­கள் வேண்­டாம். அதற்கு முந்­தைய, ஒய்.வி.ரெட்டி, சுப்பா ராவ் காலத்­தையே எடுத்­துக் கொள்­வோம். அவர்­கள் ஆட்­சி­யா­ளர்­களின் உட­னடி தேவை­க­ளுக்கு செவி சாய்த்­த­தில்லை.

மாறாக, கொள்கை ரீதி­யான மாற்­றங்­க­ளை­யும், திருத்­தங்­க­ளை­யும் அனு­ம­தித்து, பொரு­ளா­தா­ரச் சூழல் மேம்­பாடு அடைய வழி செய்­த­னர்.அந்த முன்­னேற்­றங்­கள் ஏற்­பட்­ட­வு­டன், தங்­க­ளு­டைய கட்­டுப்­பாட்டை மீண்­டும் எடுத்­துக் கொண்ட­னர்.அர­சி­லேயே பல ஆண்டு­கள் பணி­யாற்­றி­ய­தால், சக்­தி­காந்த தாஸுக்­கும் இவை­யெல்­லாம் தெரிந்­தி­ருக்­கும். அர­சோடு இணக்கம் அவ­சி­யம் தான். அதே­ச­ம­யம், குறுகிய கால பொரு­ளா­தார, அரசியல் நலன்­க­ளுக்­காக, நீண்ட கால சுமை­கள் தோளில் ஏறி­வி­டா­மல் பார்த்­துக் கொள்­வ­தும் அவசி­யம்.

–ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)