வெளியேறுவாரா நரேஷ் கோயல்? வெளியேறுவாரா நரேஷ் கோயல்? ... பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை, இந்தியா விஞ்சும் * 2030ல் உலகளவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை, இந்தியா விஞ்சும் * 2030ல் உலகளவில் ... ...
மொத்த விலை பணவீக்கம் குறைந்தது:8 மாதங்களுக்கு பின், 3.80 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2019
00:53

புதுடில்லி:கடந்த, 2018, டிசம்பரில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 3.80 சதவீதமாக சரிவடைந்துள்ளது.இது, முந்தைய நவம்பர் மாதத்தில், 4.64 சதவீதம்; 2017, டிசம்பரில், 3.58 சதவீதமாக இருந்தது.கடந்த ஆண்டு, ஏப்ரலில், மொத்த விலை பணவீக்கம், 3.62 சதவீதமாக இருந்தது. அதன் பின், டிசம்பரில் தான், இந்த அளவிற்கு நெருக்கமாக குறைந்துள்ளது.

உணவு பொருட்கள்உணவு பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை சரிவால், மொத்த விலை பணவீக்கம் வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த, 2018 டிசம்பரில், உணவு பொருட்கள் துறை, 0.07 சதவீதம் பணவாட்டம் கண்டுள்ளது. இத்துறையின் பணவீக்கம், முந்தைய நவம்பர் மாதத்தில், 3.31 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், காய்கறிகள் விலை அதிக அளவில் வீழ்ச்சி அடைந்து, 17.55 சதவீதம் என்ற அளவில் பணவாட்டத்தை கண்டுள்ளது.
இது, நவம்பரில், 26.98 சதவீதமாக இருந்தது.உணவு பொருட்களில், உருளைக்கிழங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், டிசம்பரில் சரிவை சந்தித்தது. அதனால், உருளைக்கிழங்கு மொத்த விலை பணவீக்கம், 46.68 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, நவம்பரில், 86.45 சதவீதமாக இருந்தது.டிசம்பரில், வெங்காயம் விலை மேலும் வீழ்ச்சி அடைந்து, 63.83 சதவீதம் என்ற அளவில் பணவாட்டத்தில் இருந்தது. இது, நவம்பரில், 47.60 சதவீதமாக காணப்பட்டது.பருப்பு வகைகளின் பணவீக்கம், 2.11 சதவீதமாகவும்; முட்டை, மாமிசம், மீன் ஆகியவற்றின் பணவீக்கம், 4.55 சதவீதமாகவும் இருந்தன.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டதால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.பெட்ரோல்இதனால், கடந்த ஆண்டு, டிசம்பரில், பெட்ரோல் மற்றும் டீசல் மொத்த விலை பணவீக்கம், முறையே, 1.57 சதவீதம் மற்றும் 8.61 சதவீதமாக இருந்தது.சமையல் எரிவாயு பிரிவின் மொத்த விலை பணவீக்கம், 6.87 சதவீதமாக குறைந்து காணப்பட்டது. டிசம்பரில், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த பணவீக்கம், 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்து, 8.38 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இது, நவம்பரில், 16.28 சதவீதமாக உயர்ந்து இருந்தது.வட்டி விகிதம்ரிசர்வ் வங்கி, சில்லரை பணவீக்கத்தின் அடிப்படையில், நிதிக் கொள்கையை உருவாக்குகிறது. கடந்த ஆண்டு, நவம்பரில், சில்லரை விலை பணவீக்கம், 17 மாதங்களில் இல்லாத அளவு, 2.33 சதவீதமாக குறைந்தது. அதனால், டிசம்பரில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பில், வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பழைய வட்டி விகிதமே தொடரும் என, ரிசர்வ் வங்கி அறிவித்தது.அதேசமயம், பரவலான பருவமழை, அதிக ஏற்ற, இறக்கமற்ற உணவு பொருட்கள் விலை ஆகியவை காரணமாக, நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், சில்லரை பணவீக்கம், 2.7 – 3.2 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)