தங்கம், வெள்ளி விலை  தொடர்ந்து ஏறுமுகம் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகம் ...  தங்கம் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்; கள்ள சந்தை விற்பனையை கட்டுப்படுத்த ஜி.ஜே.சி., யோசனை தங்கம் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்; கள்ள சந்தை விற்பனையை ... ...
தொழில்நுட்ப ஜவுளிக்கு ‘எச்.எஸ்.என்., குறியீடு’ கோடிக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2019
23:21

மும்பை : ‘‘ தொழில்நுட்ப ஜவுளி வகைகளின் வரி விதிப்பிற்கான, ‘எச்.எஸ்.என்.,’குறியீடு மூலம், கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர்’’ என, மத்திய ஜவுளி துறை அமைச்சர், ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

அவர், மும்பையில், தேசிய தொழில்நுட்ப ஜவுளி மாநாட்டில் மேலும் பேசியதாவது: தொழில்நுட்ப ஜவுளி துறையினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, அவ்வகை ஜவுளிகளுக்கு தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, 207 வகை தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு, சர்வதேச நடைமுறையை பின்பற்றி, வரி விதிப்பிற்கான. ‘எச்.எஸ்.என்.,’ குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இக்குறியீடுகளின்படி, அந்தந்த தொழில்நுட்ப ஜவுளி வகைகளுக்கு ஏற்ப, ஜி.எஸ்.டி., செலுத்தவும், சுலபமாக ஏற்றுமதி செய்யவும், வழி பிறந்துள்ளது.சிறப்பு மையம்இத்துறையில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவ, நாடு முழுவதும், 11 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜவுளி அமைச்சகத்தின் முயற்சியால், சாலைகள், நீர்த்தேக்கம் உள்ளிட்ட, 40 திட்டங்களில் தொழில்நுட்ப ஜவுளிகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், 54 வேளாண் தொழில்நுட்ப செயல்முறை விளக்க மையங்கள் மூலம், வேளாண் துறையில், தொழில்நுட்ப ஜவுளிகளின் பயன்பாடு, பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை விவசாயிகளுக்கு விளக்கவும், பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டு களில்,தொழில்நுட்ப ஜவுளி உருவாக்கத்திற்கான, 540 மாதிரி முகாம்களும், 8 சிறப்பு மையங்களும்,140 கோடி ரூபாய் முதலீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பயிற்சி:
இதே காலத்தில், இத்துறையில், 22 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பங்கேற்கும் வகையில், டில்லியில், தொழில்நுட்ப ஜவுளி கண்டுபிடிப்பு மையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு தற்போது வரி குறியீடு அளிக்கப்பட்டுள்ளதால், இத்துறை மேலும் சிறப்பாக வளர்ச்சி காணும்.இதன் மூலம், கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும், 2020-–21ம் நிதியாண்டில், இந்திய ஜவுளி சந்தை, 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர, தொழில்நுட்ப ஜவுளி துறை உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.

எவை எவை?
தீயணைப்பு வீரர்களின் உடைகள், குண்டு துளைக்காத ஆடைகள், நில அரிப்பை தடுக்க பயன்படும் துணிகள், அதிக குளிர், வெப்பத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் போர்வைகள், கதிரியக்க பாதிப்பை தடுக்கும் உடைகள் உள்ளிட்டவை, தொழில்நுட்ப ஜவுளிகளில் அடங்கும்.எவை எவை?தீயணைப்பு வீரர்களின் உடைகள், குண்டு துளைக்காத ஆடைகள், நில அரிப்பை தடுக்க பயன்படும் துணிகள், அதிக குளிர், வெப்பத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் போர்வைகள், கதிரியக்க பாதிப்பை தடுக்கும் உடைகள் உள்ளிட்டவை, தொழில்நுட்ப ஜவுளிகளில் அடங்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)