ரூ.100 கோடிக்கு மேல் சொத்து 61 பேரிடம் தான் இருக்கிறதாம்! ரூ.100 கோடிக்கு மேல் சொத்து 61 பேரிடம் தான் இருக்கிறதாம்! ... உணவு சேவைக்கும் பட்ஜெட் போடுங்கள் உணவு சேவைக்கும் பட்ஜெட் போடுங்கள் ...
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2019
23:43

புது­டில்லி:வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரிக்­கும் நோக்­கில், வலை­த­ளம் மூலம் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு மேலும் பல சலு­கை­களை வழங்க, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.


‘பிளிப்­கார்ட், ஸ்நாப்­டீல், ஷாப்க்­ளுவ்ஸ், ஓலா, ஊபர்’ போன்ற ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை துவக்க, ‘ஏஞ்­சல் பண்டு’ எனப்­படும், துவக்க கால நிதி­யு­தவி நிறு­வ­னங்­கள் உத­வு­கின்றன. இந்­நி­று­வ­னங்­கள் மூலம் திரட்­டும் முத­லீட்­டிற்கு, வரு­மான வரி விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது.
எனி­னும், ஏஞ்­சல் பண்டு முத­லீடு, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் சந்தை மதிப்பை விட அதி­கம் இருந்­தால், அத்­தொ­கைக்கு, 30 சத­வீ­தம் வரி விதிக்­கப்­ப­டு­கிறது. இதை, ‘ஏஞ்­சல் வரி’
என்­கின்­ற­னர்.


இந்த வரி, சட்ட விரோத பணப் பரி­மாற்­றம், வரி ஏய்ப்பு ஆகி­ய­வற்றை தடுக்க அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.ஆனால், இந்த வரி­யால், நேர்­மை­யாக தொழில் செய்­வோ­ரும் பாதிக்­கப்­ப­டு­வ­தாக, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் சார்­பில் வரு­மான வரி துறைக்கு தெரி­விக்­கப்­பட்­டது.எனவே, ஏஞ்­சல் வரி தொடர்­பான நட­வ­டிக்­கையை, வரு­மான வரி துறை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள்­ளது.


இதை­ய­டுத்து, தொழில் மற்­றும் உள்­நாட்டு வர்த்­தக மேம்­பாட்டு துறை­யான, டி.பி.ஐ.ஐ.டி., உண்­மை­யான ஸ்டார்ட் அப் நிறு­வ­னம் எது என்­பதை, வரை­யறை செய்ய உள்­ளது.
அதன் அடிப்­ப­டை­யில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் திரட்­டும் முத­லீ­டு­க­ளுக்கு வரி விலக்கு பெற முடி­யும்.


அடையாளம்


இந்­நி­லை­யில், ஸ்டார்ட் அப் துறையை மேலும் ஊக்­கு­வித்து, வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரிப்­ப­தில், மத்­திய அரசு தீவி­ரம் காட்டி வரு­கிறது.இது குறித்து, நிதி துறை வட்­டா­ரம் கூறி­ய­தா­வது:
மத்­திய அரசு, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு மேலும் பல சலு­கை­களை வழங்க உள்­ளது. இது தொடர்­பாக, டி.பி.ஐ.ஐ.டி., மற்­றும் வரு­வாய் துறை அதி­கா­ரி­களின் ஆலோ­சனை
கூட்­டம் நடை­பெற்­றது.


அதில், போலி நிறு­வ­னங்­களில் இருந்து, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை அடை­யா­ளப்­ப­டுத்த, அவற்­றி­டம் முத­லீடு குறித்த பிர­மாண பத்­தி­ரம் பெறு­வது குறித்து, விவா­திக்­கப்­பட்­டது.
அத்­த­கைய நிறு­வ­னங்­கள் திரட்­டும் முத­லீ­டு­கள் குறித்து, வரு­மான வரி துறை கேள்வி கேட்­காது. இத­னால், நேர்­மை­யான ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், அவற்­றின் முத­லீட்டு விப­ரங்­களை வெளிப்­ப­டை­யாக தெரி­விக்­கும் நிலை ஏற்­படும்.


ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில், ஏஞ்­சல் பண்டு நிறு­வ­னங்­கள் செய்­யும், 10 கோடி ரூபாய் வரை­யி­லான முத­லீட்­டிற்கு, தற்­போது, ஏழு ஆண்­டு­கள் வரி விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது. இதை, 10 ஆண்­டு­க­ளாக உயர்த்­து­வது குறித்­தும், கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­டது.


உறவினர்கள்


ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில், முத­லீ­டு­களை ஊக்­கு­விக்க, அந்­நி­று­வ­னர்­களின் உற­வி­னர்­கள், பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள் ஆகி­யவை மேற்­கொள்­ளும் முத­லீ­டு­க­ளுக்கு, வரி விலக்கு வழங்­கு­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­டது.


ஏஞ்­சல் பண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கு­வது போல, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­யும், 100 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான விற்­று­மு­தல் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்­கு வரி சலுகை அளிக்­கும் திட்­ட­மும் பரி­சீ­ல­னை­யில் உள்­ளது.மேலும், வரி சலு­கைக்­கான முத­லீட்டு வரம்பை, 10 கோடி­யில் இருந்து, 50 கோடி ரூபா­யாக உயர்த்­து­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­டது.


தற்­போது, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்­கான ஏழு ஆண்டு சலுகை காலத்­தில், முதல் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முழு வரி விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது. இந்த வரம்பை, 10 ஆண்­டு­க­ளாக அதி­க­ரிப்­பது குறித்து பரி­சீ­லிக்­கப்­ப­டு­கிறது.வரும் வாரத்­திற்­குள், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்­கான புதிய சலு­கை­கள் குறித்து முடிவு செய்­யப்­பட்டு, அறிக்கை வெளி­யா­கும் என, தெரி­கிறது.
புதிய விதி­மு­றை­கள், ஸ்டார்ட் அப் தொழிலை ஊக்­கு­வித்து, வேலை­வாய்ப்­பு­கள் உயர வழி வகுக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.


தணிக்கை செய்த, ஆண்டு நிதி நிலை அறிக்கை, முத­லீடு குறித்த பிர­மாண பத்­தி­ரம், வரு­மான வரி கணக்கு தாக்­கல் அறிக்கை ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில் மேற்­கொள்­ளும், குறிப்­பிட்ட சத­வீத பங்கு மூல­த­னத்­திற்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்­டும் என, வரு­மான வரி துறை­யி­டம் வலி­யு­றுத்­தி­யுள்­ளோம்.


சச்­சின் தபா­ரியா,


நிறு­வ­னர், ‘லோக்­கல் சர்க்­கிள்ஸ்’ நிறு­வ­னம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)