பதிவு செய்த நாள்
23 பிப்2019
02:50
புதுடில்லி: உலகளவில் தேவை குறைவு மற்றும் உள்நாட்டில் தங்க நகை தயாரிப்பாளர்களின் தேவை குறைவு ஆகிய காரணங்களால், சந்தையில் நேற்று தங்கத்தின் விலை சரிவை சந்தித்தது.நேற்று, 10 கிராம் தங்கத்தின் விலை, 330 குறைந்து, 34 ஆயிரத்து, 500 ரூபாயாக இருந்தது.தங்கத்தின் விலை மட்டுமின்றி, வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை, 300 குறைந்து, 41 ஆயிரத்து, 360 ரூபாயாக இருந்தது.உலகளவில், நியுயார்க் சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம், 1,325.24 டாலராகவும், வெள்ளி ஒரு அவுன்ஸ், 15.80 டாலராகவும் இருந்தது.தலைநகர் டில்லியில், 99.9 சதவீதம் மற்றும் 99.5 சதவீதம் சுத்தமான, 10 கிராம் தங்கத்தின் விலை முறையே, 34 ஆயிரத்து, 500 ரூபாயாகவும்; 34 ஆயிரத்து, 350 ரூபாயாகவும் குறைந்து வர்த்தகமானது.தங்கத்தை போலவே, வெள்ளியும், 1 கிலோவுக்கு, 300 குறைந்து, 41 ஆயிரத்து, 360 ரூபாயாக இருந்தது.வெள்ளி நாணயத்தை பொறுத்தவரை, 100 நாணயங்கள், 1,000 ரூபாய் விலை குறைந்து, வாங்கும் விலை, 82 ஆயிரமாகவும், விற்கும் விலை, 83 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|