பதிவு செய்த நாள்
21 மார்2019
23:27
புதுடில்லி: கடந்த ஜனவரியில், ‘டெலிகாம்’ எனப்படும் தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் சந்தாதாரர் எண்ணிக்கை, மூன்றாவது முறையாக, 120 கோடியை தாண்டியது.
‘ஆர்ஜியோ, பி.எஸ்.என்.எல்., மற்றும் ஏர்டெல்’ நிறுவனங்கள், அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன. இது குறித்து, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2018, டிசம்பர் இறுதி நிலவரப்படி, தொலை தொடர்பு சேவையை பெற்ற பயனாளிகள் எண்ணிக்கை, 119.79 கோடியாக இருந்தது. இது, இந்தாண்டு ஜனவரியில், 120.38 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு, டிசம்பரில், மொபைல் போன் சந்தாதாரர் எண்ணிக்கை, 117 கோடியாக இருந்தது. இது, இந்தாண்டு ஜனவரியில், 118 கோடியாக உயர்ந்துள்ளது.
முதலிடம்:
இதே காலத்தில், கம்பிவட தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை, 2.18 கோடியில் இருந்து, 2.17 கோடியாக குறைந்துள்ளது.ஜனவரியில், ரிலையன்சின் ஆர்ஜியோ நிறுவனம், 93 லட்சம் மொபைல் போன் சந்தாதாரர்களை இணைத்து, முதலிடத்தை பிடித்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., 9.82 லட்சம் பேரையும், ஏர்டெல், ஒரு லட்சம் சந்தாதாரரையும் இணைத்துள்ளன. அதேசமயம், வோடபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள், 44 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளன.பி.எஸ்.என்.எல்., நிறுவனம், கம்பிவட தொலைபேசி சந்தாதாரர்களில், 90 ஆயிரம் பேரை இழந்துள்ளது.
ஐந்து நிறுவனங்கள்:
கடந்தாண்டு, டிசம்பரில், ‘பிராட்பேண்ட்’ எனப்படும், இணையதள சேவையில், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள், புதிதாக, முறையே, 29 ஆயிரத்து, 930 மற்றும் 6,386 இணைப்புகளை வழங்கியுள்ளன.ஜனவரியில், இணையதள இணைப்புகளின் எண்ணிக்கை, 4.15 சதவீதம் உயர்ந்து, 54 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2018, டிசம்பரில், 51.8 கோடியாக இருந்தது.
ஒட்டுமொத்த இணைய தள சேவையில், மொபைல் போன் சார்ந்த இணைப்புகள், 96 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இப்பிரிவில், 52.1 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.ஜனவரி நிலவரப்படி, இணையதள சந்தாதாரர்களில், 98.63 சதவீதம் பேர், ஐந்து முன்னணி நிறுவனங்கள் வசம் உள்ளனர்.
இதில், ஆர்ஜியோ, 28.94 கோடி சந்தாதாரர்களுடன், முதலிடத்தில்உள்ளது. ஏர்டெல், 11 கோடி; வோடபோன் ஐடியா, 10.98 கோடி; பி.எஸ்.என்.எல்., 2 கோடி மற்றும்டாடா டெலிசர்வீசஸ்,22.60 லட்சம் இணைப்புகளுடன் உள்ளன.கம்பிவட இணையதள சேவையில், பி.எஸ்.என்.எல்., 91.7 லட்சம் சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், ஏர்டெல், 23 லட்சம்; அட்ரியா கன்வெர்ஜென்ஸ், 14 லட்சம்; ஹாத்வே கேபிள் அண்டு டேட்டா காம், 7.9 லட்சம்; எம்.டி.என்.எல்., 7.7 லட்சம் சந்தாதாரர்களுடன் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது முறை:
கடந்த, 2017, ஜூலை மற்றும் 2018 மே மாதம், தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் சந்தாதாரர் எண்ணிக்கை, 120 கோடியை தாண்டியிருந்தது. மூன்றாவது முறையாக, இந்தாண்டு ஜனவரியில், மீண்டும் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|