பங்கு வெளியீட்டில் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ்பங்கு வெளியீட்டில் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் ... நாட்டின் ஏற்றுமதியில் புதிய சாதனை; முதன் முறையாக, ரூ.37 லட்சம் கோடியை தாண்டியது நாட்டின் ஏற்றுமதியில் புதிய சாதனை; முதன் முறையாக, ரூ.37 லட்சம் கோடியை ... ...
‘ஜெட் ஏர்வேஸ்’சுக்கு விரைவில் நிதியுதவி; இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2019
07:11

புதுடில்லி: ‘‘ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­திற்கு விரை­வில் நிதி­யு­தவி வழங்கி, மீண்­டும் இயல்­பான விமான சேவையை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்,’’ என, பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர், சுனில் மேத்தா தெரி­வித்­து உள்­ளார்.

ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னம், 8,000 கோடி ரூபாய் கடன் நெருக்­க­டி­யில் உள்­ளது. அத­னால், வங்­கி­கள் கூட்­ட­மைப்­பின் கடன் தீர்வு திட்­டத்தை ஏற்று, நிறு­வ­னர், நரேஷ் கோயல், மனைவி அனிதா கோயல் ஆகி­யோர், இயக்­கு­னர் பத­வியை துறந்­த­னர். பங்கு மூல­த­னத்­தை­யும் குறைத்­துக் கொண்­ட­னர். இதை­ய­டுத்து, எஸ்.பி.ஐ., தலை­மை­யி­லான வங்­கி­கள் கூட்­ட­மைப்பு, ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­தில், 1,500 கோடி ரூபாய் நிதி­யு­தவி செய்ய முன்­வந்­தது.

இதற்­காக, ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­தின், 75 சத­வீத பங்­கு­களை விற்­பனை செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது. எனி­னும், பங்கு விற்­பனை, எதிர்­பார்த்த வர­வேற்பை பெற­வில்லை. அத­னால், ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­தின் எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. நிறு­வ­னத்­தின் விமான சேவை, தற்­போது, 10 ஆக குறைந்­துள்­ளது. ஊதிய நிலுவை கார­ண­மாக, விமா­னி­கள், வேறு நிறு­வ­னங்­க­ளுக்கு தாவி வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்தை மீண்­டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர, வங்­கி­கள் கூட்­ட­மைப்பு பிர­தி­நி­தி­கள், மத்­திய நிதிச் சேவை­கள் துறை செய­லர், ராஜீவ் குமாரை சந்­தித்து ஆலோ­சனை நடத்­தி­னர்.

இது குறித்து, வங்­கி­கள் கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த, பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர், சுனில் மேத்தா, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­தா­வது: ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்தை, மீண்­டும் பழைய நிலைக்கு கொண்டு வரு­வது குறித்து, அனைத்து தரப்­பி­ன­ரி­டம் பேச்சு நடத்­தப்­பட்டு வரு­கிறது. எனி­னும், இன்­னும் எந்த முடி­வும் எடுக்­க­வில்லை. விரை­வில், ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­திற்கு நிதி­யு­தவி கிடைக்­கும். வழக்­கம் போல, விமான சேவை­களை மேற்­கொள்­ளும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)