பதிவு செய்த நாள்
19 ஏப்2019
04:40
புதுடில்லி: கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம், 9.79 சதவீதம் அதிகரித்து, 10 ஆயிரத்து, 362 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2017 -– 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 9,438 கோடி ரூபாயாக இருந்தது.
சந்தை எதிர்பார்ப்பை விட, நிறுவனத்தின் நிகர லாபம் உயர்ந்துள்ளது.மொத்த வருவாய், 19.40 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து, 54 ஆயிரத்து, 110 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் ஜியோ, மதிப்பீட்டு காலாண்டில், 840 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில், 510 கோடி ரூபாயாக இருந்தது.
‘‘கடந்த நிதியாண்டில், ரிலையன்ஸ் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. முதன் முறையாக, ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவின் வருவாய், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ‘‘ஆர்ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 30 கோடியை விஞ்சியுள்ளது,’’ என, ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|