ஜி.எஸ்.டி., எதிர்பார்ப்பால் விசைத்தறி ஜவுளி தேக்கம்ஜி.எஸ்.டி., எதிர்பார்ப்பால் விசைத்தறி ஜவுளி தேக்கம் ...  வரி சீர்திருத்தக் குழு பணிக் காலம் நீட்டிப்பு வரி சீர்திருத்தக் குழு பணிக் காலம் நீட்டிப்பு ...
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமானது ரிலையன்ஸ்; வருவாய், லாபத்தில் ஐ.ஓ.சி., நிறுவனத்தை விஞ்சியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
07:10

புதுடில்லி: கடந்த நிதி­யாண்­டில், வரு­வாய் ஈட்­டி­ய­தில், முகேஷ் அம்­பா­னி­யின், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஐ.ஓ.சி., நிறுவ­னத்தை விஞ்­சி­யுள்­ளது.

இதன் மூலம், நாட்­டின் மிகப் பெரிய நிறு­வ­ன­மாக, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் உரு­வெ­டுத்­துள்­ளது. கடந்த, 2018-–19ம் நிதி­யாண்­டில், ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்­தின் விற்­று­மு­தல், 6.23 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இதே நிதி­யாண்­டில், ஐ.ஓ.சி., எனப்­படும், இந்­தி­யன் ஆயில் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­னத்­தின் விற்­று­மு­தல், 6.17 லட்­சம் கோடி ரூபாயை எட்­டி­யுள்­ளது. ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்­தின் லாபம், ஐ.ஓ.சி.,யை விட இரு மடங்கு உயர்ந்­துள்­ளது.

கடந்த நிதி­யாண்­டில், ரிலை­யன்ஸ், 39ஆயி­ரத்து 588 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்­டி­யுள்­ளது. இது, 2017-–18ம் நிதி­யாண்­டில் ஈட்­டிய, 34 ஆயி­ரத்து 988 கோடி ரூபாயை விட, 13 சத­வீ­தம் அதி­கம். இதே காலத்­தில், ஐ.ஓ.சி.,யின் நிகர லாபம், 23 சத­வீ­தம் குறைந்து, 22ஆயி­ரத்து189 கோடி ரூபா­யில் இருந்து, 17 ஆயி­ரத்து 274 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.

சுத்திகரிப்பு:
ரிலை­யன்ஸ், சந்தை மூல­தன மதிப்­பி­லும், ஐ.ஓ.சி.,யை விஞ்­சி­யுள்­ளது. ஐ.ஓ.சி., கச்சா எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு, பெட்­ரோ­லிய ரசா­ய­னப் பொருட்­கள் மற்­றும் எரி­வாயு விற்­பனை உள்­ளிட்ட வர்த்­த­கத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், கடந்த ஆண்டு வரை, மிக அதிக அள­வில் லாப­மீட்­டும் நிறு­வ­ன­மாக திகழ்ந்­தது. ஆனால், இந்த சிறப்பை, 2018- – 19ம் நிதி­யாண்­டில், எண்­ணெய் மற்­றும் இயற்கை எரி­வாயு உற்­பத்­தி­யில் ஈடு­பட்டு வரும், ஓ.என்.ஜி.சி., நிறு­வ­னத்­தி­டம் இழந்­தது.

ஓ.என்.ஜி.சி., கடந்த முழு நிதி­யாண்­டின் நிதி நிலை அறிக்­கையை இன்­னும் வெளி­யி­ட­வில்லை. இருந்­த­போ­தி­லும், ஏப்., – டிசம்­பர் வரை­யி­லான ஒன்­பது மாதங்­களில், ஓ.என்.ஜி.சி., நிறு­வ­னம், 22 ஆயி­ரத்து 671 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்­டி­யுள்­ளது. இது, ஐ.ஓ.சி., முழு நிதி­யாண்­டில் ஈட்­டிய நிகர லாபத்தை விட, அதி­கம்.

மூன்று பிரிவுகள்:
வரு­வாய், லாபம் மற்­றும் சந்தை பங்கு மூல­தனத்­தில், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், ஐ.ஓ.சி.,யை விஞ்சி உயர்ந்­துள்­ளது. ரிலை­யன்ஸ், எண்­ணெய் சுத்­தி­க­ரிப்­பி­லும், சில்­லரை விற்­ப­னை­யி­லும், அதிக லாப வரம்­பு­டன் வர்த்­த­கம் புரி­கிறது. இத­னால், 2009–19 வரை­யி­லான, பத்து ஆண்­டு­களில், இந்­நி­று­வ­னத்­தின் ஆண்டு, சரா­சரி வரு­வாய் வளர்ச்சி, 14 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக உள்­ளது.

இதே காலத்­தில், ஐ.ஓ.சி.,யின் வரு­வாய், 20 சத­வீ­தத்­தில் இருந்து, 6.3 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. உல­கில், கச்சா எண்­ணெய் ஏற்­று­ம­தி­யில் முத­லி­டத்­தில் உள்ள, சவுதி அரே­பியா, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் உடன் இணைந்து, இந்­தி­யா­வில், கச்சா எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு உள்­ளிட்ட துறை­களில் முத­லீடு செய்ய உள்­ளது.

கையிருப்பு:
கடந்த நிதி­யாண்டு, ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்­தின் ரொக்க கையி­ருப்பு, 1.33 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. இதே­கா­லத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் கடன், 2.87 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. அதே­ச­ம­யம், இதே காலத்­தில், ஐ.ஓ.சி.,யின் நீண்ட கால கடன், 92 ஆயி­ரத்து 700 கோடி ரூபாய் என்ற அள­விற்கே இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)