‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்காக 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் ‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்காக 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் ...  சேவைகள் துறை 12 மாதங்கள் காணாத சரிவு:‘நிக்கி – மார்க்கிட்’ ஆய்வறிக்கை வெளியீடு சேவைகள் துறை 12 மாதங்கள் காணாத சரிவு:‘நிக்கி – மார்க்கிட்’ ஆய்வறிக்கை ... ...
பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக கணிப்பு உலக வங்கி ஆய்வறிக்கை வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2019
23:26

வாஷிங்டன்:நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 7.5 சதவீதமாக இருக்கும் என, உலக வங்கி அறிவித்துள்ளது.



தனியார் நுகர்வு, முதலீடுகள் ஆகியவை அதிகரிப்பதன் காரணமாக, இந்த வளர்ச்சியை அடையும் எனவும் தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த ஆய்வறிக்கையை, நேற்று, உலக வங்கி வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:



இந்தியாவின் வளர்ச்சி, மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில், 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. அரசின் உள்கட்டுமானத் துறையில் செய்த முதலீடுகள் காரணமாக மந்தநிலை சரிசெய்யப்பட்டுள்ளது.சீனாவை பொறுத்தவரை, 2018ல் வளர்ச்சி விகிதம், 6.6 சதவீதமாக இருந்தது. 2019ல், இதுவே, 6.2 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.




மேலும், 2020ல், 6.1 சதவீதமாகவும், 2021ல், 6 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியா, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக தொடர்ந்து இருக்கும். 2020ல் சீனாவை விட, இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 1.5 சதவீதம் அதிகரித்து இருக்கும்.நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 7.5 சதவீதமாக இருக்கும். இது இதற்கு முந்தைய கணிப்பிலிருந்து மாறுபடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.




இந்த வளர்ச்சி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அப்படியே தொடரும்.தனியார் நுகர்வு மற்றும் முதலீடு, நாட்டின் கடன் வளர்ச்சியையும், உகந்த நிதி கொள்கையையும் வலுவாக்கி உள்ளது. நகர்ப்புற நுகர்வு, நாட்டின் கடன் வளர்ச்சிக்கு உதவுவதாக அமைந்திருந்தது. விவசாய பொருட்கள் விலை அதிகரிக்காததால், கிராமப்புற நுகர்வு குறைந்தது. பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதம், நடப்பு நிதியாண்டில், மேலும், 2.7 சதவீதம் சரிவினை சந்திக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)