சிறப்பான வளர்ச்சியில் குடும்ப வணிக நிறுவனங்கள்சிறப்பான வளர்ச்சியில் குடும்ப வணிக நிறுவனங்கள் ... காதி துணி உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு காதி துணி உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு ...
வர்த்தகப் போர் வழங்கிய வாய்ப்பு; 350 பொருட்களின் ஏற்றுமதிக்கு வாய்ப்பு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
06:36

புது­டில்லி: அம­ரிக்­கா­வுக்­கும், சீனா­வுக்­கும் இடையே நடை­பெற்று வரும் வர்த்­த­கப் போர், இந்­தி­யா­வின் ஏற்­று­ம­தியை அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்பை வழங்கி உள்­ள­தாக, மத்­திய வர்த்­த­கத்­துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, வர்த்­தக துறை அமைச்­ச­கம், மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: அமெ­ரிக்கா மற்­றும் சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக போர், தொடர்ந்து நடை­பெற்று வரு­கிறது. இந்த மோத­லின் விளை­வாக, இந்­தி­யா­வின், 350க்கும் மேற்­பட்ட பொருட்­களை ஏற்­று­மதி செய்­வ­தற்கு நல்ல வாய்ப்பு ஏற்­பட்­டுள்ளதாக, அமைச்­ச­கத்­தின் ஆய்­வின் மூலம் தெரிய­வந்­துள்­ளது.

சந்தர்ப்பம்:
இந்த ஆய்­வின் ஒரு பகுதி­யாக, எந்­தெந்த பொருட்­களை, அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­க­ளுக்கு அதிகம் ஏற்­று­மதி செய்ய வாய்ப்­பி­ருக்­கிறது என்­பது,அடை­யா­ளம் காணப்­பட்­டது. டீசல், எக்ஸ்ரே டியூப் உள்­ளிட்ட சுமார், 151 உள்­நாட்டு தயா­ரிப்பு பொருட்­க­ளுக்கு, சீனா­வில் வாய்ப்பு அதி­க­ரித்­துள்­ளது. இத்­த­கைய பொருட்­களை, சீனா, அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்து வரு­கிறது. ஆனால், வர்த்­தக மோதல் கார­ண­மாக, இந்த அமெ­ரிக்க பொருட்­கள் மீதான இறக்­கு­மதி வரியை, சீனா அதி­க­ரித்­துள்­ளது.

அதே போல், சீனா­வி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வந்த ரப்­பர், கிரா­பைட் எலக்ட்­ரோட் உள்­ளிட்­ட வற்­றுக்­கான இறக்­கு­மதிக்கு, அதிக வரியை அமெ­ரிக்கா விதித்­துள்­ளது. சீனா­வின் பொருட்­களுக்­கான வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தால், இந்­தி­யா­வி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்ய சுமார், 203 பொருட்­க­ளுக்கு நல்ல வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

சீனாவை பொறுத்­த­வரை, குறிப்­பிட்ட சில பொருட்­களை உடனே நம்­மால் ஏற்­று­மதி செய்ய இய­லும். இந்த சந்­தர்ப்­பத்­தைப் பயன்­ப­டுத்தி, சீனா­வுக்­கான ஏற்­று­மதி வாய்ப்பை அதி­க­ரித்­துக் கொள்ள வேண்­டும் என, ஆய்வு தெரி­வித்­துள்­ளது. இரு நாடு­க­ளுக்­கி­டை­யே­யான இந்த வர்த்­தக மோதல், உல­க­ள­வி­லான வர்த்­த­கத்­தின் போக்­கில் பெரும் மாறு­தல்­களை ஏற்­ப­டுத்தி வரு­கிறது.

செம்­புத் தாது, ரப்­பர், காகி­தம், காகித அட்டை, குரல் மற்­றும் தர­வு­களை பகிர்­வ­தற்­கான சாத­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு, சீன சந்­தை­யில் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. தொழிற்­சாலை வால்­வு­ கள், ரப்­பர், கார்­பன், கிரா­பைட் எலக்ட்­ரோடு உள்­ளிட்ட வேறு சில பொருட்­க­ளுக்கு, அமெ­ரிக்க சந்­தை­யில் வாய்ப்பு உரு­வாகி உள்­ளது.

பற்­றாக்­கு­றை:
எனவே, இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி, ஏற்­று­ம­தியை அதி­க­ரிப்­ப­தன் மூலம், சீனா­வுட­னான, இந்­தி­யா­வின் வர்த்­தக பற்­றாக்­கு­றையை குறைக்­க­லாம். கடந்த நிதி­யாண்­டில், ஏப்­ரல் முதல் பிப்­ர­வரி வரை­யி­லான கால­கட்டத்­தில், சீனா­வு­ட­னான வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 5,012 கோடி அமெ­ரிக்க டாலர் ஆகும். இவ்­வாறு அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)