அம்பானியை நெருக்கும் சீன வங்கிகள்அம்பானியை நெருக்கும் சீன வங்கிகள் ... 24ல், ‘இந்தியா மார்ட்’ பங்கு வெளியீடு 24ல், ‘இந்தியா மார்ட்’ பங்கு வெளியீடு ...
உற்பத்தி, பொறியியல், உள்கட்டமைப்பு துறைகளில் வளர்ச்சி; புதிதாக 58,200 வேலைவாய்ப்புகள் உருவாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
07:19

புது­டில்லி: வேலை தேடு­ப­வர்­க­ளுக்கு மகிழ்ச்சி அளிக்­கும் வகை­யில் ஆய்­வ­றிக்கை ஒன்றை டீம்­லீஸ் சர்­வீ­சஸ் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டில், ஏப்­ரல் முதல் செப்­டம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில், 58 ஆயி­ரத்து, 200 புதிய வேலை­கள் உரு­வா­கும். உற்­பத்தி, பொறி­யி­யல், உள்­கட்­ட­மைப்பு ஆகிய துறை­களில் இந்த வேலை வாய்ப்­பு­கள் இருக்­கும் என்­கிறது, இந்த ஆய்­வ­றிக்கை. டீம்­லீஸ் சர்­வீ­சஸ் நிறு­வ­னம், வேலை வாய்ப்­பு­கள் குறித்து, ஆண்­டுக்கு இரு­முறை ஆய்­வ­றிக்கை வெளி­யிட்டு வரு­கிறது. 19 துறை­களில், 775 இந்­திய நிறு­வ­னங்­க­ளி­லும், 85 வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளி­லும் இந்த ஆய்வை டீம்­லீஸ் நிறு­வ­னம் மேற்­கொண்­டது.

இவ்­வ­றிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: உற்­பத்தி, பொறி­யி­யல், உள்­கட்­ட­மைப்பு துறை­களில், கடந்த நிதி­யாண்­டின் இரண்­டா­வது அரை­யாண்­டில், 6.42 கோடி பேருக்கு வேலை வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட்டு உள்ளன. மின்­னணு உற்­பத்தி துறை, 2025ம் ஆண்­டில், 26 லட்­சம் கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீட்டை ஈர்க்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து இந்த துறை­யா­னது, நாட்­டில் வேலை­வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தில் அதி­வே­க­மான வளர்ச்­சியை ஏற்­ப­டுத்­தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நவீ­னப்­ப­டுத்­து­தல், தொழிற்­சாலை இணைய சாத­னங்­கள் பயன்­பாடு ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக, 2022ல், உற்­பத்தி துறை­யா­னது, நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், 25 சத­வீ­தம் அள­வுக்கு பங்­க­ளிப்பை வழங்­கும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால், வேலை­வாய்ப்­பு­களும் கணி­ச­மான அள­வுக்கு நாட்­டில் அதி­க­ரிக்­கும். உற்­பத்தி, பொறி­யி­யல், உள்­கட்­ட­மைப்பு ஆகிய துறை­கள், நடப்பு நிதி­யாண்­டின் அரை­யாண்­டில், 8.02 சத­வீ­தம் வளர்ச்­சியை எட்­டும் என தெரி­கிறது.

மேலும், இரண்­டாம் நிலை நக­ரங்­களில், 5 சத­வீ­த­மும், மூன்­றாம் நிலை நக­ரங்­களில், 2 சத­வீ­த­மும் வளர்ச்சி இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.நடுத்­தர நிறு­வ­னங்­களில், 5 சத­வீத அள­வுக்­கும், பெரிய நிறு­வ­னங்­களில், 2 சத­வீத அள­வுக்­கும் வளர்ச்சி இருக்­கும். கடந்த நிதி­யாண்­டின், அக்­டோ­பர் முதல் மார்ச் வரை­யி­லான கால­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், நடப்பு நிதி­யாண்­டின், ஏப்­ரல் முதல் செப்­டம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில், 14 நக­ரங்­களில், பாதி நக­ரங்­கள், வளர்ச்சி இருக்­கும் என கரு­து­கின்றன. மீதி நக­ரங்­கள், வளர்ச்சி குறை­வாக இருக்­கும் என கரு­து­கின்றன. இவ்­வாறு, ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நடப்பு நிதியாண்டில் வேலைவாய்ப்பு வளர்ச்சி:
நகரம் - சதவீதம்புனே - 5கோவை - 4சென்னை - 3அகமதாபாத் - 3கோல்கட்டா - 3டெல்லி - 2மும்பை - 1

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)