‘டெலிபோன் பூத்’ போன்று ‘வைபை’ சேவைக்கு திட்டம் ‘டெலிபோன் பூத்’ போன்று ‘வைபை’ சேவைக்கு திட்டம் ...  புதிய உச்சம் தொடும் தங்கம் புதிய உச்சம் தொடும் தங்கம் ...
ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., வரி தாக்கல்; கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2019
06:43

புது­டில்லி: ஜி.எஸ்.டி., கவுன்­சில், 35வது கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. மத்­திய நிதி­ய­மைச்­சர், நிர்­மலா சீதா­ரா­மன் தலை­மை­யில் நடை­பெற்ற முதல் கூட்­டம் இது. மேலும்,பொதுத் தேர்­தல் முடிந்து, புதிய அரசு அமைந்த பின் நடை­பெற்ற முதல் கூட்­ட­மா­கும் இது.

இக்­கூட்­டத்­தில், மின்­வா­க­னங்­க­ளுக்­கான, ஜி.எஸ்.டி., வரியை, 12 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 5 சத­வீ­த­மாக குறைப்­பது, ஜி.எஸ்.டி., பதி­வுக்கு, ஆதார் அடை­யாள அட்­டையை பயன்­ப­டுத்த அனு­ம­திப்­பது உள்­ளிட்ட பல்­வேறு முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன. மேலும், ஜி.எஸ்.டி., ஆண்டு வரித் தாக்­க­லுக்­கான அவ­கா­சத்தை, இரண்டு மாதங்­கள் அதி­க­ரித்து, ஆகஸ்டு, 30 வரை தாக்­கல் செய்ய அனு­மதி வழங்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

நடைமுறை:
ஒரே படி­வத்­தின் மூலம், ஜி.எஸ்.டி., வரித்­தாக்­கல் செய்­யும் புதிய நடை­மு­றையை அறி­மு­கம் செய்­ய­வும், முடிவு எடுக்­கப்­பட்­டது. இந்த புதிய நடை­முறை, 2020 ஜன­வரி முதல் தேதியிலிருந்து, அம­லுக்கு வரும் என­வும் கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டது. இக்­கூட்­டத்­தில், மின்­னணு விலைப்­பட்­டி­யல் அமைப்பு, மின்­னணு அனு­மதி சீட்டு ஆகி­ய­வற்றை, ‘மல்­டி­பி­ளக்ஸ்’ வணி­கங்­களில் அனு­ம­திக்­க­வும் முடிவு செய்­யப்­பட்­டது. ஜி.எஸ்.டி., நெட்­வொர்க்­கில், வணி­கங்­களை பதிவு செய்ய, ஆதார் அடை­யாள அட்­டையை பயன்­ப­டுத்த­வும் முடிவு எடுக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, ஜி.எஸ்.டி., பதிவு, மேலும் எளி­தாக இருக்­கும்.

இக்­கூட்­டம் குறித்து, வரு­வாய்­ துறை செய­லர், அஷய் பூஷன் பாண்டே கூறி­ய­தா­வது: ­கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட மிக முக்­கி­ய­மான முடி­வு­களில் ஒன்று, ஜி.எஸ்.டி., பதிவை சுல­ப­மாக்­கி­யது. இதற்கு முன் பதிவு செய்­வ­தற்­காக, பல ஆவணங்களை தாக்­கல் செய்ய வேண்­டி­யி­ருந்­தது. இப்­போது, ஆதார் அடை­யாள எண்ணை பயன்­ப­டுத்­த முடிவு செய்­து உள்­ளோம். ஆதார் அடை­யாள அட்­டையை பயன்­ப­டுத்து­வ­தன் மூலம், வணி­கங்­க­ளுக்கு பல்­வேறு வச­தி­கள் கிடைக்­கும்.

ஒரு­வர், ‘ஆன்­லைன்’ மூலம் ஆதார் எண்ணை பயன்­ப­டுத்­தும்­போது, அவ­ருக்கு ஒரு முறை மட்­டும் வழங்­கப்­படும், கடவு எண் தரப்­பட்டு, அவரே ஜி.எஸ்.டி.என்., -தளத்­தில் பதிவு செய்து, அதற்­கான ஜி.எஸ்.டி.என்., பதிவு எண்ணை பெற்­றுக் கொள்­ள­லாம். இத­னால், அவ­ர­வர்­களே மிக எளி­தாக பதிவு செய்­து­கொள்ள இய­லும். இவ்­வாறு, அவர் கூறினார்.

முடிவுகள்:
நேற்று நடை­பெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட பிற முக்­கி­ய­மான முடி­வு­கள்: மிகை லாப தடுப்பு ஆணை­யத்­தின் பணிக்­கா­லம், மேலும் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. மிகை லாப தடுப்பு ஆணை­யம், ஜி.எஸ்.டி., வரி குறைப்­பின் பலன்­களை, நிறு­வ­னங்­கள், நுகர்­வோ­ருக்கு வழங்­கா­மல் இருப்­பது குறித்த புகார்­கள் சம்­பந்­த­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும். ஜி.எஸ்.டி., வரிக் குறைப்­பின் பலனை, நுகர்­வோ­ருக்கு வழங்­காத நிறு­வ­னங்­க­ளுக்கு, 10 சத­வீ­தம் அள­வுக்கு அப­ரா­த­மும் விதிக்­கப்­படும்.

மின் வாக­னங்­க­ளுக்­கான, ஜி.எஸ்.டி., வரியை, 12 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 5 சத­வீ­த­மாக குறைக்­கும் ஆலோ­சனை, உரிய குழு­வுக்கு அனுப்­பப்­படும். இக்­கு­ழு­வா­னது, மின் ­வா­க­னங்­க­ளுக்­கான வரியை குறைப்­ப­தில் மட்­டு­மின்றி, எலக்ட்­ரிக் சார்­ஜ­ருக்­கான வரியை, 18 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 12 சத­வீ­த­மாக குறைப்­பது குறித்­தும் முடிவு எடுக்­கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)