பதிவு செய்த நாள்
05 ஜூலை2019
23:53
வாஷிங்டன்:அமெரிக்காவில், கடந்த ஜூன் மாதத்தில், 2.24 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. அதேசமயம், வேலையின்மை, 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின், தொழிலாளர் துறையின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஜூன் மாதத்தில், கணிப்புகளுக்கு மாறாக, 2.24 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட பல பகுதிகளில், பணி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம்துடைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, பொருளாதாரம் மீண்டும் சரிவிலிருந்து உயர துவங்கி உள்ளது. ஆனால், இது பங்குச்சந்தைகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும். மே மாதத்தில், சரிவு நிலை இருந்ததால், அது ஜூன் மாதத்திலும் பிரதிபலிக்கும் என கணிக்கப்பட்டது. இதன் காரணமாக, மத்திய வங்கி, வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்த்திருந்தது சந்தை. ஆனால், இப்போது வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|