பதிவு செய்த நாள்
19 ஜூலை2019
04:57
புதுடில்லி: ‘நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும்’ என, ஆசிய மேம்பாட்டு வங்கி, முந்தைய கணிப்பிலிருந்து குறைத்து, அறிவித்துள்ளது.
இது குறித்து, ஆசிய மேம்பாட்டு வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில், இது, 7.2 சதவீதமாக இருக்கும். இருப்பினும் இது, ஏப்ரலில் கணிக்கப்பட்டதை விட குறைவாகும். கடந்த நிதியாண்டில், வளர்ச்சி சரிந்தது, இதற்கு முக்கிய காரணம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலிலும், இவ்வங்கி, தன் கணிப்பை குறைத்தே அறிவித்தது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து, ஏப்ரல் மாதத்தில் அறிவித்த போது, அதன் முந்தைய கணிப்பான, 7.6 சதவீதத்திலிருந்து, 7.2 சதவீதமாகக் குறைத்து, அறிவித்தது. இப்போது, 7 சதவீதமாக இருக்கும் என, அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|