தர சான்றிதழ் பெற நிதி ஒதுக்கீடுதர சான்றிதழ் பெற நிதி ஒதுக்கீடு ...  ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு  தாக்கல் செய்வதில் சுணக்கம் ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதில் சுணக்கம் ...
குறைந்தது மொத்த விலை பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலையில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
23:33

புது­டில்லி:நாட்­டின், மொத்த விலை பண­வீக்­கம், 25 மாதங்­களில் இல்­லாத அள­வுக்கு, ஜூலை மாதத்­தில், 1.08 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.எரி­பொ­ருட்­களின் விலை­யில் ஏற்­பட்ட சரிவே, மொத்த விலை பண­வீக்­கம் குறைய கார­ண­மாக அமைந்­துஉள்­ளது.


ஜூன் மாதத்­தில், மொத்த விலை பண­வீக்­கம், 2.02 சத­வீ­த­மாக இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
மேலும், ஜூலை மாதத்­தில், மொத்த விலை பண­வீக்­கம், 1.93 சத­வீ­த­மாக இருக்­கும் என்ற கணிப்­புக்கு மாறாக, 1.08 சத­வீ­த­மாக குறைந்­துள்­ள­து. ஜூலை மாதத்­தில், எரி­பொ­ருள் விலை சரி­வ­டைந்­ததை அடுத்து, உணவு மற்­றும் தயா­ரிப்பு பொருட்­கள் விலை­யும் குறைந்­தது.


இதை­ய­டுத்து, உணவு, எரி­பொ­ருள், தயா­ரிப்பு பொருட்­கள் ஆகி­ய­வற்­றின் விலை குறைந்­த­தன் கார­ண­மாக, மொத்த விலை பண­வீக்­க­மும் குறைந்­துள்­ளது.



மாற்றம்



உண­வுப் பொருட்­களின் பண­வீக்­கம், ஜூன் மாதத்­தில், 6.98 சத­வீ­த­மாக இருந்த நிலை­யில், ஜூலையில், 6.15 சத­வீ­த­மாக குறைந்­துஉள்­ளது.எரி­பொ­ருட்­களின் பண­வீக்­கம், ஜூன் மாதத்­தில் மைனஸ் 2.2 சத­வீ­த­மாக இருந்த நிலை­யில், கணக்­கீட்டு மாதத்­தில், மைனஸ் 3.64 சத­வீ­த­மாக குறைந்து, மாற்­றம் கண்­டுள்­ளது.இதே­போல், தயா­ரிப்பு பொருட்­களின் பண­வீக்­கம், ஜூன் மாதத்­தில், 0.94 சத­வீ­த­மாக இருந்த நிலை­யில், ஜூலை­யில், 0.34 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.



அடிப்­படை தேவை­க­ளுக்­கான பொருட்­களின் பண­வீக்­கம், ஜூன் மாதத்­தில், 6.72 சத­வீ­த­மாக இருந்­தது. இது, ஜூலையில், 5.03 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.இதே­போல், காய்­க­றி­களின் பண­வீக்­கம், 24.76 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 10.67 சத­வீ­த­மா­க­வும், பாலின் விலை, 0.91 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 0.28 சத­வீ­த­மா­க­வும், உரு­ளைக் கிழங்­கின் விலை, மைனஸ் 23.63 சத­வீ­த­மா­க­வும், ஜூலை மாதத்­தில் சரிவை கண்­டுள்ளன.


தயா­ரிப்பு பொருட்­களின் பிரி­வில், ரசா­ய­னம் மற்­றும் ரசா­யன தயா­ரிப்­பு­கள், 1.45 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 0.42 சத­வீ­த­மா­க­வும்; ஜவுளி, 2.67 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 1.36 சத­வீ­த­மா­க­வும், ஜூலை மாதத்­தில் குறைந்­துள்ளன.



ரெப்போ வட்டி



அடிப்­படை உலோ­கங்­களின் விலை­யும், மைனஸ் 4.27 சத­வீ­த­மாக சரிந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.இதற்­கி­டையே, நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்ட, சில்­லரை விலை பண­வீக்­கம் ஜூன் மாதத்­தில், 3.18 சத­வீ­தத்­தி­லி­ருந்து சற்று குறைந்து, ஜூலை மாதத்­தில், 3.15 சத­வீ­த­மாகி உள்­ளது.ரிசர்வ் வங்கி, அதன் வட்டி விகி­தம் குறித்த அறி­விப்பை, சில்­லரை பண­வீக்­கத்­தின்
அடிப்­ப­டை­யி­லேயே நிர்­ண­யிக்­கிறது.



வங்­கி­க­ளுக்கு வழங்­கும் கட­னுக்­கான, ரெப்போ வட்டி விகி­தத்தை, 0.35 சத­வீ­தம் குறைத்­துள்­ள­தாக, ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறி­வித்­தது.இந்த ஆண்­டில், நான்­கா­வது முறை­யாக வட்டி விகி­தத்தை, ரிசர்வ் வங்கி குறைத்து அறி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து, வட்டி விகி­த­மா­னது, 5.4 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.கடந்த, 2010 ஏப்­ரல் மாதத்­துக்­குப் பின், இது தான் மிகக் குறை­வான வட்டி விகி­தம்.



முக்­கிய காரணி



உணவு, எரி­பொ­ருள், தயா­ரிப்பு பொருட்­கள் ஆகிய மூன்­றின் விலை குறைவே, மொத்­த­விலை பண­வீக்­கம் குறைந்­த­தற்­கான முக்­கிய கார­ணி­யா­கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)