முதலீட்டு சூழலை மாற்ற வேண்டும் முதலீட்டு சூழலை மாற்ற வேண்டும் ... ஜி.டி.பி., 5.1 சதவீதம் ‘கிரிசில்’ கணிப்பு ஜி.டி.பி., 5.1 சதவீதம் ‘கிரிசில்’ கணிப்பு ...
பசியோடு பல லட்சம் வயிறுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2019
00:03

ஜி.டி.பி., எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜூலை முதல், செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில், 4.5 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என்ற செய்தி, பலரையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

இது, ஆறாண்டுகளில் இல்லாத சரிவு என்று பத்திரிகைகள் அச்சமூட்டுகின்றன. அரசு முதலீட்டைத் தவிர, இதர துறைகள் அனைத்திலுமே வளர்ச்சி தேங்கிப் போய்விட்டது. பொருளாதார வல்லுனர்களில் பலர், ‘சரிவை எதிர்பார்த்தோம்’ என்று சொல்லி, சூழ்நிலையை சகஜமாக எடுத்துக் கொள்வதும், மனதைத் தேற்றிக் கொள்வதும் ஆச்சரியம் அளிக்கிறது.

அவ்வளவு சகஜமான விஷயமா இது? ஜி.டி.பி.,யைப் புரிந்துகொண்டால், இதன் தீவிரம் புரியும்.

சகஜமா?

இந்தியாவில், 2018 – 19ல், சராசரியாக, தனிநபர் மாத வருமானம், 10 ஆயிரத்து, 534 ரூபாய். ஆண்டொன்றுக்கு, 5 சதவீத வளர்ச்சி இருக்குமானால், தனிநபர் மாத வருமானம், 526 ரூபாய் உயரும்.மேலும், 4 சதவீத வளர்ச்சி தான் என்றால், வருமானம், 421 ரூபாய் தான் உயரும். அதாவது, 1 சதவீத வளர்ச்சி சரிந்தால் கூட, மாத வருவாயில், 105 ரூபாய் குறைந்து போய்விடும். இதையே, ஆண்டொன்றுக்குக் கணக்கிட்டால், இழப்பு, 1,260 ரூபாய்.இது சராசரி கணக்கு.


இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம். ஏழை எளியவர்களின் மாத வருமானம் மென்மேலும் குறைந்து கொண்டே போகும்; வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். இந்தப் பின்னணியில், 4.5 சதவீதத்தைப் பாருங்கள். சென்ற ஆண்டு இதே காலாண்டில், 7 சதவீதம் அளவுக்கு வளர்ந்தோம். இப்போது, 2.5 சதவீதம் சரிவு என்றால், எவ்வளவு பேர் வறுமைக்கோட்டுக்குக்கீழே போயிருப்பர்? வேலையில்லாமல் தவிப்பர்? இதை எப்படி சகஜமாக எடுத்துக் கொள்வது?

நம்பிக்கை

தொடர்ச்சியாக ஆறு காலாண்டுகளாக நாம் சரிவைச் சந்தித்து வருகிறோம். இது, ‘பொருளாதார சரிவு இல்லை; மந்தநிலை தான்’ என்கிறார் மத்திய நிதி அமைச்சர். ‘தலைமை பொருளாதார ஆலோசகர் முதற்கொண்டு, பலரும், ‘நாம் தரை தட்டிவிட்டோம்; இனிமேல் வளர்ச்சி தான். ஆங்கில எழுத்தான, ‘வி’ வடிவில் நாம் மீண்டும் வீறுகொண்டு எழுவோம்’ என்று தெரிவிக்கின்றனர்.

இவர்களுடைய நம்பிக்கைக்கு காரணம், சமீபத்திய பண்டிகை காலம் தான். நுகர்வோர் பொருட்களின் விற்பனை தற்சமயம்பெருகியுள்ளது.மேலும், கடந்த இரண்டு மாதங்களாக, மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளும் இனிமேல் தான் பலன் அளிக்கத் துவங்கும்.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, வரும் மூன்றாவது காலாண்டு முடிவில், ஜி.டி.பி., மீண்டும் உயரும் என்று நம்புகின்றனர்.உயர்ந்தால் மகிழ்ச்சி தான்.ஆனால், அதற்கான முகாந்திரங்கள் தெரியவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.

செய்ய வேண்டியவை

அதனால், இன்னும் செய்ய வேண்டியவை அதிகமோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. எல்லார் பார்வையும், அரசை நோக்கியே திரும்பியுள்ளது. அடுத்த சில வாரங்களில், பின்வரும் நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

டிசம்பரில் வரவிருக்கும் நிதிக் கொள்கைக் குழு சந்திப்பில், ‘ரெப்போ’ விகிதத்தை மேலும் குறைத்தல் அவசியம். ஏனெனில், வங்கிகளில் நிதிப் புழக்கம்அதிகரிக்க வேண்டும். அதன் மூலம், அவர்கள் வழங்கும் கடன்களின் அளவும் அதிகரிக்கும்.ரெப்போ விகிதத்துக்கு ஏற்ப, வங்கிகளும், வாடிக்கையாளர் கடனுக்கான வட்டி விகிதங்களை மேலும் குறைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் தான், பெரும்பாலான அமைப்புசாரா தொழிலகங்களுக்கு நிதி உதவி அளிக்கின்றன. அவர்களுக்கு நிதி ஆதாரங்கள் பெருகுவதற்கான வழிமுறைகளை காண வேண்டும்.நிலக்கரியையும், ரத்தினக் கற்களையும், இன்னும் பல அத்தியாவசியமற்ற பொருட்களையும் இறக்குமதி செய்வதில் நாம் முன்னணியில் நிற்கிறோம். இதனால், ஏராளமான அன்னிய செலாவணி செலவாகிறது. இதைப் பெருமளவு குறைக்க வேண்டும்.

அடிப்படை உள்கட்டுமான திட்டங்களிலும், வளர்ச்சிப் பணிகளிலும், கூடுதல் நிதியைக் கொட்ட வேண்டும். ராணுவ அவசரத்தோடு, அத்திட்டங்கள்நிறைவேற்றப்பட வேண்டும். எண்ணெய் நிறுவனமான, பி.பி.சி.எல்., மற்றும் இன்னும் இரண்டு அரசுத் துறை நிறுவனங்களையும், தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே, ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்தியஅரசு பெருந்தொகை பெற்றுக்கொண்டுள்ளது.

இவற்றைக் கொண்டு, மக்கள் கையில் பணப் புழக்கத்தை அதிகப்படுத்துவது ஒன்றே தற்சமயம் நம்மிடம் இருக்கும் ஒரே வழிமுறை. ஏற்கனவே விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட 6,000 ரூபாயைப் போன்று, இன்னும் வேறு பிரிவினருக்கும் உதவித் தொகை வழங்கப் படலாம்.தனியார் துறை முதலாளிகளுக்கு தைரியம் அளிக்க வேண்டும். நுண், குறு, சிறு, நடுத்தர தொழிலகங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

அவசரம்

தற்சமயம், நிதிப் பற்றாக்குறை இலக்குகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை வளர்ச்சி. அதனால், பணவீக்கம் அதிகமானாலும் பரவாயில்லை என்று அரசு, தன் செலவுகளை அதிகப்படுத்தியும், வேகப்படுத்தியும் ஆகவேண்டும்.நிலைமை இன்னும் மோசமாக ஆவதைத் தடுப்பது ஒன்றே இப்போதைய தலையாய பணி.ஏனெனில், ஒவ்வொரு அரை சதவீத சரிவும், எங்கோ பல லட்சம் வயிறுகள் பசியோடு படுத்திருப்பதையே உணர்த்துகிறது.

ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்

pattamvenkatesh@gmail.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)