கமாடிட்டி சந்தைகமாடிட்டி சந்தை ... கமாடிட்டி சந்தை கமாடிட்டி சந்தை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
23:54

கச்சா எண்ணெய்

கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம், மூன்று வார உயர்வை எட்­டி­யது. சர்­வ­தேச சந்­தை­யில், ஒரு பேரல் விலை, 60 அமெ­ரிக்க டாலர் என்ற நிலை­யைக் கடந்­தது.

இம் மாதம் முதல் வாரத்­தில் நடை­பெற்ற, வளை­குடா எண்­ணெய் உற்­பத்தி நாடு­களின் கூட்­ட­மைப்பு மற்­றும் ஆசிய நாடு­களின் கூட்­டத்­தில், உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கையை மீண்­டும் அதி­க­ரிப்­பது என முடிவு செய்­யப்­பட்­டது.

எனவே, ஜன­வரி முதல், புதிய ஒப்­பந்த நடை­முறை அம­லுக்கு வரும். இதன்­படி, அதிக அள­வி­லான உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்கை அம­லுக்கு வரு­வ­தால், சந்­தை­யில் தட்­டுப்­பாடு நில­வும் என்ற அச்­சத்­தில், கடந்த சில வாரங்­க­ளா­கவே, விலை அதி­க­ரித்து வரும் போக்கு
காணப்­ப­டு­கிறது.

இதற்கு முன்பு இருந்த ஒப்­பந்­தப்­படி, தின­சரி உற்­பத்தி குறைப்பு, 12 லட்­சம் பேரல்­கள் ஆக இருந்­தது. இது ஒட்­டு­ மொத்த உலக உற்­பத்­தி­யில், 1.7 சத­வீ­த­மா­கும்.தற்­போது புதிய அறி­விப்பு கார­ண­மாக, உற்­பத்தி குறைப்பு, 21 லட்­சம் பேரல்­கள் ஆகும். இத­னால், சந்­தை­யில் தட்­டுப்­பாடு நில­வும் என்ற அச்­சத்­தில் விலை உயர்ந்து அதி­க­மா­னது.

மேலும், அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தார கார­ணி­களில் ஒன்­றான, அரசு துறை­யில் புதி­தாக பணிக்கு அமர்த்­தப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை குறித்த அறிக்கை, முந்­தைய வாரத்­தில் வெளி­யா­னது. இது, நவம்­பர் மாதத்­தில் எதிர்­பார்த்­ததை விட அதி­க­மா­க­வும், 10 ­மாத உயர்­வி­லும் இருந்­தது. இதை­ய­டுத்து, பொரு­ளா­தார வளர்ச்சி அதி­க­ரிக்­கும், அத­னால் தேவை உய­ரும் என்ற எதிர்­பார்ப்­பில், கச்சா எண்­ணெய் விலை உயர்ந்து வர்த்­த­கம் ஆனது.

அமெ­ரிக்­கா­வுக்­கும், சீனா­வுக்­கும் இடையே நடந்­து­ வ­ரும் வர்த்­தக மோதலை முடி­வுக்கு கொண்டு வரும் வகை­யில், அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து விவ­சாய பொருட்­களை,
சீனா இறக்­கு­மதி செய்ய ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது.உலக அள­வில், கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­தி­யில் முதன்­மை­யான நாடு சீனா­வா­கும். சீனா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி மற்­றும் தொழில்­துறை வளர்ச்சி, கச்சா எண்­ணெய் தேவை­யின் அளவை நிர்­ண­யிக்­கிறது. சீனா­வின் தேவை அதி­க­ரிக்­கும் போது, கச்சா எண்­ணெய் விலை உய­ரும்.

கஜ­கஸ்­தான் நாட்­டின் எண்­ணெய் உற்­பத்தி, கடந்த வாரத்­தில், 8 சத­வீ­தம் சரிந்து, 2.36 லட்­சம் டன் ஆனது. இந்­நாட்­டின் முக்­கிய எண்­ணெய் உற்­பத்தி குழா­யில் நடை­பெற்ற பரா­ம­ரிப்பு
பணி­கள் கார­ண­மாக, உற்­பத்தி சரிவு ஏற்­பட்­டது.
தங்கம் வெள்ளி

தங்­கம் மற்­றும் வெள்ளி, கடந்த வாரம் ஆரம்ப நாட்­களில் விலை சரிந்து வர்த்­த­கம் ஆகின.
அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தார கார­ணி­களில் ஒன்­றான, அரசு துறை­யில் புதி­தாக பணிக்கு அமர்த்­தப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை குறித்த அறி­விப்பு, கடந்த வாரம் வெளி­யா­னது.
இதில், நவம்­பர் மாதத்­தில், அதற்கு முந்­தைய 10 மாதங்­களில் இல்­லாத அள­வுக்கு,
எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தது. இது எதிர்­பார்த்­ததை விடஅதிக­மா­கும்.

இதை­ய­டுத்து, பொரு­ளா­தார வளர்ச்சி அதி­க­ரிக்­கும் என்ற கண்­ணோட்­டத்­தி­லும், மேலும், அமெ­ரிக்­கா­வுக்­கும், சீனா­வுக்­கும் இடையே நடந்து வந்த வர்த்­தக மோதல் குறித்த பேச்­சில் முன்­னேற்­றம் காணப்­படும் என்ற எதிர்­பார்ப்­பி­லும், தங்­கத்­தின் விலை சரிந்து வர்த்­த­கம் ஆனது.

இருப்­பி­னும், வார இறுதி நாட்­களில், இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக மோதல் உடன்­ப­டிக்­கை­யில் முன்­னேற்­றம் ஏற்­ப­டா­த­தால், முத­லீட்­டா­ளர்­கள், தங்­க­ளது முத­லீ­டு­களை பாது­காப்­பாக முத­லீடு செய்­யும் வகை­யில், தங்­கம் மீது ஆர்­வத்தை அதி­க­ரித்­த­னர். இத­னால், பொருள் வாணிப சந்­தை­யில், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை உயர்ந்து காணப்­பட்­டது.

கடந்த வாரத்­தில் நடை­பெற்ற, அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் வட்டி விகித குழு கூட்­டத்­தில், வட்டி விகி­தத்­தில் எந்­த­வித மாற்­ற­மும் செய்­யப்­ப­டா­மல், அதே நிலை நீடிக்­கும் என
அறி­விக்­கப்­பட்­டது.நடப்பு ஆண்­டில் இது­வரை, மூன்று முறை வட்டி விகி­தம் குறைக்­கப்­பட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­க­தா­கும். வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­டும்­போது, அரசு
கரு­வூ­லங்­களில் செய்­துள்ள முத­லீ­டு­களின் ஆதா­யம் குறை­யும்.

இத­னால், முத­லீட்­டா­ளர்­கள் தங்­கத்­தில் முத­லீடு­களை அதி­க­ரிப்­பர். இதன் கார­ண­மா­கவே, மே முதல் செப்­டம்­பர் வரை­யி­லான கால­கட்­டங்­களில்,தங்­கம் விலை உயர்ந்­தது. அதன்­பி­றகு, நவம்­பர் மற்றும் டிசம்­பர் மாதங்­களில் சற்று குறை­வாக காணப்­படு­கிறது.அமெ­ரிக்க
பொரு­ளா­தார வளர்ச்சி, எதிர்­பார்த்த அள­வில் உய­ரும்­போது, வட்டி விகி­தங்­கள் அதி­க­ரிக்க வாய்ப்பு உண்­டா­கும்.

பொது­வாக வட்டி விகி­த­மும், தங்­க­மும் எதிர்­மறை­யான போக்­கை கொண்­டவை. வட்டி
விகி­தம் உய­ரும்­போது, அரசு மற்­றும் அரசு சார்ந்த முத­லீ­டு­களில் ஆதா­யம் அதி­க­ரிக்­கும். இச் சூழ­லில், முத­லீட்­டா­ளர்­கள் அவற்­றில் முத­லீட்டை அதி­க­ரிப்­பது வாடிக்­கை­யா­கும். மாறாக, வட்டி விகி­தம் குறை­யும்­போது, முத­லீட்­டா­ளர்­கள், அதிக லாப­மீட்­டும் பொருட்­கள் மீது
முத­லீடு செய்­வர். இதில் தங்­கத்­தின் மீதான முத­லீடுமுத­லி­டம் வகிக்­கிறது.


செம்பு

செம்பு விலை, கடந்த வாரம் வாரம் ஆரம்­பம் முதலே அதி­க­ரித்து, வர்த்­த­கம் ஆனது.சீனா
மற்­றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே நடந்­து­வ­ரும் வர்த்­தக மோதல் குறித்த பேச்சு, பயன் தரும் என்ற எதிர்­பார்ப்­பில், பொருள் சந்­தை­யில், கனி­மங்­களில் சிறி­த­ளவு விலை உயர்வு காணப்­பட்­டது.

உலக அள­வில், அதிக அள­வில் கனி­மங்­கள் மற்­றும் தொழிற்­சாலை மூல­த­னப் பொருட்­களை உப­யோ­கிப்­ப­தில், சீனா முத­லி­டம் பிடிக்­கிறது. எனவே, இந்த நாட்­டின் ஏற்­று­ம­தி­யில் ஏற்­படும் ஏற்ற இறக்­கங்­கள், கனி­மங்­களின் விலை­க­ளி­லும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.நவம்­பர் மாதத்­தின் தொழில்­துறை வளர்ச்சி கடந்த மூன்று ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, சிறிய அள­வி­லான உயர்வை சந்­தித்­துள்­ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)