இரண்டாவது நாளாகவும் உச்சம் தொட்ட சந்தை இரண்டாவது நாளாகவும் உச்சம் தொட்ட சந்தை ...  பங்கு வெளியீடு: ஐ.ஆர்.எப்.சி., விண்ணப்பம் பங்கு வெளியீடு: ஐ.ஆர்.எப்.சி., விண்ணப்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீடுகள் நடப்பாண்டில் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2020
01:04

புதுடில்லி: இந்திய நிறுவனங்கள், கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், பங்கு வெளியீட்டின் மூலம், 2,400 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளதாக, இ.ஒய்.இந்தியா நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது.கடந்த ஆண்டில், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்திய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை மேற்கொண்டதன் மூலம், 2,400 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இக்காலகட்டத்தில் மொத்தம், 12 புதிய பங்கு வெளியீடுகள் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வளர்ச்சி

உலகளவில், இந்த காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, இந்தியா ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.கடந்த ஆண்டில் மொத்தம், 62 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பங்கு வெளியீடுகளை மேற்கொண்டதன் மூலம், மொத்தம், 17 ஆயிரத்து, 899 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையில், 54 சதவீதமும்; திரட்டப்பட்ட தொகையில், 62 சதவீதமும் குறைவு.நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு, சில்லரை வணிகம் ஆகிய துறைகளில், நான்கு பங்கு வெளியீடுகள், கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இதையடுத்து, வங்கி மற்றும் நிதிச் சந்தைகள் துறையில், மூன்று பங்கு வெளியீடுகளும்; தொழில் பொருட்கள் துறையில், இரண்டு வெளியீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு காரணமாக, நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.மேலும், வாகனம், ரியல் எஸ்டேட், தொலை தொடர்பு, நிதிச் சேவைகள் ஆகிய துறைகளுக்கு ஊக்க சலுகைகள் வழங்கி இருப்பதால், அத்துறை சார்ந்த நிறுவனங்கள் வளர்ச்சி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அன்னிய முதலீடுகளும் அதிகரித்து வருகிறது.ஆர்வம்சிறு மற்றும் நடுத்தர நிறுவன சந்தையில், கடந்த ஆண்டில், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், எட்டு புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், 32 ஆக இருந்தது. கடந்த ஆண்டில், செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை, ஒன்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டில், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனம், 9,250 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை கோரி உள்ளது.

இது போன்ற பெரிய பங்கு வெளியீட்டுக்கான முயற்சிகள், சந்தையில் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் இருப்பதையே காட்டுகின்றன.மேலும், ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் சி.எஸ்.பி., பேங்க் ஆகிய பங்கு வெளியீடுகள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.பொருளாதார மந்தநிலையை சரி செய்யும் வகையிலான அறிவிப்புகள், வரும் பட்ஜெட்டில் வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக, அதிக அளவிலான புதிய பங்கு வெளியீடுகளை இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)