எப்படி திட்டமிடப்படுகிறது ஐ.டி., ரெய்டு எப்படி திட்டமிடப்படுகிறது ஐ.டி., ரெய்டு ... எளிதா லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு? திருப்பூர் தொழில்துறை தலைநிமிரும் நேரம் இது எளிதா லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு? திருப்பூர் தொழில்துறை தலைநிமிரும் ... ...
பொள்ளாச்சி; சிறப்பு பொருளாதார நகரம்: மத்திய அரசு அங்கீகாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
10:21

பொள்­ளாச்­சி­யில், தென்னை நார் மற்­றும் நார் சார்ந்த, 750க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் உள்­ளன. இங்கு தயா­ரிக்­கப்­படும் கயிறு, தென்னை நார், நார் துகள் கட்­டி­கள் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.

தென்னை நாராக ஏற்­று­மதி செய்­வ­தோடு, அதனை மதிப்­புக்­கூட்­டப்­பட்ட பொரு­ளாக மாற்றி ஏற்­று­மதி செய்­வ­தில், லாபம் அதி­கம் கிடைக்­கிறது. இத­னால், தமி­ழ­கத்­தில் குறிப்­பாக, பொள்­ளாச்­சி­யில் இருந்து அதி­க­ளவு தென்னை நார் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கிறது. ஆண்­டுக்கு, 1,400 கோடி ரூபாய்க்கு தென்னை நார் மற்­றும் நார் சார்ந்த பொருட்­கள் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.பொள்­ளாச்சி தென்­னைக்கு புகழ் பெற்­றது போன்று, தென்னை நார் உற்­பத்­தி­யி­லும், ஏற்­று­ம­தி­யி­லும் சிறந்து விளங்­கு­வ­தால், ‘பொள்­ளாச்சி தென்னை நார் ஏற்­று­ம­திக்­கான சிறப்பு பொரு­ளா­தார நக­ரம்’ (டவுன் ஆப் எக்ஸ்­போர்ட் ஆப் எக்ஸ்­லன்ஸ்) என அறி­விக்க வேண்­டும் என்ற நீண்ட கால எதிர்­பார்ப்பு நில­வி­யது.

தென்னை நார் உற்­பத்­தி­யா­ளர்­கள், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், தொழில் வர்த்­தக சபை சார்­பில், பொள்­ளாச்சிஎம்.பி., சண்­மு­க­சுந்­த­ரத்­தி­டம் கோரிக்கை விடுத்­த­னர். மத்­திய அர­சி­டம் எம்.பி., வலி­யு­றுத்­தி­யதை தொடர்ந்து, சமீ­பத்­தில், ‘தென்னை நார் ஏற்­று­ம­திக்­கான சிறப்பு பொரு­ளா­தார நக­ரம்’ என்ற அந்­தஸ்தை மத்­திய அரசு வழங்­கி­யுள்­ளது.இதன் மூலம் சிறப்பு பலன்­கள் கிடைக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும்; வெளி­நா­டு­கள் இனி, பொள்­ளாச்­சியை திரும்பி பார்க்­கும் என தென்னை நார் உற்­பத்­தி­யா­ளர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

கயிறு வாரிய அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: ஆண்­டுக்கு, ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏற்­று­மதி செய்­யும் நக­ரத்­துக்கு, ஏற்­று­ம­திக்­கான சிறப்பு அந்­தஸ்து வழங்­கும். அந்த வகை­யில், தென்னை நார்மற்­றும் நார் சார்ந்த பொருட்­கள் ஏற்­று­ம­திக்­கான சிறப்பு பொரு­ளா­தார நக­ரம் என பொள்­ளாச்­சியை அறி­வித்­துள்­ளது.இதன் மூலம் பொள்­ளாச்­சிக்கு தென்னை நார் மற்­றும் நார் சார்ந்த பொருட்­கள் ஏற்­று­ம­திக்­கான திட்­டங்­கள்; அதற்­கான நிதி உத­வி­கள், தென்னை நார் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான வச­தி­கள் உரு­வா­கும்.மார்க்­கெட் நில­வ­ரம், சேமிப்பு கிடங்கு, தேசிய அள­வி­லான வர்த்­தக கண்­காட்சி மற்­றும் மதிப்­புக்­கூட்­டப்­பட்ட பொருட்­களை சந்­தைப்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட வச­தி­களும் மேம்­படும்.இவ்­வாறு, அதி­கா­ரி­கள் கூறி­னர்.


உலக வரைபடத்தில் இடம்பெறும்!நார் துகள் கட்டி தயா­ரிப்பு மற்­றும் ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க தலை­வர் மகேஷ்­கு­மார் கூறி­ய­தா­வது:பொள்­ளாச்­சி­யின் மீது அர­சின் கவ­னம் திரும்­பி­யுள்­ளது. கண்­டெய்­னர் முனை­யம், ஆய்­வுக்­கூ­டங்­கள் அமைக்க வாய்ப்­புள்­ளது.தென்னை மற்­றும் நார் தொழி­லுக்­காக பிரத்­யேக தொழில்­பேட்டை கொண்டு வர வாய்ப்­புள்­ளது. ஒரே இடத்­தில், தென்னை நார் தொழில் பூங்கா அமைக்­கப்­பட்­டால் எதிர்­கா­லத்­தில் பய­னாக இருக்­கும்.சீனா­வுக்கு தென்னை நாராக ஏற்­று­மதி செய்­யா­மல், பொள்­ளாச்­சி­யி­லேயே மதிப்­புக்­கூட்­டிய பொரு­ளாக மாற்றி ஏற்­று­மதி செய்­தால், லாபம் கிடைக்­கும். அன்­னிய செலா­வணி, 10 மடங்கு அதி­க­ரிக்­கும். கயிறு தொழில் ஏற்­று­மதி தலை­ந­க­ர­மாக பொள்­ளாச்­சியை உலக வரை­ப­டத்­தில் மாற்ற வேண்­டும். இதற்­கான அடித்­த­ள­மாக மத்­திய அரசு வழங்­கி­யுள்ள அந்­தஸ்தை கரு­து­கி­றோம்.இவ்­வாறு, அவர் கூறி­னார்.
வேலைவாய்ப்பு பெருகும்மத்­திய அர­சின் கயிறு வாரிய உறுப்­பி­னர் கவு­த­மன் கூறி­ய­தா­வது:சிறப்பு அந்­தஸ்து வழங்­கப்­பட்­டுள்­ள­தால், மத்­திய, மாநில அர­சு­க­ளி­டம் இருந்து பொது­வான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் மேம்­ப­டுத்த நிதி உதவி கிடைக்­கும். தேசிய அள­வி­லான கண்­காட்சி நடத்­த­வும்; பயிற்சி கூடம் அமைக்­க­வும் வாய்ப்­புள்­ளது.பொள்­ளாச்­சி­யில் இருந்து, 10 – 20 நிறு­வ­னங்­கள் ஒன்­றாக இணைந்து வெளி­நா­டு­க­ளுக்கு சென்று காட்­சிப்­ப­டுத்­த­வும்; வெளி­நா­டு­களில் கண்­காட்சி கூடம் அமைக்­க­வும் நிதி உதவி கிடைக்க வாய்ப்­புள்­ளது.வங்கி கடன் பெறு­வ­து எளி­தா­கும். ஏற்­று­மதஅதி­க­ரிக்­கும் போது, வட்டி விகி­தம் குறைய வாய்ப்­புள்­ளது. படித்து வேலை­யில்­லா­மல் உள்ள இளை­ஞர்­கள், கயிறு வாரி­யம் மூல­மாக பயிற்சி எடுத்­துக்­கொள்­ள­லாம். மதிப்­புக்­கூட்டு பொருட்­கள் தயா­ரிப்பு அதி­க­ரிக்­கும். வேலை­வாய்ப்பு அதி­க­ரிக்­கும்.இவ்­வாறு, அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)