பொள்ளாச்சி; சிறப்பு பொருளாதார நகரம்: மத்திய அரசு அங்கீகாரம்பொள்ளாச்சி; சிறப்பு பொருளாதார நகரம்: மத்திய அரசு அங்கீகாரம் ...  பங்கு வெளியீட்டுக்கு வரும் செபியிடம் விண்ணப்பம் பங்கு வெளியீட்டுக்கு வரும் செபியிடம் விண்ணப்பம் ...
எளிதா லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு? திருப்பூர் தொழில்துறை தலைநிமிரும் நேரம் இது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
10:23

பல நேரங்­களில், எதிர்­பார்ப்­பு­கள் நடப்­ப­தில்லை. இந்த நிதி­யாண்­டில், நாட்­டின் ஆயத்த ஆடை ஏற்­று­மதி சரி­வைச் சந்­தித்­தி­ருக்­கிறது. நிதி­யாண்டு துவக்­கத்­தில் உயர்ந்து வந்த ஏற்­று­மதி, பின்­னர் ஏனோ சரி­யத் துவங்­கி­யது. நிதி­யாண்டு நிறை­வ­டைய, இன்­னும் ஒரு மாதமே பாக்கி. கடந்த நிதி­யாண்­டில், ஆடை ஏற்­று­மதி மதிப்பு, 1.13 லட்­சம் கோடி ரூபாய்; இந்த நிதி­யாண்­டில், ஏப்., முதல் ஜன­வரி வரை­யி­லான பத்து மாதங்­களில், 90 ஆயி­ரத்து 841 கோடி­யைத் தான் எட்­டி­யி­ருக்­கிறது. கடந்த நிதி­யாண்டு வர்த்­த­கத்தை, இந்த நிதி­யாண்­டில் எட்­டிப்­பி­டிக்க முடி­யுமா என்­பது சந்­தேமே.

வழக்­க­மாக, ஜன., முதல் மார்ச் வரை, ஏற்­று­மதி வர்த்­த­கம் எழுச்சி பெறும். ஆனால், இந்த முறை ஏமாற்­றத்­தையே தந்­தி­ருக்­கிறது.எம்.இ.ஐ.எஸ்., எனப்­படும், ‘மெர்ச்­சண்­டைஸ் எக்ஸ்­போர்ட்ஸ் இந்­தியா ஸ்கீம்’ என்ற திட்­டம் ரத்து செய்­யப்­பட்­ட­தும், ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., எனப்­படும் மத்­திய, மாநில வரி­க­ளைத் திரும்­பப் பெறு­வ­தற்­கான சலு­கையை வழங்­கு­வ­தில் தாம­தம் ஏற்­பட்­ட­தும் இதற்­குப் பிர­தா­னக் கார­ணங்­க­ளாக ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.‘வங்­க­தே­சம், வியட்­நாம், கம்­போ­டியா உள்­ளிட்ட நாடு­கள் வரிச்­ச­லு­கை­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­கின்­றன. இந்­தி­யா­வுக்கு, இந்த வாய்ப்பு இல்­லா­த­தால், ஆடை ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கடும் நெருக்­க­டி­யைச் சந்­திக்­கின்­ற­னர். இது­தான் ஏற்­று­மதி சரிந்­த­தற்­கான பின்­னணி’ என்­கின்­ற­னர் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள்.‘கொரோனா’ வைரஸ் பாதிப்­பால், சீனா­வுக்­கான ஆர்­டர்­கள் வேறு நாடு­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன. இதில், இந்­தி­யா­வுக்­கும் ஆர்­டர்­கள் கைகூ­டும். இருப்­பி­னும், இந்த நிதி­யாண்டு வர்த்­த­கத்­தில் இது பிர­தி­ப­லிக்க வாய்ப்­பில்லை. இருப்­பி­னும், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்­பால், ஆர்­டர்­கள் கிடைப்­பது என்­பது தற்­கா­லி­க­மா­ன­து­தான். அதே­ச­ம­யம், இவ்­வாறு கிடைக்­கும் ஆர்­டர்­கள் மூலம், வர்த்­த­கர்­க­ளுக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­னால், ஆர்­டர்­கள் தொடர்ந்து கிடைப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் உரு­வா­கும்.

உயர்த்தலாம் ஏற்றுமதியை...சமீ­பத்­தில் நடந்த ‘வெற்­றிப்­பா­தை­யில் திருப்­பூர் –2020’ நிகழ்ச்­சி­யில் தெரி­விக்­கப்­பட்ட வல்­லு­னர்­க­ளின் கருத்­து­கள், ஆக்­க­பூர்­வ­மான முறை­யில் செயல்­ப­டுத்­தப்­பட்­டால், திருப்­பூர் உட்­பட நாட்­டின் ஆடை உற்­பத்தி நக­ரங்­கள், ஏற்­று­ம­தியை எளி­தாக உயர்த்த முடி­யும்.‘‘திருப்­பூர் தொழில்­து­றை­யி­னர், தொழில் நடத்த, 60 சத­வீத நேரத்­தை­யும், தொழில் மேம்­பாட்­டுக்கு, 40 சத­வீ­தத்­தை­யும் செல­விட வேண்­டும். ஆனால், முழு நேரத்­தை­யும், ஆர்­டர் அனுப்­பவே செல­வி­டு­கின்­ற­னர்.உற்­பத்தி திறன் மேம்­பாட்டு நுட்­பங்­களை திருப்­பூ­ரில் சோதனை செய்து பார்த்­த­போது, ஓரிரு நாட்­க­ளி­லேயே, நிறு­வ­னத்­தின் உற்­பத்தி திறன் 26 சத­வீ­தம் அதி­க­ரித்­தது; தொழி­லா­ளர் விடுப்பு எடுக்­கும் விகி­தம் குறைந்­த­தை­யும் காண­மு­டிந்­தது.

இயந்­தி­ரங்­கள் வாங்­கு­வது, பரா­ம­ரிப்­ப­தற்கு முத­லீடு செய்­வ­தைப்­போல், மனி­த­வள மேம்­பாட்­டுக்­கா­க­வும் நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­ய­வேண்­டும். முத­லி­லேயே சரி­யா­கத் தயா­ரிப்­ப­து­தான், உண்­மை­யான தரம். இதன்­மூ­லம், காலம் மற்­றும் பொருள் விர­யத்தை தவிர்க்­க­மு­டி­யும்; குறித்த காலத்­துக்­குள் ஆடை­களை தயா­ரித்து வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­பி­வைக்க முடி­யும். புது­மை­யான டிசைன்­களை உரு­வாக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு அதி­க­ள­வில் ஆடை தயா­ரிப்­புக்­கான ஆர்­டர்­கள் கிடைக்­கும்.மின் கட்­ட­ணம், தொழி­லா­ளர் சம்­ப­ளம் போன்ற செல­வி­னம், இந்­தி­யாவை விட சீனா­வில் உயர்ந்­துள்­ளது. இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள், உற்­பத்தி திறன் மற்­றும் தரம் மேம்­பாட்­டில் கவ­னம் செலுத்த வேண்­டும். தற்­போ­துள்ள சர்­வ­தேச சந்தை நில­வ­ரத்தை பார்க்­கும் போது, உற்­பத்தி திறனை அதி­க­ரித்து, செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­தி­னால், இந்­தியா, 20 சத­வீத வளர்ச்சி பெறு­வது எளி­தா­கும்’’கருத்­த­ரங்­கில் தெரி­விக்­கப்­பட்ட இக்­க­ருத்­து­களை, செயல்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யம், திருப்­பூர் தொழில்­து­றை­யி­ன­ருக்கு இருக்­கிறது.இதன்­மூ­லம், லட்­சம் கோடி ரூபாய் வர்த்­தக இலக்கை எட்­டிப்­பி­டிப்­பது எளிய பய­ண­மல்ல தான்; ஆனால், முடி­யா­த­தல்ல. திருப்­பூர் தொழில்­துறை தலை­நி­மிர வேண்­டிய நேரம் இது!

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)