பதிவு செய்த நாள்
19 பிப்2020
06:34
புதுடில்லி : உலகின், ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா உருவாகி இருப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ’உலக மக்கள் தொகை ஆய்வு’ எனும் தனியார் அமைப்பு, இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2019ம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் ஆகியவற்றை விஞ்சி, 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்து உள்ளது.இந்தியா, இதற்கு முன் இருந்த தன்னிறைவு கொள்கையிலிருந்து, திறந்த சந்தை பொருளாதாரத்துக்கு மாறி வளர்ந்து வருகிறது. இந்திய பொருளாதாரம், 2019ம் ஆண்டில், 209 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் ஆகியவற்றை விஞ்சி, ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், 201 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாகவும், பிரான்ஸ், 193 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாகவும் உள்ளது. இந்தியாவின் சேவைகள் துறை, உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தில், இது, 60 சதவீதமாகவும்; வேலை வாய்ப்பில், 28 சதவீதமாகவும் உள்ளது. சேவைகள் துறை தவிர, தயாரிப்பு துறை மற்றும் விவசாயத் துறை ஆகியவையும் இந்திய பொருளாதாரத்தில், குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|