பதிவு செய்த நாள்
21 பிப்2020
02:44
சென்னை : எல்., அண்டு டி., குழுமம், அதன் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதமாக, சென்னையில் உள்ள அதன் அலுவலகத்தில், அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த காட்சியகத்தில், நிறுவனம் கடந்து வந்த பாதைகளை விளக்கும் வகையிலான அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த அருங்காட்சியகத்துக்கு, ‘லார்சன் அண்டு டூப்ரோ’வின் நிறுவனர், ஹென்னிங் ஹோல்க் லார்சனை கவுரவிக்கும் விதமாக, எச்.எச்.எல்., மையம் என பெயரிடப்பட்டுள்ளது.இந்த அருங்காட்சியகமானது, சமீபத்திய, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பம் மற்றும் தளங்களைப் பயன்படுத்தி, மிகச் சிறப்பாக நிறுவனத்தின் சாதனைகளை, கதைகளை சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று தளங்களில், 12 ஆயிரம் சதுர அடியில், எல்., அண்டு டி., நிறுவனத்தின், 80 ஆண்டு கால வரலாற்றை சொல்லும் விதத்தில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 10 அடி தொடு எல்.இ.டி., வீடியோ சுவரின் மூலமும், நிறுவனத்தின் மைல்கற்களை விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|