கொரானா அச்சம்.... தங்கம் உச்சம் - சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியதுகொரானா அச்சம்.... தங்கம் உச்சம் - சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது ... ’தொலைதொடர்பு நிறுவனங்களை யாரும் கொல்ல விரும்பவில்லை” ’தொலைதொடர்பு நிறுவனங்களை யாரும் கொல்ல விரும்பவில்லை” ...
உலகின் 3வது பொருளாதாரமாக இந்தியா மாறும்: முகேஷ் அம்பானியின் திடமான பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2020
05:45

மும்பை: உல­கின் மூன்­றா­வது மிகப் பெரிய பொரு­ளா­தா­ர­மாக இந்­தியா உய­ரும் என, ‘ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ்’ தலை­வர் முகேஷ் அம்­பானி கூறி­உள்­ளார்.

மும்­பை­யில் நடை­பெற்ற, தலைமை செயல் அதி­கா­ரி­கள் மாநாட்­டில் பங்­கேற்று, ‘மைக்­ரோ­சாப்ட்’ நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி சத்ய நாதெள்­ளா­வு­டன் உரை­யா­டி­ய­போது, முகேஷ் அம்­பானி கூறி­ய­தா­வது:

இந்­தியா, உல­க­ள­வில் மூன்­றா­வது பெரிய பொரு­ளா­தார வலிமை கொண்ட நாடாக மாறும். அது, ஐந்து ஆண்­டு­க­ளிலா அல்­லது 10 ஆண்­டு­க­ளிலா என்­ப­தில் வேண்­டு­மா­னால் மாற்­றுக் கருத்­து­கள் இருக்­க­லாம். மேலும், இந்­தியா முதன்மை, ‘டிஜிட்­டல்’ சமு­தா­ய­மாக மாறு­வ­தற்­கான வாய்ப்பு கொண்­ட­தா­க­வும் உள்­ளது.

இந்த மாற்­றத்­துக்கு முக்­கிய கார­ணம், ‘மொபைல் நெட்­வொர்க்’ வளர்ச்சி அடைந்து வரு­வது தான். மொபைல் நெட்­வொர்க், முன்­பை­விட வேக­மாக தற்­போது உள்­ளது. பிர­த­மர் மோடி, ‘டிஜிட்­டல் இந்­தியா’ எனும் திட்­டத்­தின் மூலம், இத்­த­கைய வளர்ச்­சியை துாண்டி­விட்­டார்.

இதன் கார­ண­மாக, இப்­போது, 38 கோடி மக்­கள், ‘ஜியோ’வின், ‘4ஜி’ தொழில்­நுட்­பத்­துக்கு மாறி இருக்­கின்­ற­னர். ஜியோ வரு­வ­தற்கு முன், இணைய வேகம், 256 கே.பி.பி.எஸ்., ஆக இருந்­தது. ஆனால், ஜியோ­வின் வரு­கைக்­குப் பின், வேகம், 21 எம்.பி.பி.எஸ்., ஆக அதி­க­ரித்­துள்­ளது.அமெ­ரிக்­கா­வின் முன்­னாள் அதி­பர்­க­ளான, ஜிம்மி கார்ட்­டர், பில் கிளின்­டன், ஒபாமா ஆகி­யோர் இந்­தி­யா­வுக்கு வந்­த­போது இருந்த நிலையை விட, இப்­போது டிரம்ப் வரும்­போது நாட்­டின் நிலை மிக­வும் மாறி­விட்­டது.

இதற்கு, மொபைல் இணைப்பு மிக முக்­கிய கார­ண­மாக அமைந்­துள்­ளது. இந்­தியா, மூன்­றா­வது மிகப் பெரிய பொரு­ளா­தா­ர­மாக மாறும் என்­ப­தில் எனக்கு எந்த சந்­தே­க­மு­மில்லை.

நாம் இதற்கு முன் பார்த்­தது போல் இல்­லா­மல், அடுத்த தலை­முறை முற்­றி­லும் வித்­தி­யா­ச­மான இந்­தி­யாவை காணும்.இவ்­வாறு அவர் பேசி­னார்.

இம்­மா­நாட்­டில் பங்­கேற்ற, மைக்­ரோ­சாப்ட் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி சத்ய நாதெள்ளா கூறி­ய­தா­வது: இந்­திய தலைமை செயல் அதி­கா­ரி­கள், தங்­கள் சொந்த தொழில்­நுட்ப திறனை வளர்த்­துக் கொள்ள வேண்­டும். மேலும், தொழில்­நுட்ப தீர்­வு­கள் குறித்­தும் அறிந்­தி­ருப்­பதை உறுதி செய்­து­கொள்ள வேண்­டும்.

கடந்த, 10 ஆண்­டு­களில், வேக­மா­கச் செயல்­பட்­ட­வர்­களை கண்­டோம். ஆனால், அது மட்­டும் போதாது. டிஜிட்­டல் மய­மாக்­கு­வ­தால், உற்­பத்­தித் திறனை அதி­க­ரிக்க, அது வழி­வ­குக்­கும் என்­பதை நாம் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

இந்­தி­யா­வில், மென்­பொ­ருள் பொறி­யா­ளர்­க­ளுக்­கான, 72 சத­வீத வேலை­கள், தொழில்­நுட்­பம் அல்­லாத பிற துறை­களில் தான் உள்ளன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)