‘கொரோனா’ நெருக்­கடி கற்­றுத்­த­ரும் முத­லீடு பாடங்­கள்‘கொரோனா’ நெருக்­கடி கற்­றுத்­த­ரும் முத­லீடு பாடங்­கள் ...  ‘வாட்ஸ் ஆப்’பில் சேவை ஐ.சி.ஐ.சி.ஐ., அறிமுகம் ‘வாட்ஸ் ஆப்’பில் சேவை ஐ.சி.ஐ.சி.ஐ., அறிமுகம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தடை­யில்­லா­மல் நிதிச்­சே­வை­களை தொடர ‘டிஜிட்­டல்’ வழி­கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2020
01:50

இந்­தி­யா­வில் டிஜிட்­டல் சேவை­கள் சூழல், அண்மை காலங்­களில் மேம்­பட்டு வரு­கிறது. பண பரி­வர்த்­தனை உள்­ளிட்ட சேவை­களை டிஜிட்­டல் முறை­யில் மேற்­கொள்ள முடி­கிறது. முத­லீ­டு­க­ளை­யும் டிஜிட்­டல் முறை­யில் மேற்­கொள்­ள­லாம். தற்­போது, கொரோனா தற்­காப்புக்­காக வீட்­டி­லேயே இருக்க வேண்­டிய நிலை­யில், முக்­கிய நிதிச்­சே­வை­களை தடை­யில்­லா­மல் தொடர்­வ­தற்கு, டிஜிட்­டல் வச­தி­களை பயன்­ப­டுத்­திக் ­கொள்­ள­லாம்.


வங்­கி ­சேவை:


வங்­கி ­சேவை அத்­தி­யா­வ­சிய சேவை­கள்கீழ் வரு­கிறது. எனவே, கிளை­கள் இயங்­கும். அவ­சர
தேவை தவிர, மற்ற பரி­வர்த்­த­னை­களை இணை­யம் மூலம் மேற்­கொள்­ள­லாம். ‘ஆன்­லைன்’ வங்­கி ­சே­வையை, வங்கி இணை­ய­த­ளம் அல்­லது அதி­கா­ரப்­பூர்வ செயலி மூலம் அணுகலாம்.

காப்­பீடு:


காப்­பீடு நிறு­வ­னங்­கள் பாலிசி தொகை செலுத்தஅவ­கா­சம் அளித்­துள்­ளன. காப்­பீடு சேவை­களை டிஜிட்­டல் மூலம் பெற­லாம். பல நிறு­வ­னங்­கள், ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லா­க­வும்,காப்­பீடு தொடர்­பான தக­வல்­கள் வழங்­கு­கின்­றன. புதியமருத்­துவ பாலிசி பெற விரும்­பி­னால், நிறு­வன தளங்­கள் மூலம் ஆன்­லை­னி­லேயே வாங்­கிக் ­கொள்­ள­லாம்.

பண­ ப­ரி­வர்த்­தனை:

பணம் அனுப்­பு­தல் மற்­றும் பில் செலுத்­து­தல் போன்­ற­வற்றை, இவற்­றுக்­கான டிஜிட்­டல் செய­லி­கள் மூலம் மேற்­கொள்­ள­லாம். டிஜிட்­டல் பண பரி­வர்த்­த­னை­யில், யு.பி.ஐ., சார்ந்த வசதி சிறந்­த­தாக கரு­தப்­ப­டு­கிறது. ஏ.டி.எம்.,மையங்­க­ளுக்கு செல்­வ­தை­யும் தவிர்க்­க­லாம். மொபைல் ரீசார்ஜ் போன்­ற­வற்­றை­யும், செயலி மூலம் செய்து கொள்­ள­லாம்.


மியூச்­சு­வல் பண்ட்:


மியூச்­சு­வல் முத­லீட்­டா­ளர்­கள் தங்­க­ளுக்கு தேவை­யான தக­வல்­களை, வங்­கி­கள் அல்­லது ஆலோ­ச­கர்­கள் மூலம் தொலை­பேசி வழியே தெரிந்து கொள்­ள­லாம். இணை­யம் மூலமே மியூச்­சு­வல் பண்­டு­களில் முத­லீடு செய்­ய­லாம்.பேடி­எம் ­மணி, மொபி­கு­விக், ஸ்கி­ரிப்­பாக்ஸ் உள்­ளிட்­டவைஇந்த சேவையை அளிக்­கின்­றன.

என்.பி.எஸ்.:


தேசிய பென்­ஷன் திட்­ட­மான, என்.பி.எஸ்.,முத­லீட்­டா­ளர்­கள், யு.பி.ஐ., மேடை மூலம் முத­லீடு செய்­ய­லாம். புதிய கணக்கு துவக்க விரும்­பு­கி­ற­வர்­கள், என்.பி.எஸ்.,இணை­ய­த­ளம் மூலம் கணக்கு துவங்­க­லாம். நிதிச்­சே­வை­களை டிஜிட்­டல் மூலம் அணு­கும் வாய்ப்பை, கொரோனா
பாதிப்பு காலத்­தில் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)