இந்தியன் வங்கி இணைப்பு சர்வர் பிரச்னையால் சிக்கல் இந்தியன் வங்கி இணைப்பு சர்வர் பிரச்னையால் சிக்கல் ...  அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பு அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 4 சதவீதமாக குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2020
23:19

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி கொரோனா வைரஸ் பாதிப்பால், நடப்பு நிதியாண்டில், 4 சதவீதமாக குறையும் என, ஏ.டி.பி., எனும், ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து, இவ்வங்கியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நாம், எதிர்பாராத சவாலான காலகட்டத்தை எதிர்நோக்கி உள்ளோம். வைரஸ் தாக்குதல், மக்களின் வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அது மட்டுமின்றி வணிகத்தையும், பொருளாதார நடவடிக்கைகளையும் மிகவும் சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

வைரஸ் தாக்குதலால், இந்தியாவின் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில், 4 சதவீதம் என்ற குறைவான அளவிலேயே வளர்ச்சியை எட்டும்.வைரஸ் தாக்குதல், இந்தியாவில் இன்னும் முழுமையாக பரவவில்லை. வைரஸ் தாக்குதலும், மந்தமான உலக பொருளாதார நிலையும் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் உள்ளது.

கார்ப்பரேட் வரி, வருமான வரி ஆகியவற்றை குறைத்தது, நிதி துறையில் சீர்திருத்தங்கள் செய்தது ஆகியவற்றின் பலனை, இந்த வைரஸ் தாக்கம் தடுப்பதாக இருக்கிறது. இத்தகைய கடுமையான மந்தநிலையால், இந்தியாவின் வளர்ச்சி, கடந்த நிதியாண்டில், 6.1 சதவீதம் என்பதிலிருந்து, 5 சதவீதமாக குறைந்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 4 சதவீதமாக குறையும். அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி, 6.2 சதவீதமாக பலம் பெறும்.தெற்காசியாவை பொறுத்தவரை, நடப்பு ஆண்டில், வளர்ச்சி, 4.1 சதவீதமாகவும்; 2021ல், 6 சதவீதமாகவும் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)