ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.12 லட்சம் கோடியை தாண்டியது ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.12 லட்சம் கோடியை தாண்டியது ...  ஜூன் மொத்தவிலை பணவீக்கம்  , 1.81 சதவீதமாக குறைவு ஜூன் மொத்தவிலை பணவீக்கம் , 1.81 சதவீதமாக குறைவு ...
‘கிப்ட்’ பெற்றால் வரி செலுத்த வேண்டுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
19:47

பன்முகத்தன்மை கொண்ட பண்டிகைகள் நிறைந்த, நமது இந்திய பண்பாட்டில், விழாக்கள், விருந்துகளுக்கு பஞ்சமே இருந்ததில்லை. கொரோனா காலம் தவிர, மாதந்தோறும் பண்டிகைகள், இல்லந்தோறும் விழாக்கள் இருப்பதுண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை, ஜாதி, மதம், மாநிலங்களுக்கு ஏற்ப சடங்குகள் இருக்கின்றன. அதில் ‘செய்முறை’கள் உண்டு. நகையாக, பணமாக, பொருளாக, கார்கள், வீடுகள், நிலம் என, பரிசளிப்பது உண்டு.

எந்த விழா நோக்கம் இல்லாவிட்டாலும், நமது மாவட்டங்கள் சிலவற்றில், ‘மொய் விருந்து’ நடப்பதும், பழக்கத்தில் இருந்து வருகிறது. பொது ஜனங்களுக்கே இத்தனை மொய் வாய்ப்புகள் என்றால், பிரபலங்கள், முக்கிய புள்ளிகள், அரசியல் தலைவர்களை பற்றி கேட்கவே வேண்டாம்; பரிசுப்பொருள் குவியும். பல நேரங்களில் பரிசுப்பொருளாக வந்ததற்கு, சரியாக கணக்கு சொல்லவில்லை என்று, பிரபலங்கள் வழக்குகளை சந்தித்ததும் கூட நடந்ததுண்டு. இப்படி வந்து குவியும் பரிசு பொருட்களுக்கும் வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து, உங்களுக்கு தெரியுமா?. அதுபற்றி காண்போம்.

வெகுமதி ஒரு வருமானமா?
ரூ.50 ஆயிரத்துக்கு மேல், ஒரு நபரிடம் இருந்து ஒருவர், பொருளாகவோ அல்லது ரொக்கமாகவோ அன்பளிப்பு பெற்றிருந்தால், அந்த அன்பளிப்பு வருமானமாக கருதப்பட்டு, அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், ரத்த சொந்தங்களிடமிருந்து பெற்ற பணத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது, அசையும் அல்லது அசையா சொத்தாகவோ இருக்கலாம். ஆனால், அதன் மதிப்பு, 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால், வருமான வரிச்சட்டத்தின் படி, அதற்கு வரி செலுத்த வேண்டும். தவிர, சொத்தின் மார்க்கெட் விலையை விட குறைவாக விற்றால், அதற்கிடையே உள்ள வித்தியாசம் வருமானமாக கருதப்படும். உதாரணமாக, ரூ.50 லட்சம் ஸ்டாம்ப் டூட்டி மதிப்புள்ள சொத்தை, ரூ.30 லட்சத்துக்கு விற்றால், மீதமுள்ள, 20 லட்சம் வெகுமதியாக கணக்கிடப்பட்டு வரி செலுத்த நேரிடும்.

முதன்முதலில், இந்தியாவில், 1958ல் வெகுமதி வரிச்சட்டம் (ஜி.டி.ஏ.,) அமல்படுத்தப்பட்டது. 1998ல் இந்தச் சட்டம் நீக்கப்பட்டு, 2004ம் ஆண்டு, பல வரிச் சீர்த்திருத்தங்களுடன் மீண்டும் உயிர் பெற்றது.

யாரின் பரிசுகளுக்கு வரி விலக்கு?l
உங்களுடைய மனைவி.l
உங்களுடைய சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை.
உங்கள் மனைவியின் சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை.
உங்கள் பெற்றோரின் சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை.
உங்களின் அல்லது உங்கள் வாழ்க்கைத்துணையின் நேரடியான உறவுமுறை (பெற்றோர், தாத்தா, பாட்டி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள்) அல்லது வழித்தோன்றல்கள் (குழந்தைகள், பேரப்பிள்ளைகள்).

என்னென்ன அன்பளிப்புகளுக்கு வரியில்லை?
திருமணத்தின்போது பெறும் அன்பளிப்புகள்.
வரையறுக்கப்பட்ட உறவினர்களிடமிருந்து பெறும் அன்பளிப்புகள்.
உயில் வாயிலாக பெறப்படும் பூர்வீக சொத்துகள்.
என்.ஆர்.ஐ., கணக்கு வாயிலாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள், தங்கள் பெற்றோருக்கு அளிக்கும் அன்பளிப்பு. அன்பின் அடிப்படையில் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தரப்படும் வெகுமதி, வரிக்கு உட்படாதது. ஆனால், அது வருமான வரிச்சட்டத்தில் வரையறுக்கப்பட்ட உறவுகளாக இருக்க வேண்டும்.

திருமணத்துக்கு முன், பின்..
உதாரணமாக, சீனிவாஸ் என்பவரின் திருமணத்துக்கு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து, ரூ.10 லட்சத்துக்கும் மேல் அன்பளிப்பு பெற்றிருந்தாலும், அதற்கு வெகுமதி வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும், சீனிவாஸ், அவரது மனைவிக்கு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் பரிசாக வழங்கினால், அதற்கு வரியுண்டா என்றால், இல்லை. ஆனால், அதுவே, திருமணத்துக்கு முன் அவரது வருங்கால மனைவிக்கு அன்பளிப்பு வழங்கியிருந்தால், அது வருமானமாக கருதப்பட்டு அதற்கு வரி செலுத்த வேண்டும். ஏனென்றால், திருமணத்துக்கு முன், இவர்கள், உறவு என்ற வரையறையின் கீழ் வரமாட்டார்கள்.

ரொக்கம் அல்லாத அன்பளிப்புகளான, அசையா சொத்து நிலம் அல்லது கட்டடம், பங்குகள் மற்றும் பத்திரங்கள், நகைகள், தொல்பொருள் சேகரிப்புகள், வரைபடங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் எந்தவொரு கலைப் படைப்பும், அன்பளிப்பு பெறப்பட்ட தேதியில், அவற்றின் நியாயமான சந்தை மதிப்பு (எப்.எம்.வி.,) அடிப்படையில், அவற்றிற்கு வரி விதிக்கப்படும். அசையா சொத்தை (அதாவது, நிலம் அல்லது கட்டடம்) பரிசளித்தால், சொத்தின் முத்திரை வரி மதிப்பு, 50 ஆயிரத்தை தாண்டினால், அத்தகைய சொத்து, போதுமான பரிசீலிப்பு இல்லாமல் பெறப்பட்டால், பெறுபவர் வருமான வரி செலுத்த வேண்டும்.

வரி கொடுப்பவருக்கா? பெறுபவருக்கா?
தற்போதைய சட்டப்படி, வெகுமதி பெறுபவர்கள் தான், வருமானமாக கருதி அதற்கு வரி செலுத்த வேண்டும். இதை வரிச்சட்டப் பிரிவு, 56ன் கீழ் ‘பிற வருமானம்’ என்ற தலைப்பில், வரி விதிக்கக் கூடிய வருமானத்தின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும். அன்பளிப்பு பெறுபவர், தமது ஆண்டு வருமானத்துடன் அன்பளிப்பையும் சேர்த்தால், எந்த வரி வரம்பில் இருக்கிறாரோ, அதற்கான வரியை செலுத்த வேண்டும். உதாரணமாக, விஜய் ஆனந்த் என்பவருக்கு, நிதியாண்டு 2019–-20ல், சம்பளம் மற்றும் வாடகை வருமானமாக, 6 லட்சமும், அன்பளிப்பு வாயிலாக, 3 லட்சமும் பெற்றுள்ளார் என்றால், அவரது மொத்த வரிவிதிப்புக்கு உட்பட்ட வருமானமான, 9 லட்சத்துக்கு, 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

என்.ஆர்.ஐ., அன்பளிப்புகள்
வருமான வரி விதிகளை தவிர, குடியேறிய இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,) அல்லது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் (ஓ.சி.ஐ.,), சம்பந்தப்பட்ட ஏதேனும் எல்லை தாண்டிய பரிசுகள் இருந்தால், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) ஆய்வு செய்யப்பட வேண்டும். கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டிய ஒரு குறிப்பிட்ட அம்சம், வருமான வரிச்சட்டத்தின் கீழ், ‘உறவினர்’ வரையறுக்கப்பட்ட விதத்தில் உள்ள வேறுபாடு, வருமான வரிச் சட்டம் உறவினர்களிடையே பரிசுகளை விலக்குகிறது (மேலே குறிப்பிட்டுள்ளபடி). பெமாவின் கீழ் ‘உறவினர்’ என்ற வார்த்தையின் பொருள் மிகவும் குறுகலானது.

மனைவி, தந்தை, தாய், மகன், மகனின் மனைவி, மகள், மகளின் கணவர், சகோதரர் மற்றும் தனிப்பட்ட சகோதரி உட்பட ‘பெமா’ சட்டத்தின் படி, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்து நெருங்கிய உறவினர்களை தவிர, வெகுமதி வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.பல சமயங்களில், வரி விதிப்புகள் குறித்த நமது அறியாமை, அரசாங்கத்தின் பார்வையில் வரி ஏய்ப்பாக கருதப்படலாம். அபராதம் வரை செல்லலாம். எனவே, எதிலும் கவனம் கொள்வோம்.

–தொழில் சுகம் தொடரும்...

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)