‘கிப்ட்’ பெற்றால் வரி செலுத்த வேண்டுமா?‘கிப்ட்’ பெற்றால் வரி செலுத்த வேண்டுமா? ...  தங்கத்தின் தேவை குறைவாகவே இருக்கும் தங்கத்தின் தேவை குறைவாகவே இருக்கும் ...
ஜூன் மொத்தவிலை பணவீக்கம் , 1.81 சதவீதமாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
22:57

புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், மொத்தவிலை பணவீக்க விகிதம், 1.81 சதவீதமாக குறைந்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருந்த போதும், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை குறைந்ததை அடுத்து, மொத்தவிலை பணவீக்க விகிதம், 1.81 சதவீதமாக குறைந்துள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள்இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த மே மாதத்தில், மொத்தவிலை பணவாட்டம், 3.21 சதவீதமாக இருந்தது. மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இது, 2.20 சதவீதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு மாதமான கடந்த ஜூனில், உணவுப் பொருட்களின் பணவீக்கம், 2.04 சதவீதமாக இருந்தது. இதுவே மே மாதத்தில், 1.13 சதவீதமாக இருந்தது.

எரிபொருள்

எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் பணவாட்டம், 13.60 சதவீதமாகவும், மே மாதத்தில், 19.83 சதவீதமாகவும் உள்ளது. தயாரிப்பு பொருட்கள் பணவீக்கம் மதிப்பீட்டு மாதத்தில், 0.08 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த மே மாதத்தில், 0.42 சதவீத மாக இருந்தது.கடந்த ஏப்ரல் மாதத்தில், மொத்தவிலை பணவீக்கம், 1.57 சதவீதமாக இருந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண வாட்டம் என்றால் என்ன?

inflation பணவீக்கம் deflation பணவாட்டம் சில்லரை விலை பணவீக்கம்கடந்த ஜூன் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 6.09 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததே ஆகும்.இதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 3.18 சதவீதமாக இருந்தது.காய்கறிகள் பிரிவில் பணவீக்கம், 1.86 சதவீதமாகவும்; எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றில் சில்லரை விலை பணவீக்கம், 2.69 சதவீதமாகவும் உள்ளன.

சில்லரை விலை பணவீக்கம்


கிராமங்களில், 6.2 சதவீதமாகவும்; நகரங்களில், 5.91 சதவீதமாகவும் உள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.நாடு முடக்கம் உள்ளிட்ட காரணங்களால், சில்லரை விலை பணவீக்கம் குறித்த முழுமையான அறிக்கை வெளியிடப்படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)