நவராத்திரி பண்டிகை விற்பனை கார்கள் அதிகரிப்பு; டூ – வீலர் சரிவு நவராத்திரி பண்டிகை விற்பனை கார்கள் அதிகரிப்பு; டூ – வீலர் சரிவு ...  டிராக்டர் விற்பனை 12 சதவீதம் அதிகரிக்கும் டிராக்டர் விற்பனை 12 சதவீதம் அதிகரிக்கும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அரசியலுக்கு ஊறுகாய் ஆன ஹார்லி டேவிட்சன் பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2020
21:35

புது­டில்லி :அமெ­ரிக்­கா­வின் புகழ் பெற்ற பைக் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, ஹார்லி டேவிட்­சன், இந்­திய சந்­தை­யில், விற்­பனை மற்­றும் சேவைக்­காக, ஹீரோ மோட்­டோ­கார்ப்
நிறு­வ­னத்­து­டன் ஒப்­பந்­தம் செய்­துள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக வர்த்­த­கத்­தில் சரி­வைக்­கண்டு வந்த ஹார்லி டேவிட்­சன், தன்
வணி­கத்தை, ‘ரீவ­யர்’ எனும் புதிய மாட­லுக்கு மாற்ற இருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தது.தன் வணிக மறு­சீ­ர­மைப்­பின் தொடர்ச்­சி­யாக, இந்­தி­யா­வி­லி­ருந்து வெளி­யே­று­வ­தா­க­வும்
அறி­வித்­தது. மேலும், ஹரி­யா­னா­வில் இருக்­கும் தொழிற்­சா­லையை மூடி­வி­டு­வது என்­றும்; குரு­கி­ரா­மி­லுள்ள விற்­பனை அலு­வ­லக அளவை குறைத்­துக் கொள்ள இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், மிகப்­பெ­ரிய இந்­திய சந்­தையை பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் வித­மாக,
விற்­பனை மற்­றும் சேவை­க­ளுக்­காக, ஹீரோ மோட்­டோ­கார்ப் நிறு­வ­னத்­து­டன் கூட்­டணி சேர்ந்­துள்­ளது.இந்த ஒப்­பந்­தத்­தின் ஒரு பகு­தி­யாக, ஹீரோ மோட்­டோ­கார்ப், இந்­தி­யா­வில் ஹார்லி -டேவிட்­சன் பிராண்ட் பெய­ரில், பிரீ­மி­யம் மோட்­டார் சைக்­கிள்­களை உரு­வாக்கி விற்­பனை செய்­ய­லாம்.

இது­த­விர, ஹார்லி பைக்­கு­க­ளுக்­கான சேவை மற்­றும் உதி­ரி­பா­கங்­களை ஹீரோ
மோட்­டோ­கார்ப் வழங்­கும். மேலும் ஹார்­லி­யின் இதர தயா­ரிப்­பு­க­ளை­யும் விற்­பனை
செய்­யும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.ஹார்­லி­யின் வருகை முதல் அதன் வெளி­யேற்­றம் வரை அனைத்­துமே இந்­தியா – அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளின் அர­சி­ய­லுக்­கான ஊறு­கா­யாக மாறிப்­போ­னதுதுர­தி­ருஷ்­டமே.


கடந்த, 2007ம் ஆண்டு, இந்­திய அரசு, மாசு உமிழ்வு, சோதனை விதி­மு­றை­கள் ஆகி­ய­வற்­றில் தளர்­வு­களை அறி­வித்து, ஹார்லி பைக்­கு­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான வழியை
உரு­வாக்கி தந்­தது.இதற்கு பிரதி உப­கா­ர­மாக, இந்­தி­யா­வி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு, மாம்­பழ ஏற்­று­மதி செய்து கொள்ள அனு­மதி வழங்­கி­யது, அமெ­ரிக்க அரசு.

இதன் பின், 2009ல் நாட்­டில் காலடி எடுத்து வைத்த ஹார்லி, அடுத்த ஆண்­டி­லி­ருந்து
விற்­ப­னையை துவக்­கி­யது.பின், டிரம்ப் அதி­பர் ஆன­தி­லி­ருந்து, ஹார்லி பைக் மீதான
இறக்­கு­மதி வரியை குறைக்க கோரி, கடு­மை­யான அழுத்­தத்தை அவர் இந்­தி­யா­விற்கு தொடர்ச்­சி­யாக கொடுத்து வந்­தார்.

வெளிப்­ப­டை­யா­கவே இந்­தி­யா­வின் நிலைப்­பாடு குறித்து, ‘ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது’ என, தெரி­வித்து வந்­தார்.ஆனால் இந்­தியா, கடை­சி­ வரை டிரம்­பின் கோரிக்­கைக்கு செவி
சாய்க்­க­வில்லை.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)