அடுத்த ஆண்டில் ‘5ஜி’ சேவை: முகேஷ் அம்பானி சூசகம்அடுத்த ஆண்டில் ‘5ஜி’ சேவை: முகேஷ் அம்பானி சூசகம் ...  புதிதாக ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தும் ரிலையன்ஸ் புதிதாக ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தும் ரிலையன்ஸ் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
'கொரோனாவால் மின்விசிறிக்கான தேவை அதிகரித்துள்ளது'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2020
22:10

இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொழில் குழுமங்களுள் ஒன்று, 'சி.கே.பிர்லா' குழுமம். கிட்டத்தட்ட, 17 ஆயிரத்து, 760 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இக்குழுமத்தின் ஓர் அங்கமாக, 'ஓரியன்ட் எலெக்ட்ரிக்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் சந்தையில், குறிப்பாக, மின்விசிறி சந்தையில், முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து, அதன் செயல் துணைத் தலைவர் அதுல் ஜெயின் அளித்த பேட்டி:

நடுத்தர மக்களின் வருமானம் உயர்ந்து வருவதால், அவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள விரும்புகிறார்கள். அதில், அவர்கள் முக்கியமாக கருதுவது, ஏசி.,யை. பெரும்பாலானோர் மின் விசிறியில் இருந்து, ஏசி.,க்கு மாறிவருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


மக்கள் அடுத்த கட்டத்துக்கு செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அதேசமயம், வருமானம் குறைவாக இருக்கும் மக்களும் இருக்கிறார்கள். அதனால், ஏசியை விட, விலை குறைந்த மின்விசிறிக்கான தேவை, அடுத்த பல ஆண்டுகளுக்கு இருக்கும். அடுத்ததாக, தற்போதைய சூழலும் மின்விசிறிக்கான தேவையை அதிகரித்துள்ளது. மின்விசிறி இருக்கும் பட்சத்தில், காற்றின் சுழற்சி அதிகமாக இருக்கும். அதனால் வைரஸ் தாக்குதல், ஒப்பீட்டளவில், ஏசி.,யை விடக் குறைவாக இருக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மேலும், கொரோனாவை முன்னிட்டு, மக்களும் வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்லாததால், வீட்டில் வசதிகளை அதிகரித்து வருகிறார்கள். இதனாலும், மின்விசிறிக்கான தேவை அதிகரித்து உள்ளது.

மின்விசிறிகளுக்கான சந்தையில், 'ஓரியன்ட் எலெக்ட்ரிக்' நிறுவனத்தின் பங்கு என்ன?
குறிப்பாக, தமிழ்நாட்டில் அதன் பங்கு என்ன?

இந்தியாவில், முறைபடுத்தப்பட்ட மின் விசிறியின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட, 7,500 கோடி ரூபாய். இதில் எங்களின் பங்கு, 20 சதவீதம். எங்களுடைய மொத்த வருமானத்தில், தமிழ்நாட்டின் பங்கு, 15 சதவீதமாகஇருக்கிறது. இது, மேலும் உயரும் என நம்புகிறோம். எங்களைப் பொறுத்தவரை, கடந்த மூன்று ஆண்டுகளாகவே, புதிய வடிவமைப்பு மற்றும் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறோம். இதனால், எங்களுடைய சந்தை மேலும் உயர்வதற்கான வாய்ப்புள்ளது

மின்விசிறி விற்பனையில் தென்மாநிலங்களின் பங்கு அதிகம். ஆனால், உற்பத்தி ஆலை பரிதாபாத் மற்றும் கோல்கட்டாவில் மட்டுமே இருக்கின்றன. தென்பகுதியில் ஆலை அமைக்கும் திட்டம் உள்ளதா?


உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். கொரோனா காரணமாக, அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.


கிரிக்கெட் வீரர் தோனியுடனான உங்கள் கூட்டணி தொடருமா?

எங்களுடைய பிராண்டு துாதுவராக, எம்.எஸ் தோனி நிச்சயம் தொடருவார். தமிழ்நாட்டில், தோனியின் பிராண்டு மதிப்பு வேறுவிதமானது. அவர் சென்னை நபராகவே கருதப்படுகிறார். தோனி இடம்பெறும் புதிய விளம்பரத்தை, புத்தாண்டு சமயத்தில் எதிர்பார்க்கலாம்.


ஏற்றுமதியில் உங்கள் பங்கு என்ன? எவ்வளவு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறீர்கள்?


முதல் இடத்தில் இருக்கிறோம். இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் மின்விசிறி, ஓரியன்ட் தான். கிட்டத்தட்ட, 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். எங்களுடைய மொத்த வருமானத்தில், 10 சதவீதம், ஏற்றுமதி மூலமாக கிடைக்கிறது. தொடர்ந்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

'ஆன்லைன்' வர்த்தகத்தில், மின்விசிறிகளின் விற்பனை எப்படி உள்ளது?

'ஆன்லைன்' விற்பனை, ஒட்டுமொத்த மின்விசிறி சந்தையிலும் உயர்ந்திருக்கிறது. இருந்தாலும், அதன் மூலமான வருவாய் என்பது மிக மிகக் குறைவே. மொத்த மின்விசிறி சந்தையில், ஐந்து சதவீதத்துக்கும் குறைவாகவே ஆன்லைன் விற்பனையின் பங்கு இருக்கிறது.இருப்பினும், தற்போது விற்பனையின் போக்கு வேகமாக மாறிவருகிறது. நேற்றைவிட, இன்று அதிக மாற்றம் நடக்கிறது. இன்றைவிட, நாளை அதிக மாற்றம் இருக்கும்.அதனால், அடுத்த ஓர் ஆண்டில், ஆன்லைன் விற்பனை, 10 சதவீதம் அளவுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது.

சுவிட்சை போட்டால் சுழலும்; காற்று வரும் என்பதைத் தாண்டி, மின்விசிறியில் என்ன புதுமையை கொண்டுவந்துவிட முடியும்?


மின்விசிறி துறையில் மேற்கொள்ளப்படும் புதுமைகள் காரணமாக, இந்த துறை புதிய திசையில் பயணிக்கும். 'ஐ.ஓ.டி.,' எனும், இணைய தொடர்புகள் கொண்ட மின் விசிறிகள் வர இருக்கின்றன. அதாவது, இந்த மின்விசிறிகள், வேறு எலெக்ட்ரிக் சாதனங்களுடன் தொடர்பு கொள்ளும். இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய, புதிய வசதிகள் கிடைக்கும். தற்போது, மின்விளக்குடன் உள்ள மின்விசிறிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அடுத்து, குறைந்த மின் செலவில் இயங்கும் மின்விசிறிகள் தொடர்பாக, பல புதுமைகள் வரும். நாங்கள், 'ஐ சீரிஸ்' என்னும் பெயரில், ஏற்கனவே புதுமையான தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளோம். 'ராபிட் ஏர்' எனும் மின் விசிறியை சமீபத்தில் வெளியிட்டோம். இது தென் மாநிலங்களின் சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.

நடமாடும் வேன் மூலமாக, பிராண்டு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கி இருக்கிறீர்களே?

தமிழ்நாட்டில், இரண்டு மாதங்கள் இந்த முயற்சியை மேற்கொள்ள இருக்கிறோம். முக்கியமான, 40 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு இந்த வேன் செல்லும். இதன் மூலம், ஓரியண்ட் நிறுவனத்தின் பிராண்டு குறித்து மக்களிடம் பிரபலபடுத்த முடியும். எங்களுடைய புதுமையான தயாரிப்புகள் குறித்து, அனைத்து தரப்பினருக்கும் தெரிய வைக்க முடியும்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
business news
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
business news
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)