ஜனவரி முதல் 'டிவி'  விலை அதிகரிக்கிறது ஜனவரி முதல் 'டிவி' விலை அதிகரிக்கிறது ... திணறும் தொழில் நிறுவனங்கள்: தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறை திணறும் தொழில் நிறுவனங்கள்: தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறை ...
நலவாரியம் கோரும் குறுந்தொழில் முனைவோர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2020
13:23

கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் ஆட்டோமொபைல், இன்ஜினியரிங், மோட்டார் பம்ப் செட், வெட் கிரைண்டர் போன்றவற்றுக்கு தேவையான உதரிபாகங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கின்றனர்.கொரோனா ஊரடங்கால் முடங்கிப்போயிருந்த குறுந்தொழில் முனைவோர், அரசின் உதவியையும், பல்வேறு கோரிக்கைகளயும் முன்வைத்தனர். தொழில்துறை மீண்டுவருவதற்கு ஏதுவாக வங்கிக் கடன், தவணை செலுத்த கால அவகாசம் போன்ற திட்டங்களை மத்திய அரசு வழங்கியது.கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பணிக்கு செல்ல இயலாத, பதிவுபெற்ற, பதிவு நடப்பில் இருந்த கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நல வாரிய தொழிலாளர்களுக்கு, நிவாரண நிதியாக, 2,000 ரூபாய் அரசு வழங்கியது.

ஆனால், அன்றாட வருமானத்தை எதிர்பார்த்திருக்கும் சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு மாநில அரசின் நிதி சார்ந்த உதவிகள் பேரிடர் காலங்களில் கேள்விக்குறியாக உள்ளது. இக்கட்டான சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவதற்கு, குறுந்தொழில் முனைவோர் நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக நிலவி வருகிறது.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்க (காட்மா) பொது செயலாளர் செல்வராஜ் கூறியதாவது: தமிழகத்தில், 1989ம் ஆண்டு வணிகர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதனால், வணிகர்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன. அதேபோல், குறுந்தொழில் முனைவோர் நலவாரியம் அமைத்து, எங்களது இடர்பாடுகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.இதில், ஆண்டுக்கு, 40 லட்சதுக்கு கீழ் விற்று முதல் உள்ளவர்கள், உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இதன் வாயிலாக, ஆண்டுதோறும் பதிவு செய்தும், புதிப்பிக்கும் தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும். அரசும், குறுந்தொழில்முனைவோர் என, இருதரப்பினரின் நிதி பங்களிப்பும் இருக்கும்.இதன் வாயிலாக, இயற்கை மரணம் அடைவோருக்கு, 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மழை, வெள்ளம், புயல், நெருப்பு மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் சமயத்தில் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

தினமும் வருமானத்தை எதிர்பார்த்திருக்கும் இத்தொழிலாளர்களுக்கு பேரிடர் சமயத்தில் ஆறுதல் தொகையாவது கிடைக்கும்.ஓய்வு பெறுவோர்களுக்கு, இறுதிகாலத்தில் ஓய்வூதியம், காப்பீட்டு திட்டம், குடும்ப வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை என பல்வேறு உதவிகளை, வாரியத்தின் வாயிலாக பெறும் வாய்ப்புள்ளது. எங்களது கோரிக்கைகளையும் நலவாரியம் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல முடியும்.குறுந்தொழில் முனைவோர்களுக்கு நலவாரியம் அமைக்க கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைவைத்து வருகிறோம். பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் சமயத்தில், நல வாரியம் உறுதுணையாக இருக்கும் என்பதால், அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)