பதிவு செய்த நாள்
06 ஜன2021
21:17
வாஷிங்டன்:நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ், 9.6 சதவீதமாக இருக்கும் என, உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், 2021ம் ஆண்டில் வளர்ச்சி, 5.4 சதவீதமாக உயரும் என்றும் கணித்துள்ளது.
இது குறித்து, உலக வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:இந்தியாவில் ஏற்கனவே வளர்ச்சி குறைந்து கொண்டிருந்த நேரத்தில், தொற்று நோயானது பொருளாதாரத்தை தாக்கியது.
நடப்பு நிதியாண்டில், குடும்பத்தினரின் செலவுகள் மற்றும் தனியார் முதலீடு ஆகியவற்றில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, பொருளாதார வளர்ச்சி மைனஸ், 9.6 சதவீதமாக இருக்கும். 2021ல் வளர்ச்சி, 5.4 சதவீதமாக அதிகரிக்கும்.
வேலைவாய்ப்பில், ஐந்தில், நான்கு பங்கு வகிக்கும் முறைசாரா துறையும், தொற்று நோய் காரணமாக, கடுமையான வருமான இழப்புக்கு ஆளாகி இருக்கிறது. இருப்பினும், சமீபத்திய சேவை மற்றும் உற்பத்தி வளர்ச்சி குறித்த தரவுகள், பொருளாதார மீட்சியை அடைந்து
வருவதை காட்டுவதாகவே உள்ளன.நிதித் துறையை பொறுத்தவரை, வாராக் கடன்கள், தொற்று நோய் பரவுவதற்கு முன்பிருந்தே அதிகமாகவே இருக்கிறது.தொற்று நோய்க்கான தடுப்பூசி, நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியிலிருந்து பெரிய அளவில் வினியோகிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், தொற்று நோய் தாக்கத்தில் மீண்டும் எழுச்சி இருக்காது என்றும் எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|